
அந்த சட்டத்தின் படி ஃபின்லாந்தில் இனி இண்டெர்நெட் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்ந்திருக்கிறது.அதிலும் வழக்கமான இண்டெர்நெட் அல்ல அறிஞரின் தங்கு தடையில்லா அருவிப்பேச்சைப்போல தடையில்லாமல் பாயும் அதிவேக இண்டெர்நெட். அதாவது பிராட்பேண்ட் இணைப்பு.
இதன் மூலம் உலகிலேயே பிராட்பேண்ட் இணைப்பை அடிப்படை உரிமையாக்கிய முதல் தேசம் என்னும் பெருமையை ஃபின்லாந்து பெற்றிருக்கிறது.
இதன்பயனாக் ஜூலை மாதத்திற்குள் ஃபின்லாந்துவாசிகள் பிராட்ப்பேன்ட் இணைப்பை பெறக்கூடும்.அடுத்த சில ஆண்டுகளில் அவர்களுக்கு 150 எம்பி அளவு இணைப்பு கிடைக்ககூடும்.

ஃபின்லாந்து மக்கள் கொடுத்து வைத்தவர்கள் அல்லவா?
இண்டெர்நெட் இணைப்பு என்ன அத்தனை முக்கியமா என்று சிலருக்கு தோன்றலாம்.ஆனால் இண்டெர்நெட் சமுக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தொழில்நுட்பம் என்பதை மறந்து விடக்கூடாது.இண்டெர்நெட் எத்தனையோ புதிய வாசல்களுக்கு திரந்துவிட்டுள்ளது.