November 30, 2009

டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு டேட்டா ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தில் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதன்படி நாம் கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து எடுத்துச் செல்ல முடியும். இதனை holographic storage technology என இந்நிறுவனம் அழைக்கிறது. இதன் மூலம் 100 டிவிடிக்களில் உள்ள டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் பதிய முடியும். இந்தக் கணக்கின் படி ஒரு டிஸ்க்கில் 470 ஜிபி அளவில் டேட்டாவினை எழுத முடியும். இது ஏறத்தாழ அரை டெரா பைட் ஆகும். இந்த ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்க இருக்கும் இந்த அரிய தொழில் நுட்பம் இன்னும் பல சோதனைகளுக்குட் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து சோதனைகளையும் தாண்டிய பின்னரே இதற்கு அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படும். ஹோலோகிராபிக் ஸ்டோரேஜ்...

November 29, 2009

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை

இணையத்தின் பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை வெளியிட்டு உள்ளது. கூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன? அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம். கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்? நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம். முடிந்தவுடன்...

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி

தினமும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வியாதிகளால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது. கடின உடற்பயிற்சியானது அனைத்து வகைப் புற்று நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தினாலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இரப்பை புற்று நோய்க்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. இதற்காக தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. அதாவது, மெதுவாக ஓடுதல், நீச்சல் பயிற்சி, படகு ஓட்டுதல் போன்றவற்றையும் சேர்த்து உங்கள் உடற்பயிற்சி அமைய வேண்டும். விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளிலும் அரை மணி நேரம் ஈடுபடலாம். எதுவாக இருந்தாலும் ஓரிரு நாட்கள் செய்துவிட்டு பின்னர் விட்டுவிடுவதில் பயனில்லை. தொடர்ந்து செய்வதால் பலனுள்ளது என்கிறது மருத்துவ ஆய்வுகள...

November 28, 2009

சர்வதேச விண்வெளி மையத்துக்கு புதிய சாதனங்கள் பொருத்தப்பட்டன

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் தாம் கொண்டு சென்ற புதிய சாதனங்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் சனிக்கிழமை பொருத்தினர். அதற்காக அவர்கள் விண்ணில் நடந்தனர். சில பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டனர். இந்தப் பயணத்தின்போது மொத்தம் 3 தடவைகள் விண்ணில் நடை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டு 2 ஆவது நடையில் இந்தப் பணிகளை முடித்தனர். அடுத்த நடைப்பயணத்தை நேற்று திங்கட்கிழமை முடித்தனர். சாதனங்களைப் பொருத்தும் பணியில் விண்வெளி வீரர்கள் மைக் போர்மேன், ராண்டி பிரெஸ்னிக் ஆகியோர் ஈடுபட்டனர். இவர்களில் பிரெஸ்னிக் அப்பாவாகும் மகிழ்ச்சியில் தனக்கு இட்ட பணியில் முதலில் ஆர்வம் காட்டவில்லை. அவரது மனைவிக்கு எந்த நேரத்திலும் இரண்டாவது குழந்தை பிறக்கலாம் என்ற நிலை இருந்தது. எனினும், ஞாயிற்றுக்கிழமை அவரது மனைவி ரெபேக்கா, ஹுஸ்டனில் இரண்டாவது குழந்தையைப் பிரசவித்தார்....

November 27, 2009

“கேன்சர்” நோயை பரப்பும் “மார்பின்” மாத்திரை: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கேன்சர் நோயினால் (புற்று நோய்) பாதித்தவர்களுக்கு வலியை போக்குவதற்காக “மார்பின்” மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மாத்திரை புற்று நோயை மேலும் பரவ செய்யும் தன்மை உடையது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ரத்தநாளங்களை பலப்படுத்துவதற்கு பதிலாக மற்ற செல்களிலும் புற்று நோயை பரவ செய்வது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. பாஸ்டனில் உள்ள அமெரிக்க புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தில் முன்னணி ஆராய்ச்சியாளர் பேட்ரிக் சிங்கிள்டன் தெரிவித்தார். மார்பினுக்கு பதிலாக மெத்தில் நால்ட்ரோசன் அல்லது எம்.என்.டி.எக்ஸ். மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினா...

