February 13, 2010

இளம் வயதில் வரும் `ஹார்ட் அட்டாக்’

- சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் டென்ஷன் ஆகிறீர்களா?
- பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுகிறீர்களா?
- எதற்கெடுத்தாலும் முக்கு நுனியில் கோபத்தை கொண்டு வருகிறீர்களா?’
இத்தனைக்கும் ஆம் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சிங்கள். இல்லாவிட்டால் இளம் வயதில்கூட `ஹார்ட் அட்டாக்’ வரும் அபாயம் உள்ளது.
ஆத்திரபடும் போது `ஸ்ட்ரெஸ்’ அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. அட்ரினலின் சுரப்பி அதிக வேலை செய்கிறது. அதனால் இதய தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைபடுகிறது. அப்படி கிடைக்காதபோது `ப்ளேட்லெட்ஸ்’ என்ற பிசுபிசுப்பான திரவம் சுரந்து, த்தக்குழாய்களில் படிந்து, அதில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக் குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும்.
உணவு மற்றும் பழக்க வழக்க முரண்பாடே இதய பாதிப்பிற்கு அடிபடை காரணியாக இருக்கிறது. ஆனாலும், மன அழுத்தம் ஆகும் போது தான் அதிக பாதிப்பு இதயத்தில் ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் போன்றவற்றால் ரத்த அழுத்தம் ஏற்படுபவர்களைவிட ஆத்திரம் மற்றும் டென்ஷன் அடைபவர்களுக்குத் தான் மன அழுத்தம் அதிகம். மற்ற இதயநோயாளிகளை விட `டென்ஷன் பார்ட்டிகளை’ நான்கு மடங்கு அதிகமாக இதயநோய் தாக்கும்.
அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சிடன் வாழ முன்வர வேண்டும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review