December 27, 2009

ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இதயம்

ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட, "செயற்கை இதயம்' குறித்த கருத்தரங்கு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன் தினம் நடந்தது.

இதில் பங்கேற்ற அரசு பொது மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் வரதராஜன் கூறியதாவது: இதய கோளாரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாற்று இதயம் பொருத்தப்படும் வரை தற்காலிகமாக செயல்பட, செயற்கை இதயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை இதயம், இதயத்திற்கு அருகில் பொருத்தப்படும். மாற்று இதயம் கிடைத்த உடன், செயற்கை இதயத்தை அகற்றி விடலாம். ஜப்பானிய கண்டுபிடிப்பான செயற்கை இதயம் நான்கு ஆண்டுகள் வரை செயல்படும்.


18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இந்த செயற்கை இதயத்தை பொருத்திக் கொள்ளலாம். இது தற்காலிகமான ஒன்று தான். இந்த அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஜப்பானில் இதுவரை 10 பேர் இந்த அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இவ்வாறு வரதராஜன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஜப்பான் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டோஷிமாசா டொகுனோ, செயற்கை இதயம் குறித்து மாணவர்களிடம் விளக்கினார். சென்னை பொது மருத்துவமனை டீன் மோகனசுந்தரம் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review