November 28, 2009

சர்வதேச விண்வெளி மையத்துக்கு புதிய சாதனங்கள் பொருத்தப்பட்டன

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் தாம் கொண்டு சென்ற புதிய சாதனங்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் சனிக்கிழமை பொருத்தினர்.
அதற்காக அவர்கள் விண்ணில் நடந்தனர். சில பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டனர். இந்தப் பயணத்தின்போது மொத்தம் 3 தடவைகள் விண்ணில் நடை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டு 2 ஆவது நடையில் இந்தப் பணிகளை முடித்தனர். அடுத்த நடைப்பயணத்தை நேற்று திங்கட்கிழமை முடித்தனர்.
சாதனங்களைப் பொருத்தும் பணியில் விண்வெளி வீரர்கள் மைக் போர்மேன், ராண்டி பிரெஸ்னிக் ஆகியோர் ஈடுபட்டனர். இவர்களில் பிரெஸ்னிக் அப்பாவாகும் மகிழ்ச்சியில் தனக்கு இட்ட பணியில் முதலில் ஆர்வம் காட்டவில்லை.


அவரது மனைவிக்கு எந்த நேரத்திலும் இரண்டாவது குழந்தை பிறக்கலாம் என்ற நிலை இருந்தது. எனினும், ஞாயிற்றுக்கிழமை அவரது மனைவி ரெபேக்கா, ஹுஸ்டனில் இரண்டாவது குழந்தையைப் பிரசவித்தார். அதுவும் பெண் குழந்தை. அதனால் விண்வெளியில் அப்பாவான இரண்டாவது நபர் என்னும் பெருமை பிரெஸ்னிக்குக்கு கிடைத்துள்ளது.

முதல் விண்வெளி வீரர் மிக்கி பிங்கி, 2004 ஆம் ஆண்டு விண்வெளியில் இருந்த சமயம், அவரது பாரியார் குழந்தை ஒன்றை பிரசவித்தார். அதனால் அவர், விண்வெளி முதல் தந்தை என்ற பெருமையைப் பெற்றார். தற்போது இரு விண்வெளி வீரர்களும் விண்வெளி நடைப்பயண நேரத்தைக் குறைத்துக் கொண்டபோதிலும் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை நேரத்துக்கு முன்னரே முடித்துவிட்டனர் என நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review