September 02, 2011

இணைய பக்கங்களை பார்வையிடும் போதே நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

உலாவியில் ஜிமெயிலைத் திறந்து அதன் மூலம் சாட்டிங்க் செய்பவர்கள் அதிகம். எனினும் ஜிமெயில் விண்டோவை விட்டு வேறு ஒரு இணையத்தளத்திற்கு செல்லும் போது ஜிமெயில் சாட்டிங்க் விண்டோ மறைந்துவிடும்.

அரட்டையை தொடர வேண்டுமாயின் மீண்டும் ஜிமெயிலைத் திறந்து வைத்திருக்கும் பகுதிக்கு வர வேண்டும். ஆனால் எந்த இணையத்தளத்தை பார்வையிடும் போதும் ஜிமெயில் அரட்டை தெரியுமாறு செய்ய உருவாகியதுதான் Gtalklet என்ற Chrome உலாவியில் செயற்படும் extension ஆகும்.

இதனை நிறுவிய பின்னர் லொகின் செய்தால் Chrome உலாவியின் கீழ்பகுதியில் ஜிமெயில் சாட்டிங் வசதியைத் தருகிறது.

அதன் பக்கத்தில் தெரியும் பச்சை நிற பட்டனை அழுத்துவதன் மூலம் இதன் மேலதிகமான வசதிகளை பெறலாம்.

பேஸ்புக் போன்ற இணையத்தளங்களில் உலாவரும் போது ஜிமெயில் சாட்டிங்கை தடுத்து வைக்கவும் முடிகிறது.


இணையதள முகவரி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review