November 13, 2009

வால்நட்சத்திரத்தில் உயிரின மூலக்கூறு கண்டுபிடிப்பு


அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் வால்நட்சத்திரம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட மாதிரியை ஆராய்ந்ததில் அதில் கிளைசின் (glycine) எனும் அமினோ அமிலம் இருந்ததை இனங்கண்டுள்ளனர்.

அமினோ அமிலங்கள் உயிரினங்களை ஆக்கியுள்ள பெரிய இரசாயன மூலக்கூறுகளில் புரத மூலக் கூறுகளை ஆக்குவதில் பங்களிக்கும் ஒரு வகை எளிமையான உயிர் இரசாயனக் கூறுகள் ஆகும்.

மனிதன் போன்ற உயிரினங்களில் மொத்தம் 20 அமினோ அமிலங்கள் உள்ளன. அதில் கிளைசினும் அடங்குகிறது.

வால்நட்சத்திரத்தில் காணப்பட்ட கிளைசினின் கட்டமைப்பில் உள்ள காபன் மூலக்கூறு பூமியில் உள்ள கிளைசின் கொண்டுள்ள காபனை விட கனதியானது என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விண்கற்கலில் ஏலவே இவ்வாறான உயிர் இரசாயன மூலக்கூறுகள் முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவு கூறத்தக்கது.

பூமியில் உயிரின் உற்பத்தி என்பது பூமியோடு வால்நட்சத்திரங்களின் மோதலால் கூட ஏற்பட்டிருக்கலாம் என்பது போன்ற விஞ்ஞான கோட்பாடுகள் முன்னைய காலங்களில் வெளி வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்தக் கண்டுபிடிப்பு தற்போது இருக்கும் பூமியில் நிகழ்ந்த இரசாயன கூர்ப்பின் மூலமான உயிரின் உற்பத்தியை நிராகரிக்கப் போதுமானது அல்ல.. என்றே கணிக்கப்படுகிறது. அதற்கு இன்னும் நிறைய ஆதாரங்களை விஞ்ஞான உலகம் திரட்ட வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review