November 15, 2009

எயிட்ஸ் வைரஸின் பரம்பரை ரகசியங்கள் வெளிப்பட்டன.


உலகில் மனித குலத்தை ஆட்டிப்படைத்து வரும் எயிட்ஸ் நோய்க்குரிய எச் ஐ வி -1 (HIV -1)(Human immunodeficiency virus) இன் பரம்பரை அலகுகளின் தொகுப்பு (genome) அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு வெளிக் கொணரப்பட்டுள்ளது.

இதன் மூலம் விளங்கக் கடுமையாக உள்ள எச் ஐ வியின் செயற்பாடுகள், மாறல்கள் மற்றும் அதன் பெருக்கங்கள் தொடர்பான பரம்பரை அலகுகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளப்பட்ட முடியும் என்றும் அதன் மூலம் எச் ஐ வியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளின் தயாரிப்பை மேலும் வினைத்திறனுடைய வகையில் வலுப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

எளிமையான மற்றைய வைரஸ்களின் ஜினோம்களோடு ஒப்பிடும் போது எச் ஐ வி- 1 சிக்கலான ஜினோம் தொகுப்பைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

எச் ஐ வி - 1 டி என் ஏ (DNA) இரட்டைச் சங்கிலி அமைப்பில் பரம்பரைத் தகவல்களைச் சேர்த்து வைக்கும் வைரஸ் அல்ல. அது ஆர் என் ஏ (RNA) எனப்படும் ஒற்றைச் சங்கிலி அமைப்பில் தகவல்களை சேகரித்து வைப்பதால் அதன் பரம்பரை அலகுகளின் தொடர்ச்சியை ஆராய்ந்து வெளிப்படுத்துவது என்பது சிக்கலானதாக இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review