November 25, 2009

சுயநினைவுடன் இருக்கும் 23 வருட “கோமா” மனிதர்: டாக்டர்கள் வியப்பு

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் ரோம்கோபன் (வயது 46). கடந்த 1983-ம் ஆண்டு இவரது கார் விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அதை ஓட்டிச்சென்ற கோபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

எனவே, அவர் “கோமா” நிலையை அடைந்தார். உடனே அவரை லண்டனில் உள்ள லியெஜ் நரம்பியல் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ஸ்டீவன் லாரீஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து நடைபெற்றதில் இருந்து 23 வருடங்களாக “கோமா” நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு டாக்டர்கள் இவரது உடல் நிலையை “ஸ்கேன்” செய்து பார்த்தனர்.

அப்போதுதான் இவர் “கோமா” நிலையில் இருந்தாலும் சுயநினைவுடன் இருப்பது தெரியவந்தது. விபத்து நடந்ததால் இவரது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவரது மூளையில் பாதிப்பு எதுவும் இல்லை. அது நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது.



அவர் “கோமா” நிலையில் மயக்கமுற்று இருந்தாலும் டாக்டர்களின் பேச்சுகள் மற்றும் சிகிச்சை முறைகளை அறிந்து இருப்பது தெரியவந்தது. இதை அறிந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் வியப்பு அடைந்தனர்.

உடனே படுக்கையில் இருந்த அவரை தற்போது சக்கர நாற்காலியில் உட்கார வைத்துள்ளனர். சக்கர நாற்காலியுடன் விசேஷ கீபோர்டை சேர்த்து கம்ப்யூட்டர் மூலம் தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

மூளை நன்றாக வேலை செய்வதால் பாதிக்கப்பட்டுள்ள நரம்பு மண்டலத்தை சீரமைக்க சிகிச்சை அளித்து வருகின்றனர். கோபன், உறுதியான மனம் படைத்தவர். தன்னம்பிக்கை உடையவர். அதனால்தான் “கோமா” நிலையில் இருந்தாலும் சுய நினைவுடன் திகழ்கிறார். மருத்துவ உலகில் இது ஒரு அதிசயம் என டாக்டர் ஸ்டீவன் லாரீஸ் தெரிவித்துள்ளார்.

கோபனின் கதையையும் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதையும் புத்தகமாக எழுதி வருகிறார்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review