February 24, 2010

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம். இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம், வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது. த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம்ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று...

உலகில் முதல் முறையாக 3-டி நேரடி ஒளிபரப்பு

சம்பவங்களை உயிருள்ள வகையில் காட்டுவதால் திரைக்காட்சிகளுக்கு எப்போதும் ஒரு தாக்கம் உண்டு. அதில் 3-டி எனப்படும் முப்பரிமாணத்தில் காட்சிகளை பார்த்தால் பிரமிக்க வைக்கும்.சமீபத்திய `அவதார்’ சினிமா படம் வசூலில் சக்கைபோடு போடுவதற்கு முக்கிய காரணம் 3-டி காட்சிகள்தான். குழந்தைகள், பெரியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கவரும் 3-டி காட்சியில், ஒரு விளையாட்டுப் போட்டியை நேரடியாக ரசித்தால் எப்படி இருக்கும். பிரமிக்க வைக்கும்தானே! ஆம், அந்த அதிசயம் நடத்திக் காட்டப்பட்டுவிட்டது. இங்கிலாந்தில் இந்த வெற்றிகரமான முயற்சி நடந்தது. அங்கு சமீபத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. ஜனவரி 31-ந்தேதி ஆர்சனால் – மான்சென்ஸ்டர் அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி நடந்தது. பால்கெல்லி என்ற இடத்தில் உள்ள ரெயில்வே பொதுவிடுதி மைதானத்தில் இந்த விளையாட்டு நடந்தது....

February 21, 2010

கடன் அட்டை பின்(Pin) சிஸ்டம் மோசடி….

நாம் இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில் உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர். ஆனால் ஒரு சில ஹக்கர்கள் நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும் பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம் எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர்.  இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை பின் சிஸ்டத்துக்கும் துணை செய்கிற மாதிரி இவர்கள்...

வாடகை வானூர்தி (Air Taxi)

உலகில் நாளாந்தம் அதிகரித்துச்செல்லும் சனத்தொகைப் பெருக்கம் போக்குவரத்து நெருக்கடியை நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளது. நேரமே பணமாகிப் போய்விட்ட வர்த்தக உலகில் போக்குவரத்து நெரிசல் மக்களின் நாளாந்தச் செயற்பாடுகளைத் தாமதப்படுத்துவதென்பது வர்த்தக உலகை செயலற்றதாக்கிவிடும். இவ்வாறான பிரச்சினைகளிற்குத் தீர்வுகாண்பதற்காக இப்பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட பல்வேறு துறைகளைச்சேர்ந்த நிபுணர்கள் பல்வேறுபட்ட வழிகளில் முயற்சித்தவண்ணமுள்ளனர். இவ்வாறான முயற்சிகளின் விளைவுகளில் ஒன்றே வாடகை வானூர்தி (Air Taxi) ஆகும். இதுவரை பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாது பரிசோதனைச் செயற்பாட்டிலிருக்கும் இந்த வாடகை வானூர்திகளை மிக விரைவில் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் முயற்சியில் நிபுணர்கள் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சாதாரண மகிழுந்துகள் (Cars) போன்று வீதியால்...

விக்கிபீடியாவுக்கு கூகுல் நிதியுதவி

இணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. விக்கிபீடியாவை நிர்வகிக்கிம் விக்கிமீடியா அமைப்பின் தலைவரும் விக்கிபீடியாவின் நிறுவனருமான ஜிம்மி வேல்ஸ் இந்த தகவலை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகார பூர்வ தகவலும் வெளியிடப்பட்டது.  கூகுலின் இணை நிறுவனரான‌ சர்ஜி பிரைன் விக்கிபீடியாவை இணைய உலகின் மாபெரும் வெற்றிகளில் ஒன்று என குறிப்ப்ட்டுள்ளார். கூகுல் அளித்துள்ள நிதியுதவி விக்கிபீடியாவின் தகவல்களை தாங்கி நிற்பதற்கான தொழில்நுட்ப வசதியை உருவாக்க மற்றும் மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது.  இணைய‌வாசிக‌ளின் ஆர‌வ‌ மிக்க‌ ப‌ய‌ன்பாட்டால் நாளுக்கு நாள் வ‌ள‌ர்ந்து கொண்டே வ‌ரும் விக்கிபீடியாவின் அதிக‌ரித்து வ‌ரும்...