2014இல் புதிய அணு உலை அறிமுகம்: இரஷ்யா

2014ஆம் ஆண்டிற்குள் அடுத்தத் தலைமுறை அணு உலையையும், புதிய வகை அணு எரி பொருளையும் இரஷ்யா அறிமுகப்படுத்தும் என்று அந்நாட்டு அதிபர் திமித்ரி மெட்விடேவ் கூறியுள்ளார். இரஷ்ய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரஷ்யா நாட்டின் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்துப் பேசிய இரஷ்ய அதிபர் திமித்ரி மெட்விடேவ், “தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் அணு சக்தி பொறியியல் மேம்பாட்டைத் தனியாக மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டத்தின் கீழ் அடுத்த தலைமுறை அணு உலையும், புதிய வகை அணு எரிபொருளும் உருவாக்கப்படும். 2014ஆம் ஆண்டிற்குள் உருவாக்கப்படும் இவ்விரண்டு தொழில்நுட்பங்களுக்கு உள்நாட்டிலும் அயல் நாடுகளிலும் பெரிதும் வரவேற்பு இருக்கும்” என்று கூறியுள்ளார். புதிய அணு உலை தொழில்நுட்பத்தை உருவாக்கினாலும், இந்தியா உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகள் சேர்ந்து...

November 26, 2009

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்

ஆண், பெண் என்ற பிரிவெல்லாம் இப்போது போயே போச்சு! ஆணுக்குரிய அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். ஆனால் பெண்ணுக்குரிய அனைத்து குணங்களையும் ஆண்கள் பெற்றிருக்கின்றனரா என்றால் அதுதான் இல்லை என்கிறது ஒரு உளவியல் ஆய்வு. எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிவிடும் பக்குவமும், திறமையும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. யாரையும் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குணங்களை ஓரளவு புரிந்து விடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரமும் பெண்களிடம் இருந்தால் இன்னும் சிறப்பு. அழகும், அறிவும், அடுத்தவர்களை புரிந்து கொள்ளும் குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு எப்போதுமே முன்னேற்றம் என்பது தொட்டு விடும் தூரம்தான். அப்படி வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறும் ஸ்மார்ட் பெண்களின் சிறப்புக்...

நூறாண்டுகள் வாழ வைக்கும் ஜீன்

மனித உடம்பில் உள்ள ஜீன்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதில் 100 ஆண்டு மனிதனை வாழ வைக்கும் ஜீன் (பரம்பரையாக வரும் மரபு பண்புக்கு காரணமான உயிர்மம்) ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். நமது உடலில் உள்ள சில குறிப்பிட்ட செல்கள் உயிரற்றுப் போவதை தடுத்தால் முதுமையை தள்ளிப்போட முடியும் என்பது இந்த கண்டுபிடிப்பின் முக்கிய அம்சமாகும். எதிர்காலத்தில் மனிதனை 150 ஆண்டுகள் வரை வாழ வைக்க ஆய்வுகள் நடந்து வருகின்...

November 25, 2009

வாடிக்கையாளர்கள் வரவேற்பு: முகம் பார்த்து பேசும் செல்போனுக்கு “கிராக்கி”

3ஜி என்று அழைக்கக் கூடிய 3-வது தலைமுறை தகவல் தொழில் நுட்ப வசதியை சென்னை டெலிபோன்ஸ் கடந்த 3 நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. செல்போன் பேசுவரின் முகத்தை மறுமுனையில் உள்ளவர் வீடியோ படம் போல பார்க்கும் வசதி, இண்டர்நெட், சினிமா படம் பார்த்தல், டி.வி., சேனல்கள் பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதன்மூலம் கிடைக்கின்றன. சென்னை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இந்த தொழில் நுட்பம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசதியை பெற தகுதி யுடைய செல்போன்கள் வைத்திருப்பவர்கள் திட்டத்தில் சேர விரும்பினால் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று பெறலாம். இதற்குரிய சிம்கார்டு விலை ரூ.59 ஆகும். ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் களாக இருப்பவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் 3ஜி தொழில்...

