December 17, 2009

யு.எஸ்.பி. டிரைவில் கூகிள் குரோம் ஓ.எஸ்.

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை.

இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent) தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன.

Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.


ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது.

நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால் கீழுள்ள முகவரில் டவுண்லோட் செய்யுங்கள் . பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம்.

விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review