உடல் எலும்புகள் பலமாக இருக்க....

உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச்சத்து தேவையான அளவு இருக்க வேண்டும். கூடவே, வைட்டமின் `டி’யும் தேவை. இந்த சத்துகள் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் நிறைய காணப்படுகின்றன. இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வரவேண்டும். சூரியக் குளியலும் அவசியம். டாக்டர் யோசனைப்படி வைட்டமின் `டி’யை மாத்திரையாகவும் எடுத்துக்கொள்ளலாம். சுண்ணாம்புச் சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சுப் பழம், பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு ஆகியவற்றையும் தெடர்ந்து உணவில் சேர்த்து வரவும். இதயம் வேகமாக துடித்தல், தூக்கமின்மை, தசைவலி, எரிச்சல் போன்ற பாதிப்புகள் தெரிந்தால் அது சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியேதான். ...

February 18, 2010

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

தென் கொரியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரஞ்சுப்பழம் மற்றும் சிசிலிப்பழம் போன்றவற்றை ஆராய்ச்சி செய்தனர். இதில் இருந்து செயற்கை தோல் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரித்துள்ளனர்.அவற்றில் இருந்து வெளியாகும் சிட்ரஸ் சீ 623-2 என்ற பாக்டீரியா மூலம் வேதியியல் மாற்றம் செய்யப்பட்டு செலுலஸ் ஜெல் ஆக மாற்றம் செய்யப்படுகிறது. அதில் இருந்து செயற்கை தோல் தயாரிக்கப்படுகிறது. இது மனிதர்களின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இந்த செயற்கை தோல் பயன்படுத்துவதால் எந்தவித தொற்று நோயும் ஏற்படாது. தீக்காயம் பட்ட இடத்தில் ஒரு வருடத்திற்குள் இந்த செயற்கை தோலை பொருத்த முடியும். தற்போது இது ஆய்வில் உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உபயோகத்துக்கு வரும்.இந்த செயற்கை தோல் இயற்கையான பயோ பாலிமரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால்...

கூகுள் லேப்ஸ் : புதிய அம்சங்கள்

கூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம்.கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம். ஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம். Google Search ஜிமெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக்,...

February 17, 2010

புளுட்டோ கிரகம் பிரகாசமாக மாறுகிறது : நாசா

புளுட்டோ கிரகம் பிரகாசமாக மாறி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான `நாசா' தெரிவித்துள்ளது.புளுட்டோ கிரகம், சூரியனை கடந்த 248 ஆண்டுகளாக சுற்றி வருகிறது.இந்நிலையில், அது பிரகாசமாக மாறி வருவதாக தெரிவித்துள்ள 'நாசா', விண்வெளியில் சுற்றி வரும் ஹப்பிள் டெலஸ்கோப் எடுத்த படங்களின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிடுவதாக கூறியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 1994 ஆம் ஆண்டு, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் எடுத்த அனுப்பிய படங்களைவிட தற்போது எடுக்கப்பட்டுள்ள படத்தில் புளுட்டோவின் மேற்பரப்பு மிக தெளிவாகவும் பிரகாசமாகவும் இருப்பதாக `நாசா'தெரிவித்துள்ளது. புளுட்டோ கிரகத்தில், சூரிய ஒளி படும் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி உருகுவதாலும், அதன் எதிர் துருவம் உறைவதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அது மேலும் கூறியுள்ளது....

