November 09, 2009

பச்சை தேயிலை மற்றும் காளான் புற்று நோயை குறைக்கிறது

பச்சை தேயிலை மற்றும் காளான் போன்றவை மார்பக புற்று நோயை ஏற்படுத்தும் வாய்ப்பை குறைப்பதாக சர்வதேச புற்றுநோய்க்கான சஞ்சிகை செய்திவெளியிட்டுள்ளது. பெண்கள் பச்சை தேயிலை மற்றும் காளான் போன்றவற்றை அதிகமாக உட்கொண்டார் இந்த ஆபத்திலிருந்து தப்பிகொள்ளலாம் என தெரிவிக்கபப்டுகிறது.

இவ்விடயம் 20-87 வயதுக்குட்பட்ட மார்பக புற்றுநோய்க்குள்ளான 1009 பெண்களை உள்ளடக்கிய 2000 சீன பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பச்சை தேயிலை மற்றும் காலான் போன்றவை மார்பக புற்றுநோயை குறைக்குமா?

நாலாந்தம் 10 கிராம் அளவான காளானை உட்கொண்டால் மார்பக புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு குறைவடையும் மேலும் பச்சை தேயிலை பாணத்தை நாளாந்தம் உட்கொள்ளும் சமயத்தில் பெண்களிடையே மார்பக புற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

அதேவேளை நாள்தோறும் 4 கிராம் காளான் உண்பவர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 50 சதவீதமாகும்.மேலும் பெண்களை பச்சை தேயிலை பயன்படுத்துவதன் மூலமும் புற்று நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.பச்சைத் தேயிலை மற்றும் களான் பயன்படுத்தும் பெண்களிற்கு மார்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியில் 11 சதவீதமாகும். ஆய்விற்காக பயன்படுத்தப்பட்ட பச்சை தேயிலை என்பது கபினே அடங்கிய இளம் தேயிலை இலைகளாகும்

ஆனால் சீன மக்கள் இன்னும் புற்றுநோயை தவிக்க பல உணவுக்கட்டுபாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.இதனால் மேற்கேத்திய நாடுகளையும் பார்க்க புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் அளவு 4-5 சதவீதமான அளவு குறைந்துள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review