February 13, 2010

நல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி

நீங்கள் கேமரா அல்லது கேமரா வசதி உள்ள மொபைல் வாங்கப்போவதாக வைத்துக் கொள்ளுவோம். அந்த கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்.

உங்கள் நண்பர்கள் அந்த கேமரா வைத்து இருந்தால் நீங்க அவற்றை உபயோகித்து பார்த்து அவற்றின் புகைப்படங்களின் துல்லியத்தை அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்தில் பல்வேறு கேமராக்களில் எடுத்த புகைப்படங்களின் மாதிரிகளை சிலர் தரவேற்றி இருப்பர். அவையும் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன.
அவற்றை கேமரா மாடல் எண்ணை கூகுளில் தேடி கண்டுபிடித்து பல காமெராக்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு கொள்ளமுடியும். நீங்கள் விரும்பும் கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நேரம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தற்போது அதிக புகைப்படங்களுடன் உள்ள ஒரு தளம் புகைப்படங்களை கேமரா மாடல் வாரியாக பிரித்துக் காட்டுகிறது.
கூகிள் பிகாசா இணையதளம். பயனர்கள் புகைப்படங்களை தரவேற்றி கொள்ளும் சேவையையை வழங்குகிறது என்பதனை பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அங்கே உள்ள புகைப்படங்களை நீங்கள் பார்த்த்துக் கொள்ள முடியும். இப்போது புது வசதியாக நீங்கள் அங்கே குறிப்பிட கேமரா மாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தேடி பார்த்துக் கொள்ளலாம்.
Picasaweb இணைய தளத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே நீங்கள் தேட விரும்பும் புகைப்படங்களை தேடுங்கள். உதாரணத்திற்கு நான் 'india' என்று தேடுகிறேன். எல்லா புகைப்படங்களும் தோன்றும். இடது புறத்தில் 'Show Options' கிளிக் செய்து கொண்டு, அங்கே காமெரா மாடலை தேர்வு செய்து கொண்டு எண்டரை தட்டுங்கள். நீங்கள் விரும்பிய கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தோன்றும்.
Sony DSC-W50 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. Canon EOS 40D -இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. மொபைல் போன் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மொபைல் மாடல் கொடுத்து தேடுவதன் மூலம் பெறலாம். Sony Ericsson K800i மொபைல் மூலம் எடுக்கபட்ட புகைப்படங்கள் இங்கே.
இவ்வாறு கேமரா மாடல்களை குறிப்பிட்டு அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு உங்களுக்குத் தேவையான மிகச்சரியான காமெராவை தேர்ந்தெடுத்துக் கொள்ள பிகாசாவின் இந்த வசதி உதவுகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review