உயிர்காத்த வெப்கேம் காட்சி

அற்புதமான சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு ரசிக்கும் மனம் யாருக்கு தான் இல்லாமல் போகும்.  இப்படி சூர்ய அஸ்தமனக்காட்சியை வெப்கேமில் கண்டு ரசித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர் உரையும் கடலில் சிக்கித்தவித்த ஒருவரை காப்பாற்ற உதவியிருக்கிறார், ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அந்த பெண்மணி வசித்து வருகிறார்.அந்நாட்டின் வடக்கு பகுதியில் செயின்ட் பீட்டர் ஆர்டிங் என்றொரு கடற்கரை நகரம் இருக்கிறது. கடற்கரை ரிசார்ட்டுகளூக்கு பெயர் பெற்ற இந்த நகரம் தான் கெர்மனியிலேயே அதிக சுற்றுலா பயணிகளை கவரும் கடற்கரையாக கருதப்படுகிறது. இங்குள்ள ரிசார்ட்டுகளில் இருந்து சூர்ய அஸ்தமனத்தை கண்டு களிப்பது கண்கொள்ள காட்சியாக புகழப்படுகிறது. இதற்காகவே வந்து குவியும் சுற்றுலா பயணிகள் உள்ளனர். சூர்ய அஸ்தமனம் அற்புதமானது என்றாலும் கொஞ்சம் ஆபத்தானது.சூரிய‌ன் ம‌றையும் நேர‌ம் நெருங்கிய‌துமே...

February 16, 2010

இணையதள பண பரிமாற்றத்தில் பேபால் மற்றும் வென்ராக் இணைந்து புதிய சேவை

ஒன்லைன்-ல் ஒரு பொருள் வாங்குவதில் இருந்து புத்தகம் வாங்குவது வரை நாம் அத்தனைக்கும் பயன்படுத்துவது பேபால்( Paypal) தான் இந்த பேபால் தான் உலகம் முழுவதும் அனைவரும் அதிகமாக இணையதளம் மூலம் பொருள்களை வாங்க விற்க பயன்படுத்தும் சேவை. பேபால் மூலம் ஒரு பொம்மை விற்பவர் கூட தனக்கென்றுஉள்ள இணையதளத்தை இலவச பேபால் கணக்கை தொடங்கி விடலாம் ஒவ்வொரு பொருளும் விற்றபின் நாம் சிறு தொகையை சேவைக்காக பிடித்துவிடுகின்றனர்.  இந்த பேபால் இப்போது வரை பணம் அனுப்புபவரின் முழு தகவல்களையும் சேமித்து வைப்பதில்லை எளிய முறையில் பணம் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் ஆனால் பணம் அனுப்பியவரின் எந்த முகவரியையும் டிரேஸ் செய்வதில்லை இதுமட்டுமல்ல மேலும் பணம் அனுப்ப பயன்படுத்தும் இமெயில் முகவரியை கூட சில நேரங்களில் தவறாக பயன்பபடுத்தலாம் ஆனால் இந்த எந்தப்பிரச்சினையும் இல்லாமல் இணையதளத்தில்...

தகவல்களை குறித்து வைக்க ஹாட்நோட்ஸ் (Hot Notes)

கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார். அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லையா என்று அங்கலாய்ப்பார். ஏன், கையில் இருக்கும் கம்ப்யூட்டரில் தகவலைக் குறித்துக் கொள்ள முடியாதா?  முடியும். நோட்ஸ், ஸ்டிக்கி நோட்ஸ், அர்ஜன்ட் நோட்ஸ் என இதனைக் குறிப்பிடுவோம். இது போல நோட்ஸ் குறிப்புகளை, டெஸ்க்டாப்பில் எழுதி வைக்கும் வசதியைத் தர பல புரோகிராம்கள் இருந்தாலும், ஹாட்நோட்ஸ் (Hot Notes) என்னும் புரோகிராம், இவ்வகையில் சிறப்பானதாக இருந்தது.  மெசேஜ், லிஸ்ட், ஸ்கிரிப்பிள் என மூன்று வகைகளில், மூன்று தனி தனிக் கட்டங்களில் நாம் அவசரத் தகவல்களை எழுதி...

