November 20, 2009

உணவு அருந்திய பின்னர் பழங்கள் சாப்பிடுவது நல்லதல்ல



 சரியானவற்றை சரியான நேரத்தில் சாப்பிடுவது தான் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

பழங்களை அனைவருமே உணவு அருந்திய பின்பு சாப்பிடுவது மிகவும் தவறு சாப்பிடுவதற்கு முன்பு தான் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலில் நச்சுக்கள் சேராமல் தடுக்க முடியும்.

இரவில் தூங்குவதற்கு முன், பாலில் சிறிது மஞ்சள் தூள், சிறிது மிளகுத்தூள் போட்டு அருந்துங்கள். தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு தொந்தரவுகள் நெருங்காதது குரல் இனிமையாக இருக்கும்.

தினமும் இரண்டு கைப்பிடி அளவு கொள்ளை ஊறவைத்து, ஒரு துணியில் கட்டி முளைக்க வைத்து, அத்துடன் கொஞ்சம் பால் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதைப்பிழிந்து பால் எடுத்துக் குடித்து வர மூட்டுவலி, சளித்தொந்தரவு நீங்கும். ஊள் சதை குரையும்.

வெள்ளைபூண்டை நெயில் வறுத்து சாப்பிடவும். குண்டு உடம்புக்காரர்கள் கொடி போல ஆகிவிடுவார்கள்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் சிறிதளவு தேங்காய்பாலுடன் ஒரு கரண்டி தேன், ஒரு கரண்டி கசகசா சேர்த்து குடிக்கவும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review