February 16, 2010

தகவல்களை குறித்து வைக்க ஹாட்நோட்ஸ் (Hot Notes)




கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார்.

அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லையா என்று அங்கலாய்ப்பார். ஏன், கையில் இருக்கும் கம்ப்யூட்டரில் தகவலைக் குறித்துக் கொள்ள முடியாதா? 

முடியும். நோட்ஸ், ஸ்டிக்கி நோட்ஸ், அர்ஜன்ட் நோட்ஸ் என இதனைக் குறிப்பிடுவோம். இது போல நோட்ஸ் குறிப்புகளை, டெஸ்க்டாப்பில் எழுதி வைக்கும் வசதியைத் தர பல புரோகிராம்கள் இருந்தாலும், ஹாட்நோட்ஸ் (Hot Notes) என்னும் புரோகிராம், இவ்வகையில் சிறப்பானதாக இருந்தது. 

மெசேஜ், லிஸ்ட், ஸ்கிரிப்பிள் என மூன்று வகைகளில், மூன்று தனி தனிக் கட்டங்களில் நாம் அவசரத் தகவல்களை எழுதி வைக்கலாம். இந்த கட்டங்கள் ஒளி ஊடுறுவும் தன்மை உடையதாய், டெஸ்க் டாப்பில் உள்ளதை மறைக்காதவகையில் இருக்கும். சிறிய அளவில் இதில் படங்களைக் கூட வரைந்து வைக்கலாம். அல்லது படத்தை ஒட்டியும் வைக்கலாம். வேஸ்ட் பாஸ்கட் என்னும் வசதியில், அதிகம் பயன்படாத குறிப்புகளை எழுதி வைக்கலாம். தேவைப்பட்டால், ரீசைக்கிள் பின்னிலிருந்து எடுத்துக் கொள்வதைப் போல எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான தகவல்களை பேக்கப் பைலாக வைத்துக் கொள்ளவும் இதனைப் பயன்படுத்தலாம். 

நினைவில் வைத்துக் கொண்டு, வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை, இதில் ஒரு நினைவூட்டல் போர்டு மாதிரி எழுதி வைத்துக் கொள்ளலாம்.இது எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் போர்ட்டபிள் வெர்ஷனாகவும் கிடைக்கிறது. இதனை பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review