November 09, 2009

ஸ்பைஸ் நிறுவனத்தின் மல்ட்டிசிம் போன்

எம் 5252 என்ற பெயரில் ஸ்பைஸ் நிறுவனம் தன்னுடைய மல்ட்டி–சிம் மொபைல் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலையில் போன் வாங்க விரும்பும் ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்களுக்கான போன் இது.

ஒரு கீயில் இயங்கும் எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ, போனை அசைத்து விளையாடக்கூடிய கேம்ஸ், அதே போல இயக்கக் கூடிய மியூசிக் பைல்கள், வேகமான தேடுதல் வசதி, டூயல் ஸ்பீக்கர்கள், மெமரியினை 8 ஜிபி வரை நீட்டிக்கக்கூடிய வசதி,10 நாட்களுக்குத் தாங்கக் கூடிய பேட்டரி, புளுடூத் மற்றும் வசதி எனப் பல வகை வசதிகளுடன் இந்த மல்ட்டி–சிம் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இரண்டு சிம் பயன்படுத்தக் கூடிய போன்கள் மார்க்கட்டில் விலை கூடியதாக அல்லது குறைவான வசதிகள் கொண்டதாக உள்ளன.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த போனை வடிவமைத்து வழங்குவதாக ஸ்பைஸ் நிறுவனத்தின் தலைவர் அஹூஜா தெரிவித்தார்.

மல்ட்டி சிம் போன் வரிசையில் இந்த போன் அதன் வசதிகளுக்காகவும் விலைக்காகவும் தனி இடம் பெறும் என்றும் கூறினார். இதன் குறியீட்டு விலை ரூ. 3,499.


lankasri.com

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review