December 25, 2009

சன் ஜாவாவும் ஆரக்கிளும் புதிய கூட்டுடன்படிக்கை

தனக்கு நிகர் எந்த மென்பொருளும் இல்லாமல் நம் கையில் தவழும் சன் ஜாவாவும் ஆரக்கிளும் இணைந்தால் எப்படி இருக்கும் நினைத்தாலே மகிழ்ச்சி தான்.
இந்த இரண்டு மென்பொருளின் நிறுவனங்களும் இணையப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது நமக்கு தெரியும். சில நேரங்களில் நாம் எழுதும் பல ஜாவா புரோகிராம்களுக்கு ஆரக்கிள் துனை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அது மட்டுமின்றி பல வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் முடிக்கலாம்.அதோடு பல புது கண்டுபிடிப்புகளையும் நாம் அடுத்து வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம்.


இரண்டு இமயம் சேரும் புகைப்படம் ஆரக்கிள் தன் மை-எஸ்-குயல் ( Mysql) -ஐ 72 மில்லியன் டாலர் செலவில்ஜாவாவுடன் இணைந்து மேம்படுத்த முடிவெடுத்துள்ளது.

இதனால்பயன் அடைவது நாம் தான் இதைக் கண்டு பயப்படுவது இன்று முன்னனியில் இருக்கும் பல நிறுவனங்கள். அடுத்த ஆண்டு நாம் தேடுபொறியில் சென்று என்ன வேண்டும் என்று வாயால் சொன்னால் போதும் அதுவே விடைகளை காட்டும் என்று சொன்னாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும்இல்லை. ஏனென்றால் ஜாவா முகப்பு திரையில் மன்னன் பல தேடு பொறிகள் இவரின் துனையுடன் தான் இயங்குகிறது அடுத்ததாக ஆரக்கிள் இவரைப்பற்றி சொல்ல ஒரு வார்த்தை போதும் அதுதான் ”டேட்டா பேஸ் “ இப்போது உங்களுக்கே தெரியும்.வரும் ஆண்டு நமக்கு நல்ல பல சேவைகள் கிடைக்கும் ஆண்டாகத்தான் இருக்க போகின்றது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review