
பொதுவாக நாம் முக அழகைப் பெறுவதற்காக பேஷியல் செய்து கொள்கிறோம். ஆனால் பேஷியல் என்பது முக அழகை விட மன அமைதிக்குத்தான் செய்யப்படுகிறது என்கிறார் அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா.
பேஷியல் என்பது என்ன?
பேஷியல் என்பது மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக செய்யப்படுவதாகும். மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை கொண்டு வரவும் பேஷியல் உதவுகிறது.
பேஷியல் செய்யும் முறை எப்படி?
பேஷியல் என்பது முகத்தில் உள்ள பிரஷர் பாயிண்ட் இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் முகத்திற்கு ரத்த ஓட்டம் முழுமையாகக் கிடைக்கிறது. முகத்திற்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே நமது முகம் பொலிவாகக் காணப்படும்.
பேஷியலில் உள்ள வகைகள் என்னென்ன?
பேஷியலில் பல வகைகள் உள்ளன. காய்கறி க்ரீம், பழக் க்ரீம், இயற்கைக் கீரம் என பல வகைகள் உள்ளன. விரல் விட்டு எண்ண...