இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித் துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சின் புதிய பரிணாமம்போல அமைந்துவிட்டது. இதையடுத்து நிலவை மையமாக வைத்து பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அதாவது நிலவு ஒரு விருந்தினர் மாளிகைபோல செயல்பட இருக்கிறது.
முதல்கட்டமாக நிலவை ஒரு மினி ஆராய்ச்சி கூடம்போல பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. விண்வெளி ஓடங்களில் எரிபொருளாக பயன்படுவது ஹைட்ரஜன்தான். எனவே விண்கலங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் இடமாக நிலவை பயன்படுத்த திட்ட மிடப்பட்டு இருக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சி பயணத்தில் எரிபொருள் தீர்ந்துவிடும்போது நிலவில் இறங்கி எரிபொருளை நிரப்பிக் கொள்ளப் போகிறார்கள். இதனால் மற்ற கிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சியையும் வேகமாகச் செயல்படுத்த முடியும்.
மேலும் ஏற்கனவே நடந்த ஆய்வின்படி குறிப்பிட்ட ரசாயனத்தை நிலவின் பாறைகள் மீது தெளிப்பதால் ஆக்சிஜன் வெளிப்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர். தற்போது நிலவில் ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதால் இதே முறையில் கூடுதலாக ஆக்சிஜனை வெளிப்படச் செய்து செயற்கை முறையில் நீர் உற்பத்தியை பெருக்கவும் முடியும். இதன் மூலம் உயிரினங்களின் தோற்றம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மேலும்

இது குறித்து, ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த லாரி டெய்லர் கூறும்போது, “நிலவில் காணப்படும் சாதகமான சூழல் சில ஆயிரம் ஆண்டுகளில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய நிலைமையை அடையும். அங்குள்ள ஹைட்ரஜன், விண்கலங்களின் எரிபொருள் தேவையை 85 சதவீதம் பூர்த்தி செய்யும்” என்றார்.