சுயநினைவுடன் இருக்கும் 23 வருட “கோமா” மனிதர்: டாக்டர்கள் வியப்பு

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் ரோம்கோபன் (வயது 46). கடந்த 1983-ம் ஆண்டு இவரது கார் விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அதை ஓட்டிச்சென்ற கோபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே, அவர் “கோமா” நிலையை அடைந்தார். உடனே அவரை லண்டனில் உள்ள லியெஜ் நரம்பியல் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ஸ்டீவன் லாரீஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து நடைபெற்றதில் இருந்து 23 வருடங்களாக “கோமா” நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு டாக்டர்கள் இவரது உடல் நிலையை “ஸ்கேன்” செய்து பார்த்தனர். அப்போதுதான் இவர் “கோமா” நிலையில் இருந்தாலும் சுயநினைவுடன் இருப்பது தெரியவந்தது. விபத்து நடந்ததால் இவரது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவரது மூளையில் பாதிப்பு எதுவும் இல்லை....

November 24, 2009

உடலில் 6005 துளைகள்

பிரேசிலை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எலைன் டேவிட்ஸன் என்ற பெண் உடலில் 6005 துளைகள் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார். 2000 ஆம் ஆண்டு உடலில் 462 துளைகள் போட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த எலைன் டேவிட்ஸன், தனது சாதனையை தற்பொழுது தானே முறியடித்துள்ளார். இதில் 1500 துளைகள் உடலின் மறைவான இடங்களில் போடப்பட்டுள்ள...

வீடியோ தேடியந்திரம்

வீடியோ கோப்புகளை கண்டு ரசிக்க யூடியூபும் இருக்கிறது. யூடியூப் போல மேலும் பல தளங்களும் உள்ளன.இவற்றில் சாமானியர்கள் சமர்பித்த வீடியோ காட்சிகள் முதல் திரைப்பட காட்சிகள் வரை லடசக்கணக்கான கோப்புகளை காண முடியும். ஆனால நீங்கள் தேடும் அல்லது மிகவும் விரும்பும் வீடியோ கோப்புகளை தேடுவது கடினமானதாகவே இருக்கும். இந்த குறையை போக்கும் வகையில் வீடியோ கோப்புகளை தேட உதவும் புதிய தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது. ஒவாக்ஸ் என்னும் இந்த தேடியந்திரத்தில் கூகுலில் தகவல்களை தேடுவது போலவே வீடியோ காட்சிகளையும் எளிதாக தேடலாம். தேடும் வசதி இருப்பதோடு தளத்தில் தேட்படுவதில் புகழ்பெற்று விளங்கும் வீடியோ கோப்புகளையும் குறிச்சொற்களின் அடிப்படையில் பார்த்து ரசிக்கலாம். சுட்டி....

November 23, 2009

வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேறும் விண்டோஸ் 7

மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில் இதனைத் தன் சிஸ்டம் கூட்டாளிகளான எச்.சி.எல்., எச்.பி. மற்றும் ஏசர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார். புதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு...

நியூயார்க், லண்டனுக்கு ஆபத்து: கடல் நீர் மட்டம் 6 மீட்டர் உயரும்; புதிய ஆய்வில் தகவல்

பிரிட்டீஸ் அண்டார்டிக் சர்வே நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற் கொண்டுள்ளது. லூயிஸ் சிமி குழுவினர் இந்த ஆய்வை நடத்தினார். காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிக்கும் போது தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. காற்றில் கார்பன்டை ஆக்சைடின் அளவு உயரும்போது அண்டார்டிகா கடல் பகுதியில் 6 டிகிரி அளவுக்கு கூடுதலாக பனிக்கட்டிகள் உருகுவது தெரிய வந்தது. இதனால் கடல் நீரின் மட்டம் 6 மீட்டர் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வாறு கடல் நீரின் அளவு உயரும்போது கடற்கரை நகரங்களாக லண்டன், நியூயார்க், மற்றும் சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் ஆபத்து உள்ளது. கடந்த 1 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கார்பன்டை ஆக்சை டின் அளவு உயர்ந்தபோது 6 டிகிரி அளவுக்கு கூடுதலாக பனிக்கட்டிகள் உருகின. இதனால் கடல் நீரின்...

