மனிதர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்களை மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலான திட்டம் ஒன்று சென்னை மருத்துவ கல்லூரியில் துவங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், அறுவை சிகிச்சை செய்து பழகுவதற்கு இந்த சடலங்கள் பெரிதும் பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒருவர் இறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கப்பட்டால்தான் அச்சடலம் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படும். ஆனால் இந்தியாவில் இறுதிச் சடங்குகள் ஒருவர் இறந்த பின்னர் நாட்கணக்கில் நடப்பதால், சடலங்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படாமல் போய்விடுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஆராய்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட சடலங்கள் துண்டுகளாக்கப்படும் என்று நினைத்து உறவினர்கள் அவற்றை கொடுக்க முன்வருவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து சென்னை மருத்துவ கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மோஹனசுந்தரம் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இந்த திட்டம் குறித்து சென்னை மருத்துவ கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மோஹனசுந்தரம் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.