November 09, 2009

சந்திரனில் மர்ம துவாரம்

சந்திரனின் மேற்பரப்பில் 200 அடி விட்டமும் 300 அடி ஆழமும் உடைய மர்மமான துவாரமொன்று இருக்கும் இரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான செய்தி சனிக்கிழமை "த சன்' ஊடகத்தில் வெளியிடப்பட்டது.

இந்த துவாரமானது 1,200 அடி அகலமான நிலக்கீழ் எரிமலை கால்வாயுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.பிரித்தானிய சந்திர உபகோள் நிபுணர் எமிலி போல்ட்வின் தலைமையிலான குழுவினரே இந்த அரிய துவாரத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.

ஜப்பானின் "ககுயா' விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வுக்குட்படுத்தியே விஞ்ஞானிகள் சந்திரனிலான இந்த மர்மத் துவாரத்தை இனங்கண்டறிந்துள்ளனர்.

பல பில்லியன் வருடங்களுக்கு முன் மேற்படி பிராந்தியத்தில் ஏற்பட்ட எரிமலை சீற்றமே இத்துவாரத்திற்கு காரணமென கருதப்படுகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review