மது குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் வராது” ஆய்வில் புதிய தகவல்

தினமும் மது குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் பாதிப்பு மிக குறைவு என ஸ்பெயின் நாட்டின் ஆய்வு தெரிவிக்கிறது. 29 வயது முதல் 69 வயது வரை உள்ள 41 ஆயிரம் ஆண் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 609 பேருக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்பட்டது. இவர்களில் 481 பேர் ஆண்கள், 128 பேர் பெண்கள். மது குடிக்காதவர்களை விட அதிக அளவில் மது குடித்த ஆண்களுக்கு இதய நோய் பெருமளவில் ஏற்பட வில்லை. 285 மில்லி பீரில் 4.9 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. அதே நேரத்தில் 180 மில்லி ஒயினில் 12 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. இவற்றை குடிக்கும் பெண்கள் இதய நோய்களால் பாதிப்படைவதில்லை. பீர் மற்றும் ஒயின் தயாரிப்பில் ஸ்பெயின் நாடு உலகிலேயே 3-வது இடத்தில் உள்ளது. இந்த வர்த்தகத்தின் மூலம் அதிக அளவில் லாபம் சம்பாதிப்பதில் உலகில் 6-வது இடத்தில்...

November 22, 2009

கஞ்சாவை காட்டும் ஐபோன்

கஞ்சாவுக்கும் ஐபோனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் மரியூனாவிற்கும் ஐபோனுக்கும் தொடர்பிருக்கிறது. மரியூனாவை கண்டுபிடிக்க உதவும் செயலி ஐபோனுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை குறிக்கவே இந்த தலைப்பு. கஞ்சாவும் மரியூனாவும் ஒன்றல்ல.அடிப்படையில் இரண்டுமே போதை தரவல்லது என்றாலும் மரியூனாவுக்கு மருத்துவ குணம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர். ஆனால் ம‌ரியூனாவை தேட உதவும் செயலி என்பதைவிட கஞ்சாவை தேடும் செயலி என்றால் தான் நம்மவர்களுக்கு சட்டென்று புரியும். ஐபோன் சார்ந்த செயலிகள் தொடர்ந்து பரபர‌ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த செயலி ஐபோன் சார்ந்த அற்புதங்களை அழகாகவே உணர்த்துகிறது.எதற்கெடுத்தலும் ஒரு ஐபோன் செயலி இருக்கும் என்னும் கருத்தை வலுப்படுத்தும் வகையில் போதை பொருளாக கருதப்படும் மரியூனா கைடைக்கும்...

AVI கோப்புகளை MP4 கோப்புகளாக மாற்ற

கணினியில் நாம் அடிக்கடி பார்க்கும் வீடியோ கோப்புகளின் வடிவமானது AVI என அமைந்திருக்கும். இந்த வடிவானது, iPhone, iPod, Zune, PSP, PS3 போன்ற கருவிகளுடன் ஒத்திசைவு (compatibility) இல்லாதது. MP4 வடிவங்களையே மேற்கண்ட கருவிகள் ஏற்றுக்கொள்கின்றன.AVI கோப்புகளை MP4 ஆக மாற்றுவதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Convert AVI to MP4. இதன் மூலம் WMA, MOV, MPEG1 / MPEG2, DivX ஆகிய பல்வேறு விதமான கோப்பு வடிவங்களை MP4 ஆக மாற்ற முடியும். மிகஎளிமையான முகப்பைக் கொண்ட மென்பொருள் இது. இது Windows XP மற்றும் Windows Vista இந்த இயங்குதளங்களில் இயங்கும். தரவிறக்கச் சுட்டி...

November 21, 2009

உங்களுடைய மீடியாபிளேயரை இணைய உலாவியிலிருந்தே இயக்குவது எப்படி?