வண்ண விளக்குகளால் மூளைக்கு ஆபத்து

வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும்.  அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இதில் வண்ண விளக்குகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிப்பது தெரியவந்துள்ளது.  இதற்காக ஆய்வகத்தில் பல வண்ண விளக்குகளுக்கு இடையே எலிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. ஆய்வில் விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் எலக்ட்ரிக் கதிர்வீச்சு மூளை செல்களான நிரான்களைப் பாதிக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தடுப்பதால்...

February 15, 2010

இதயம் சில உண்மைகள்!

பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும். (எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். 2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும். 3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். 4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன . 5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது....

பேஸ்புக்குக்கும்,ட்விட்டர்கும் சவாலாக கூகுள் வண்டு (Buzz)

தொட்ட இடங்களில் எல்ல்லாம் முதல்வனாக வரும் நம் கூகுளின் பெரிய சமூகவலைப்பின்னலாக வரும் கூகுள் வண்டு (இரை). பெயர் கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது. வண்டு எனபது எல்லா பூக்களில் இருந்தும் இரையைத் தேடி எடுத்து அதை கூட்டில் சேமித்து வைக்கும் அதே தான் இந்த கூகுள் வண்டு (Buzz) முதலில் இந்த கூகுள் பஸ் என்ன வேலை செய்கிறது என்று பார்ப்போம் கடந்த ஆறுமாதமாக மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேஸ்புக்கும் டிவிட்டரும் தான்.  மக்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் புகைப்படம் வீடியோ என அத்தனையையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர் அதனால் மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது கொஞ்சம் குறைந்துள்ளது இந்த பிரச்சினையை மையமாக வைத்துதான் கூகுள் லைவ் தேடுதல் வந்தது நமக்கு தெரியும் ஆனாலும் எதிர்பார்த்த...

February 13, 2010

நல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி

நீங்கள் கேமரா அல்லது கேமரா வசதி உள்ள மொபைல் வாங்கப்போவதாக வைத்துக் கொள்ளுவோம். அந்த கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும். உங்கள் நண்பர்கள் அந்த கேமரா வைத்து இருந்தால் நீங்க அவற்றை உபயோகித்து பார்த்து அவற்றின் புகைப்படங்களின் துல்லியத்தை அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்தில் பல்வேறு கேமராக்களில் எடுத்த புகைப்படங்களின் மாதிரிகளை சிலர் தரவேற்றி இருப்பர். அவையும் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. அவற்றை கேமரா மாடல் எண்ணை கூகுளில் தேடி கண்டுபிடித்து பல காமெராக்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு கொள்ளமுடியும். நீங்கள் விரும்பும் கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நேரம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தற்போது அதிக புகைப்படங்களுடன் உள்ள ஒரு தளம் புகைப்படங்களை கேமரா மாடல் வாரியாக பிரித்துக் காட்டுகிறது....

இளம் வயதில் வரும் `ஹார்ட் அட்டாக்’

- சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் டென்ஷன் ஆகிறீர்களா? - பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுகிறீர்களா? - எதற்கெடுத்தாலும் முக்கு நுனியில் கோபத்தை கொண்டு வருகிறீர்களா?’ இத்தனைக்கும் ஆம் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சிங்கள். இல்லாவிட்டால் இளம் வயதில்கூட `ஹார்ட் அட்டாக்’ வரும் அபாயம் உள்ளது. ஆத்திரபடும் போது `ஸ்ட்ரெஸ்’ அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. அட்ரினலின் சுரப்பி அதிக வேலை செய்கிறது. அதனால் இதய தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைபடுகிறது. அப்படி கிடைக்காதபோது `ப்ளேட்லெட்ஸ்’ என்ற பிசுபிசுப்பான திரவம் சுரந்து, த்தக்குழாய்களில் படிந்து, அதில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக் குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால்...

