November 09, 2009

இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள்

அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முத்திரை பதித்து வரும் இன்றைய இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல்தான்! நாம் இளமையாக இருக்கிறோம்… உடல் நலத்தோடு இருக்கிறோம்… இதற்கு மேல் ஒரு பெண்ணாகவும் இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தாலும், இதயத்தாக்குதல் என்பது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு சிக்கல் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவ ஆய்வாளர்கள்.

இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு! பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய நோயின் கூறுபாடுகள் இருபது வயதிலேயே தோன்றத் தொடங்கி விடுகிறது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. அதற்கான காரணிகளைம் கூறுகிறது. இறப்பில் முடிகின்ற இதய நோயாளிகளில் பாதி பேர் பெண்கள்! இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக் கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிக மாக உள்ளது. பத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் மார்பக புற்று ஏற்பட வாயப்பிருக்கிறது. ஆனால் முன்றில் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லா வகையான புற்று நோய்களிலும் இறக்கும் பெண்களை போல் இரு மடங்கு பெண்கள் இதயத் தாக்குத லினால் இறக்கின்றனர்.

ஏற்கனவே ஏ.எச்.ஏ எனபடும் அமெரிக்கன் இதய சங்கம் (அமெரிக்கன் ஹார்ட் அசோசி யேஷன்) இது குறித்து எச்சரித்துள்ளது. அத்துடன் இதற்காகவே மகளிர் இதய நோய் செயற்குழு ஒன்றினையும் அமைத் துள்ளது.

நடைமுறையில் இதய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி முழுவதும் ஆண்களையே சுற்றிச் சுழல்கிறது. இதன் விளைவாக இதய நோயினால் பெண்களுக்கு நேருகின்ற இன்னல்கள் இருட்டடிப்பு செய்யபட்டு விட்டன. பெண்களுக்கு ஏற்படுகின்ற இதயக் கோளாறுகளில் அக்கறை காட்டபடாதது எதனால் என்ற கேள்வியும் எழுகிறது.

இதயத் தமனிக் கோளாறுகள் ஆண்களை விட வயது முதிர்ந்த நிலையிலேயே பெண்களுக்கு ஏற்படுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார், அமெரிக்க குடும்ப மருத்துவர்கள் அகாடமியைச் சேர்ந்த டாக்டர் டொனால்டு கீத்.

பெண்களின் உடலில் சுரக்கின்ற எஸ்ட்ரோஜன் ஹார்மோன், நல்ல கொலஸ்ட்ராலுடன் உற்பத்தியை உயர்த்தி உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது. மாதவிடாய் நிற்கும் வேளையில் எஸ்ட்ரோஜன் சுரபில் ஏற்படுகின்ற வீழ்ச்சி அவர்களை இதய நோய்களுக்கு இலக்காக்கி விடுகிறது என்றும் இவர் கூறுகிறார். அறுபத்தைந்து வயதாகின்றபோது இதயத் தாக்கு ஏற்படும் வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவில்தான் இருக்கிறது.

அறுபத்தைந்து வயது தானே ஆகிறது? அதற்குள் என்ன? என்று கவனமின்மையாக இருக்கக் கூடாது.

இப்போதிலிருந்தே சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இதயம் தொடர்புடைய இன்னல்கள் பலவற்றைக் குறைத்து விடலாம்.

கொழுபையும், கொலஸ்ட்ராலைம் முடிந்த அளவுக்கு உணவிலிருந்து நீக்கி விடுவது நல்லது. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைம், கொலஸ்ட்ரால் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

வீட்டிலும், அலுவலகம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மன இறுக்கமும், பதட்டமும் இன்றி இயல்பாக வேலை பார்பது முக்கியம். எளிமையான உடற்பயிற்சிகள், நடை பயிற்சிகள் செய்து வாருங்கள். உடற்பயிற்சி செய்து உடலை நல்ல செயல்பாடுகளோடு வைத்திருபவர்கள் இளமைடன் மற்றவர்களை விட அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எவராலும் எபோதும் இளமையாக இருக்க முடியாது. ஆயினும் தேவையற்ற மெனக் கெடல்களை செய்யாமல் தவிர்த்துவிடுவது நல்லது.

பெண்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகளில் முன்றில் ஒரு பங்கு அதிக எடை கொண்ட பெண்களுக்கே ஏற்படுகிறது. ஐந்தாறு கிலோ எடை கூடுதலாக இருந்தாலும் அதற்கான தொல்லையை அது உண்டாக்கி விடுகிறது. பாஸ்டனிலுள்ள பெண்கள் மருத் துவமனைம், மெட்ரோபாலிடன் இன்ஷுரன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், சராசரி எடையை விட அதிகமான எடை கொடிருந்த பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்புகள் மற்றவர்களைவிட 80 சதவீதம் அதிகமாக இருந்தது அறியபட்டது.

சி.டி.சி. எனபடும் நோய் தடுப்பு மையம் இளம்பெண்களுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்களும், பெண்களும் தங்களது 25 வயது தொடங்கி 35 வயது வரையிலான கால இடைவெளியில்தான் அதிக அளவில் சதை போடுகிறார்கள். அதிலும் குறிபாக, பெண்களின் எடை அதிகரிப்பதற்கான வாயப்பு, ஆண்களை விட இருமடங்கு அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review