நீங்கள் இணையத்தில் அதிகம் வலம் வருபவரா? அதுவும் பாடல்களை ஒலிக்க விட்டே இணையத்தில் இருப்பவரா? மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் “ஆம்” என்றால் உங்களுக்காகவே இருக்கிறது ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Foxy tunes. இது Internet Explorer, Mozilla Firefox உடன் வேலைசெய்கிறது. இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் உங்களது மீடியாபிளேயரை இணைய உலாவில் இருந்துகொண்டே இயக்கலாம். உங்களிடம் இருக்கும் பாடல்களை உங்களது மீடியா பிளேயரில் பாடவிடவும், பின்னர் மீடியா பிளேயரை மினிமைஸ் செய்துவிட்டு இணைய உலாவியில் இருக்கும் Foxy Tunes மூலமாக இயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில் உபயோகித்தால் யூ‍‍-டியூப் தளத்தின் playlist கூட கையாள‌முடியும் என்பது கூடுதல் சிறப்பு. பதிவிறக்கம் செய்ய‌...

சமூக தளங்களை தாக்கி வரும் கூப்பேஸ் வைரஸ்

பேஸ்புக், ட்விட்டர், மைஸ்பேஸ், பெபூ, ப்ரண்ட்ஸ்டர் மற்றும் ஹாய் 5 போன்ற சமுதாய இணைய தள நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப் பேஸ் (Koobface) வைரஸ் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள். இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் மெசேஜ் ஒன்று உங்களுக்கு இமெயில் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட வீடியோ ஒன்றை டவுண்லோட் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். வீடியோவிற்கான லிங்க்கைக் கிளிக் செய்தால் யு–ட்யூப் போல தளம் ஒன்று திறக்கப்படும். அங்கே ஒரு வீடியோ காட்சி ஒன்று உள்ளதென்றும், அதனைக் காண சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை இறக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதற்கான லிங்க் கொடுக்கப்படும். இதற்கு யெஸ் என அழுத்தினால், உங்கள் கம்ப்யூட்டரில் உங்களுடைய...

November 20, 2009

பருத்தொல்லைக்கு இதோ விடுதலை!

வாரம் ஒரு முறை முல்தானிமட்டி, எலுமிச்சை சாறு, கடலைமாவு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் கலந்த பேக்கை தொடர்ந்து உபயோகித்து வந்தால் . முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையை முல்தானிமட்டி சுத்தமா எடுத்துடும். உங்களுக்கு பருக்கள் முற்றிலும் போன பிறகு பேக் போடுவதை 15 நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ என்று மாற்றிக் கொள்ளுங்கள். இது நிச்சயம் நல்ல பலன் தரும். பருத் தொல்லைக்கும் இது சரியான தீர...

உணவு அருந்திய பின்னர் பழங்கள் சாப்பிடுவது நல்லதல்ல

 சரியானவற்றை சரியான நேரத்தில் சாப்பிடுவது தான் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பழங்களை அனைவருமே உணவு அருந்திய பின்பு சாப்பிடுவது மிகவும் தவறு சாப்பிடுவதற்கு முன்பு தான் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலில் நச்சுக்கள் சேராமல் தடுக்க முடியும். இரவில் தூங்குவதற்கு முன், பாலில் சிறிது மஞ்சள் தூள், சிறிது மிளகுத்தூள் போட்டு அருந்துங்கள். தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு தொந்தரவுகள் நெருங்காதது குரல் இனிமையாக இருக்கும். தினமும் இரண்டு கைப்பிடி அளவு கொள்ளை ஊறவைத்து, ஒரு துணியில் கட்டி முளைக்க வைத்து, அத்துடன் கொஞ்சம் பால் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதைப்பிழிந்து பால் எடுத்துக் குடித்து வர மூட்டுவலி, சளித்தொந்தரவு நீங்கும். ஊள் சதை குரையும். வெள்ளைபூண்டை நெயில் வறுத்து சாப்பிடவும். குண்டு உடம்புக்காரர்கள்...

November 19, 2009

நீங்கள் பளபளப்பாக மிளிர வேண்டுமா?

 சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும். கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு மேசைக்கரண்டி பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.. ஒலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். . பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும். 2 கரண்டி முள்ளங்கி சாற்றுடன் 2 கரண்டி மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.. இளநீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி...

சர்வதேச ஆண்கள் தினம்

சர்வதேச ஆண்கள் தினம் (IMD - International_Men's_Day) பொதுவாக ஆண்டு தோறும் நவம்பர் (புரட்டாதித் திங்கள்) 19ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999 இல் பிரேரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதி இது கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டுக்கான ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்.. உண்மையான ஆம்பிளையளுக்கு உரித்தாகட்டும். ஆண்கள் மீதான பாரபட்சங்களில் சில. 1. அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளுக்கு பெண்களைப் போன்று ஆண்கள் கிரமமாக உட்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக பெண்களில் பல வகை நோய்களைத் தடுக்கவும் கட்டாய ஸ்கிறீனிங் (screening) செயற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. இதனால் புரஸ்ரேட் புற்றுநோய் போன்ற...

November 18, 2009

மனித மூளை

மனித மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை பெருமூளை அரைக்கோளங்கள் (cerebral hemispheres) என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி. பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி மூளைத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி சிறுமூளை (cerebellum) என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிற...

தாவரம்

தாவரம் (Plant) அல்லது நிலைத்திணை என்பது மரம் செடி, கொடி போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தமரங்கள், செடிகள், கொடிகள், போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் ( ferns), பாசி (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), பூஞ்சணங்கள் போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள். // பயன்கள்இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள். சுமார் 350,000 வகையான...

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் என்பது, கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துரு ஆகும். எனினும் ஒரு இறுக்கமான வரைவிலக்கணம் இதற்குக் கொடுக்க முடியாது. தொழில்நுட்பம்; பொறிகள், வன்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பரந்த முறைமைகள், அமைப்பு முறைகள், நுட்பங்கள் என்பவற்றையும் குறிக்கக்கூடும். இச் சொல்லைப் பொதுப் பொருளில் ஆளுவதுடன், குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, கட்டுமானத் தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம் போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தவையாகும்....

November 17, 2009

ஓபன் ஹார்ட் சர்ஜரி – பைபாஸ் சர்ஜரி: என்ன வித்தியாசம்?

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம். இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். 1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை (இஃOகுஉஈ ஏஉஅகீகூ) இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரிவடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன. 1956ம் வருடம் அமெரிக்க பேராசிரியர் கிப்பன் என்ற இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். நீண்ட ஆராய்ச்சிக்குப்...

இன்னும் ஒரு வாரத்தில் கூகிள் குரோம் ஓஎஸ்

கூகிள் குரோம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகலாம் என்று டெக்க்ரன்ச் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. கூகிள் நிறுவனம் குரோம் ஒஎஸ் எனும் இயங்குதளம் தயாரிப்பில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த செய்தி. அது இன்னும் ஒரு வாரத்தில் தரவிறக்கத்திற்கு கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குரோம் ஓஎஸ் அடிப்படையில் லினக்ஸ் கொண்டு உருவாக்கப்படுகிறது. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் போன்று இது பெரும்பாலான ஹர்ட்வேர் களை ஆதரிக்கும் படியான டிவைஸ் டிரைவர்களை கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறி. இதன் ஆரம்ப பதிப்பு நெட்புக் கணினிகளை ஆதரிக்கும் படி வெளியிடப்படும். ஏசர், அசுஸ், லெனோவா போன்ற நிறவனங்களின் நெட்புக் கணினிகளில் தடை இன்றி வேலை செய்யும் என்று எதிர் பார்க்கலாம். காலப் போக்கில் அனைத்து கணினி ஹர்ட்வர்களிலும் தடை இன்றி இயங்கும்படி வெளி வரும். குரோம் ஓஎஸ் அடுத்த...

மொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்

நாம் பெரும்பாலும் ஒபேரா மினி இணைய உலாவியின் நான்காம் பதிப்பைத்தான் உபயோகித்து வருவோம். ஒபேரா இப்போது அதன் ஐந்தாம் பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது. இது அதிக வசதிகளுடன் மேம்படுத்த்தப் பட்டு உள்ளது. உங்களிடம் ஒபேரா மினி பழைய பதிப்பு இருந்தால் இந்த புதிய பதிப்புக்கு மாறி கொள்ளுங்கள். இது பெரும்பாலான மொபைல்களில் நன்றாக வேலை செய்கிறது. இதனை தரவிறக்க அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம் 1. இது பழைய பதிப்பிலிருந்து முற்றிலும் மாற்றுபட்டது. தொடுதிரை (touchscreen) மொபைல்களை ஆதரிக்கிறது. 2. கணினி இணைய உலாவிகளை போன்று டேப்(Tabs) வசதிகளை கொண்டுள்ளதால் ஒரே நேரத்தில் பல இணைய பக்கங்களை திறந்து கொள்ள முடியும். மாறி கொள்ள முடியும். 3. ஸ்பீட் டயல் வசதி மூலம் நாம் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை முகப்பில் சேமித்து வைத்து கொண்டு அணுக முடியும். 4. பாஸ்வேர்ட்...

November 16, 2009

விண்வெளியில் மின்சாரம் தயாரிப்பு

உண்மை அறிந்த மனிதனிடம் தான் இந்த பிரபஞ்சமே புதைந்திருக்கிறது என்று சித்தர்களும் ஞானியர்களும் தெரிவிப்பது உண்டு. மின் சக்தியே விஞ்ஞான வளர்ச்சிக்கு அதிமுக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. மின்சாரம் கண்டுபிடித்த விஞ்ஞானி மைக்கேல் பாரடே நம்முடைய அபார வளர்ச்சிகளுக்கெல்லாம் ஒரு காரணகர்த்தா. நீர், நிலக்கரி, அலை மற்றும் அணு சக்தி போன்றவற்றின் உதவியுடன் இப்போது நமக்கு மின்சாரம் கிடைக்கிறது. காற்றும் அதற்கு விதிவிலக்கல்ல. காற்றின் மூலம் குறைந்த செலவில் அதிக மின்சக்திகளைப் பெற விஞ்ஞானிகள் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். தற்பொழுது உலகம் முழுவதிலும் 50 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இது 50 நியூகிளியர்...

மேம்படுத்தப்பட்ட நினைவகத்துடன் ஐபாட்

ஐ-பாட் கருவி தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஆப்பிள் நிறுவனம், நினைவகத் திறன் மேம்படுத்தப்பட்ட புதிய ஐ-பாட் மற்றும் ஐ-போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 16 ஜிபி நினைவக திறன் கொண்ட புதிய ஐ-போன் (iPhone) 499 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு 8 ஜிபி நினைவகம் உள்ள ஐ-போன்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது.இதேபோல் ஐ-பாட் டச் (iPod Touch) கருவியும், 32 ஜிபி நினைவகத் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலையும் 499 டாலர் என ஆப்பிள் நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.இதற்கு முன் புழக்கத்தில் இருந்த ஐ-பாட் டச் கருவிகள், 16 மற்றும் 8 ஜிபி நினைவகத் திறன் மட்டுமே கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்பிள் நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் சில்லரை விற்பனை மையங்களிலும், அமெரிக்காவின் ஏடி&டி விற்பனை மையத்திலும் புதிய ஐ-போன்கள் கிடைக்கும்...

"சந்திரனில் தண்ணீர்" நாஸா அறிவிப்பு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சமீபத்தில் நடத்திய ஆய்வுகளில், நிலவில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது. பூமியின் துணைக்கோளான சந்திரனில் தண்ணீர் இருப்பதாக நாஸா ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சி இடம்பெற்றுவந்ததாகவும் அண்மைய ஆய்வுகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 ஆய்வுக்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆய்வு உபகரணங்கள் நிலவில் தண்ணீர் இருப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன் உறுதி செய்தது. இது விண்வெளி ஆய்வில் முக்கிய மைல்கல்லாக கருதப்பட்டது. இதையடுத்து கடந்த சில வாரத்திற்கு முன் ராக்கெட்டை நிலவில் மோதச் செய்து அப்போது ஏற்படும் அதிர்வு மூலம் நிலவின் மேற்பரப்பை தகர்த்து அதில் தண்ணீர் இருக்கிறதா? என்ற ஆய்வு நாசா மேற்கொண்டது....