சூரியனில் ஆய்வு நடத்த நாசா திட்டம்

சூரியனில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் “நாசா” நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் நிகழும் அதிசயங்கள், இதன் மூலம் பூமியில் ஏற்படும் குழப்பங்களுக்கும் தீர்வுகாண முடியும்.இதற்காக வருகிற 9-ந்தேதி முதல் விண்வெளியில் காப்ளக்ஸ்-41 என்ற ஆய்வ கத்தை ஏற்படுத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. இங்கிருந்து 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ள...

மொபைலில் கால் வைக்கும் ‘பயர்பொக்ஸ்’

அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு உலகத்தில் முதலாவதாக இருக்கும் பயர்பொக்ஸ் இணைய உலாவி இனி மொபைல் துறையிலும் கால் பதிக்க இருக்கிறது. இணையத்தில் பாதுகாப்பு, அதிக அளவு வசதிகள்,எல்லா செயல் நிரல்களும் சரியாக தெரிவதாக இருக்கட்டும் அனைத்திலும் பயர்பொக்ஸ்  தனி முத்திரை பதித்ததுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.   அந்த அளவிற்கு கணினியில் முதலிடத்தில் உள்ள இணைய உலாவி பயர்பொக்ஸ் இன்னும் மொபைலில் சிறப்பாக வரவில்லையே என்று நினைப்பவர்களுக்கு உண்மையிலே மகிழ்ச்சியான செய்தி தான் இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பயர்பொக்ஸ் இனி மொபைலிலும் வரப்போகிறது.   அனைத்து வசதிகளும் கொண்டு பயர்பொக்ஸ் இணைய உலாவி Nokia N90-ல் முதன் முதலாக வரப்போகிறது.   டிவிடரிலிருந்து யூடியுப் வரை அனைத்தும் பயன்படுத்தும் வண்ணம் தயாராகி இருக்கிறது. இதைத் தவிர புக்மார்க்...

February 07, 2010

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.  தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள்...

ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள்

தொடர்ந்து பல நிறுவனங்கள் மொபைல் இணைப்பு சேவையினை மிகக் குறைந்த கட்டணத்தில் தர முன்வருவதால் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை வைத்துக் கொண்டு, தங்கள் மொபைல் அழைப்புகளை வகைப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு திட்டமிடுவதற்கு இரண்டு சிம்கள் உள்ள மொபைல் போன் ஒரு வரப்பிரசாதமாகும். ஸ்பைஸ் எம் 7070: இந்த மொபைலில் இரண்டு ஜி.எஸ். எம். சிம்களை குழப்பமின்றி எளிதாகப் பயன்படுத்தலாம். இது ஒரு டிஜிட்டல் கேமரா மொபைல். இந்த கேமரா 5 மெகா பிக்ஸெல் திறனுடன், 8 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், டூயல் எல்.இ.டி. பிளாஷ், ஆட்டோ போகஸ் லென்ஸ் ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் குறைவான ஒளியில் கூட தெளிவான போட்டோக்களை ஒருவர் எடுக்க முடியும். மேலும் இதில் உள்ள ஃபேஸ் டிடக்ஷன் வசதி தானாக போகஸ் செய்து கொண்டு புகைப்படங்களை எடுக்கிறது. கூடுதலாக பல ஷாட் மோட்களும் தரப்பட்டுள்ளன....

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்

சிறிய வயது உள்ள குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன் போல் உள்ளது. முதலில் இதன் ஹார்டுவேர் கான்பிக்ரேசன் பற்றி பார்ப்போம். Intel Pentium Dual Core E5200 CPU 19”inch touchscreen LCD 500GB HDD 4GB RAM DVD super drive Intel GMA 3100 3D Graphic Card Realtek HD audiO   Windows 7 OS இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் (Premier Kids Cybernet station) என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மானிட்டரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது. இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை...

