ஆப்பிள் நிறுவனத்தின் பிரபலமான ஐ-போனில் மென்பொருள் காப்புரிமை மீறல் இருப்பதாக கூறி உலகின் ஆகப் பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான நோகியா வழக்கு தொடந்துள்ளது.
வில்மிங்டன் மாவட்ட நீதிமண்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ள நோகியா, ஐபோனில் வரும் தொலைபேசி அழைப்புகளின் மென்பொருள் மற்றும் கைத்தொலைப்பேசிகளின் இனைப்பு இல்லாத இனைய வசதி போன்றவைகளில் காப்புரிமை மீறல் இருப்பதாக கூறியுள்ளது. இதனை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம், வழக்கு குறித்து ஆராய்ந்து வருவதாகவும், உரிய நேரத்தில் இது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என கூறியுள்ளது.