ஐ-போனுக்கு ( i -Phone) மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்

தலைப்பு தவறு என்று எண்ணுகிறீர்களா! ஆமாம், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐ போனுக்கு அப்ளிகேஷன் புரோகிராமினைத் தருமா என்ன? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. ஆனால் உண்மை அதுதான். மைக்ரோசாப்ட் லைவ் லேப்ஸ் அத்தகைய ஒரு புரோகிராம் ஒன்றைத் தருகிறது. ஸீ ட்ரேகன் என இதற்குப் பெயர் இட்டுள்ளது. இதன் மூலம் ஐ போன் பயன்படுத்துபவர்கள் 3ஜி அல்லது வை–பி வழியாக பெரிய அளவிலான போட்டோ லைப்ரேரிகளை எளிதாகப் பெற்று காண முடியும். இந்த சாப்ட்வேர் தொகுப்புடன் 50 படங்கள் இணைத்துத் தரப்படுகின்றன. சில படங்கள் 10 கிகா பிக்ஸெல்கள் அளவில் மிகப் பெரியதாக உள்ளன. இதில் சில சாட்டலைட் மூலம் எடுத்த படங்கள், சில ஸ்பேஸ் போட்டோக்கள், சில அதிக ரெசல்யூசனில் உள்ள கலைப் படங்களாகும். இந்த சாப்ட்வேர் தொகுப்பின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது முற்றிலும் இலவசம். ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும்...

November 15, 2009

எயிட்ஸ் வைரஸின் பரம்பரை ரகசியங்கள் வெளிப்பட்டன.

உலகில் மனித குலத்தை ஆட்டிப்படைத்து வரும் எயிட்ஸ் நோய்க்குரிய எச் ஐ வி -1 (HIV -1)(Human immunodeficiency virus) இன் பரம்பரை அலகுகளின் தொகுப்பு (genome) அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு வெளிக் கொணரப்பட்டுள்ளது. இதன் மூலம் விளங்கக் கடுமையாக உள்ள எச் ஐ வியின் செயற்பாடுகள், மாறல்கள் மற்றும் அதன் பெருக்கங்கள் தொடர்பான பரம்பரை அலகுகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளப்பட்ட முடியும் என்றும் அதன் மூலம் எச் ஐ வியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளின் தயாரிப்பை மேலும் வினைத்திறனுடைய வகையில் வலுப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எளிமையான மற்றைய வைரஸ்களின் ஜினோம்களோடு ஒப்பிடும் போது எச் ஐ வி- 1 சிக்கலான ஜினோம் தொகுப்பைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர். எச் ஐ வி - 1 டி என்...

கொரில்லாவில் இருந்து மனிதனுக்கு தொற்றிய புதிய எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு

மனிதரில் எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV-1 வைரஸிற்கு ஒத்த கொரில்லாவில் (Gorillas) இருந்து மனிதனிற்கு தொற்றியிருக்கக் கூடியது என்று கருதப்படும் புதிய எயிட்ஸ் வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வைரஸ் தொற்றுடன் பிரான்ஸ் பாரீசில் வாழும் கமரூன் நாட்டைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவரே இவ்வகை வைரஸின் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள முதல் மனிதனும் ஆவார். இவர் கமரூன் நாட்டில் ஒதுக்குப்புற கிராமத்தில் வாழ்ந்திருந்தாலும் கொரில்லாக்களோடு எந்த வித நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கொரில்லா அல்லது சிம்பன்சிகளின் இறைச்சிகளை உண்ணும் அல்லது தொடர்புகளைக் கொண்டிருக்கும் வேறு மனிதர்களிடம் இருந்து இவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. HIV கள் சிம்பன்ஸிகளில் (chimpanzees...

ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சை

ரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இம்முறையை பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின் போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த அறுவை சிகிச்சை முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்த அளவே...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review