வைரஸ் பரவலை தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவசம்'

கடந்த வாரம் சீனாவில் கூகுள் நிறுவன செயல்பாடுகளை பெருமளவில் பாதித்த வைரஸைப் போல, தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை குறி வைத்து பரவி வரும் வைரஸ் தாக்குதலிலிருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்க புதிய வகை சாப்ட்வேரை களம் இறக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், கூகுள் உள்பட சீனாவில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் குறி வைத்து கடந்த வாரம் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.  குறி்ப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்பட்டது.  இதையடுத்து எக்ஸ்புளோரர் பிரவுசரை பயன்படுத்துவோரைக் காக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதை நிறுவிக் கொண்டால் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியுமாம்.  இதுகுறித்து உலகின் முன்னணி பாதுகாப்பு சாப்ட்வேர்...

ஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை

நாளுக்கு நாள் பெருகிவரும் ஹக்கரின் அட்டகாசம் இப்போது யூடியூப் வரை சென்றுள்ளது. சென்ற வாரம் தான் டிவிட்டரை ஒரு வழிபடுத்தினார்கள் அதற்குள் இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப் இணையதளத்தை திறந்தால் YouTube is currently experiencing some downtime issues, reporting a “Http/1.1 Service Unavailable” error or a a 500 Internal Server  error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் யூடியுப் இணையதளத்தை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல்  விழித்தனர் ஒருத்தர் டிவிட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை என்று ஒரு டிவிட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது. சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை அடுத்து உடனடியாக நம் கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும்...

Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்

ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து திகைக்கவைக்க கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தான்.  இந்த ட்விட்டர் கணக்கு பிரபலமாக பல பிரபலங்களும் இவனைப் பின்தொடரத்தொடங்கினமை மேலும் சிறப்பு. இதுவரை சுமார் 310,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இந்தச் சிறுவன் ஒரு ட்விட்டர் நட்சத்திரம் ஆகிவிட்டா...

அதிக வேலை முளையை பாதிக்குமாம்!

இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.  வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.  அவர்கள்...

டிவி க்களில் ஸ்கைப்

வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம். இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது.  இனி இந்த வகைத் தொடர்பினை, "டிவி'க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக "டிவி'க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது.  இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி...

February 04, 2010

மொபைல் இணைய தேடல்

மொத்த இன்டர்நெட் தேடலில், மொபைல் போன் வழியாகத் தேடுவது இப்போது 1.3 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதத்தில் இந்த தேடல் மிக அதிகமாக இருந்ததாக இவற்றைக் கவனித்து வரும் வெப் மெட்ரிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்தில், மொத்த இன்டர்நெட் பயன்பாட்டில் 0.57 சதவீதம் ஆக இருந்த மொபைல் வழித் தேடல் தற்போது 1.35 சதவீதம் டிசம்பரில் உயர்ந்தது. இதனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழி தேடல் 99.28சதவீதம் லிருந்து 98.36% ஆகக் குறைந்தது.  மொபைல் வழி இன்டர்நெட் தேடலில் கூகுளின் ஆண்ட்ராய்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதன் பயன்பாடு 58.4 சதவீதம். பிளாக்பெரி 22.2 சதவீதம், ஐபோன் 20.1சதவீதம், சிம்பியன் 19.01 சதவீதம் மற்றும் ஜாவா எம்.இ. 15.6 சதவீதம் ஆக இருந்...

புகைத்தால் பார்வை பறிபோகும்

புகைத்தால் புற்றுநோய் மட்டுமல்ல பார்வையும் பறி போகிறதாம். சமீபத்திய ஆய்வின் எச்சரிக்கை இது. தீய பழக் கங்கள் தீயைப்போல வேகமாகப் பரவுகின்றன. முலை முடுக்குகளிளெல்லாம் சிகரெட், பாக்கு வகைகள் விற்கும் பெட்டிக்கடை காட்சி அளிக்கின்றன. புகைப்பதால் ஏற்படும் தீமைகளும் நாம் அறியாதவைகள் இல்லை. இருந்தும் பலர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதைத்தான் இவை காட்டுகின்றன.  புகைக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பின்னாளில் பார்வையும் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது என்கிறது புதிய ஆய்வு.  அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக குழுவின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 2 ஆயிரம் முதாட்டிகளை ஆய்வு செய்தனர். (அங்கு ஆண்/பெண் பேதமில்லாமல் புகைப்பழக்கம் உண்டு) இவர்கள்...

