தினமும் ஒரு குவளை பீட்ரூட் சாறு குடித்தால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். லண்டன் மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து உள்ளது.நாம் அடிக்கடி சாப்பிடும் கீரையிலும் நைட்ரேட் சத்து உள்ளது. பீட்ரூட் சாற்றை தினமும் குடித்தாலோ அல்லது, நைட்ரேட் சத்து நிறைந்த காய்கறிகளை நிறைய சாப்பிட்டாலோ, உயர் ரத்த அழுத்தம் பெருமளவு குறைவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் அம்ரிதா அலுவாலியா இத்தகவலைத் தெரிவித்ததாக டெய்லி டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.