November 13, 2009

மனித வெடிகுண்டை’ கண்டுபிடிக்கும் `டிடெக்டர்


தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகள் உலக அமைதிக்கு எதிரானவர்கள். இவர்களால் ஏற்படும் பெரும் இழப்புகளை நாம் அவ்வப்போது செய்தி களாக படிக்கிறோம். இதுபோன்ற தற்கொலைப் படை யினரை தடுக்க என்ன செய்யலாம் என்று உலக நாடுகள் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் மாணவர்கள் இதற்காக புதிய டிடெக்டரை வடிவமைத்து சாதனை படைத்து உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர் நில்டன் ரென்னோ என்பவர் தலைமையில் இதை வடிவமைத்து உள்ளனர். இந்த டிடெக்டர்கள் ஏற்கனவே உள்ள மேக்னடோ மீட்டர், மெட்டல் டிடெக்டர்கள் போல செயல்படும். இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும், கையடக்க அளவு உடையது. நெகிழும் தன்மை உடைய சென்சாரை கொண்டது. இந்த சென்சார் 2 பவுண்ட் எடையே இருக்கும். வயர்லஸ் முறையில் இயங்கும் இந்த சென்சார், வெடிகுண்டுகளை மேஜை, பூ ஜாடி உள்பட எங்கு மறைத்து வைத்திருந்தாலும் எளிதில் அடையாளம் காட்டிவிடும்.

மேலும் இதை உடலில் பொருத்திக் கொண்டு இருந்தால் தற்கொலைப் படையினர், ஆயுதம் தாங்கிய எதிரிகள் அருகில் நெருங்கினாலோ, நமக்கு அருகில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தாலோ சென்சார் எச்சரிக்கை விடுக்கும். இதனால் நாம் உஷாராகிவிடலாம்.

இந்த நவீன டிடெக்டருக்கு ஐ.ஈ.டி. (இம்ப்ரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டிவைசஸ்) என்று பெயரிட்டு உள்ளனர். சமீபத்தில் நடந்த விமானப்படை கண்காட்சியில் இந்த டிடெக்டர் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டது.

இதை உருவாக்கிய மாணவர்கள் 7 பேர். அவர்கள் 

1.ஸ்டீவ் போலண்ட் 
2.ஆண்ட்ரி சுபைன்

3. பிரைன் கேல்
4.கெவின் குவாங்

5.மைக்கேல் சின்

6.விட்டலி சாட்கோவிஸ்கி

7. அஸ்வின் லாலன்ட்ரன்

இவர்கள் அனைவரும் வெவ்வேறு பாடப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிடெக்டரை ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளின் போர் எல்லையில் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review