February 03, 2010

ஆளில்லா வானூர்தி (Unmanned Aerial Vehicle)

மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக்கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன.  பொதுவாக இவ்வகை வானூர்திகள் அவற்றின் வடிவமைப்பு, அளவு, கட்டமைப்பு மற்றும் குணவியல்புகளிற்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பகாலங்களிலிருந்து ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமாகவே இயக்கப்பட்டுவந்த...

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.  சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி,...

February 02, 2010

வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’

`வெடிகுண்டு’ விஞ்ஞானம் வளர வளர ஆயுதங்களும் பெருகி வருகின்றன. ஒளியையும், காற்றையும் எதிர்காலத்தில் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்று பிரபல ஜோதிடர் நாஸ்டர்டாமஸ் கணித்துக் கூறி இருக்கிறார். வளர்ந்து வரும் அறிவியல் நவீனங்களும் அதை உண்மைப்படுத்தும் விதத்திலேயே ஆயுதங்களைக் குவித்து வருகின்றன.  சமீபத்தில் அமெரிக்கா, ஒளியை சிறிய அளவிலான ஆயுதமாக பயன்படுத்தும் யுக்தியை கண்டுபிடித்து உள்ளது. ஆனால் அது ராணுவவீரர்களின் மருத்துவ உதவிக்கு பயன்படும் கத்தி என்று அமெரிக்கா அறிவித்தது. இதேபோல விதவிதமான ஆயுதங்கள் பல நாடுகளிடம் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர இருக்கிறது பாக்டீரியா வெடிகுண்டு.  பாக்டீரியா என்பது நுண்ணுயிரியாகும். இதில் சைனோ பாக்டீரியா என்ற ஒரு வகை பாக்டீரியாக் களில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி பெட்ரோலியம் தயாரிக்கிறார்கள்...

கணிணி வேகம் அதிகரிக்க

நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் . நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.  ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை...

February 01, 2010

ஹேக்கர்களின் புதிய இலக்குகள்

கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது.  அடோப்...

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

விண்டோஸ் 7 வெளியானதிலிருந்து அதன் பரபரப்பு பற்றிக் கொண்டது. விண்டோஸ் 7 பற்றி எல்லா தரப்பினரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வருகின்றன. விண்டோஸ் 7 ஐ நிறுவுதல் அல்லது மேம்படுத்தலும் இலகுதான் ஆனால் உடனடியாக செய்யலாமா செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பற்றி கேள்விகள் எழலாம் அவற்றை பற்றி பார்க்கலாம்.ஏன் அப்கிரேட் செய்ய வேண்டும்? 1. விண்டோஸ் 7 நீங்கள் எங்கிருந்தும் கணணியை இயக்குவதை இலகுவாக்கிறது. அனைத்து டேட்டாக்களையும் பாதுகாப்பாக கையாள உதவுகிறது. நாளந்த நடவடிக்கைகளை சற்று இலகுவாக்குகிறது. 2. உங்கள் தகவல்களுக்கு அதிக பாதுகாப்பளித்தல். விண்டோஸ் 7 இல் இருக்கும் NAP எனும் தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பை நெட்வேர்க் கணணிகளுக்கு வழங்குகிறது. தேவையற்ற அப்பிளிகேஸன்களை நிறுத்தி வைக்க உதவுகிறது. 3. விண்டோஸ் 7 இலகுவாக மனேஜ் செய்து கொள்ள முடிகிறது. இதற்கு...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review