ரைபோசோம்கள் என்பவை மனித செல்களில், புரதச்சத்தை தயாரிக்கும் தொழிற்சாலைகளாக செயற்படுகின்றன. மனித செல்களில் இருக்கும் மரபணுக்கள்(டி.என்.ஏ), உயிர்த்தன்மையின் அடிப்படை கட்டமைப்பை தம்முள் கொண்டிருக்கின்றன.
இந்த கட்டமைப்பு தகவல்களை பயன்படுத்தி உயிர்வாழும் புதிய கலங்களை உருவாக்கும் பணியை இந்த ரைபோசோம்கள் செய்கின்றன.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரைபோசோம்களின் அடிப்படை கட்டமைப்பை, அணு அணுவாக பிரதி எடுத்த செயற்பாட்டுக்காகவே, இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் இந்த ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களின் இந்தப் பங்களிப்பு காரணமாக, இன்றைய மருத்துவ சிகிச்சையில் பயன்படும் பல்வேறு உயிர்காக்கும் ''ஆண்டிபயாடிக்ஸ்'' எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை உருவாக்க முடிந்திருக்கிறது.
இத்தகைய ரைபோசோம்களின் செயற்பாடுகள் இல்லாமல் பாக்டீரியாக்கள் உயிர்வாழ முடியாது. இத்தகைய பாக்டீரியாக்களின் ரைபோசோம்களை குறிப்பிட்டு தடுக்கும் வகையில், அவற்றின் அணுக்கட்டமைப்பை இவர்கள் முழுமையாக பிரதியெடுத்ததன் பயனாக, பல் வேறு நோய்களுக்கு புது வகையான சிகிச்சை முறைகள் உருவாகியிருக்கின்றன.