September 02, 2011

ஸ்குரோல் பார் பயன்பாடு

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் அனைத்து புரோகிராம்களையும் பயன்படுத்துகையில், நம் பைலில் மேலும் கீழுமாக எளிதாகச் செல்ல, வலது புறம் எல்லைக் கோட்டில் உள்ள கட்டம் நமக்கு உதவுகிறது. இதனை ஸ்குரோல் பார் (Scroll Bar) என அழைக்கிறோம். இந்த பட்டன் மீது மவுஸ் கர்சரை வைத்து அழுத்தி இழுப்பதன் மூலம் மேலும் கீழுமாக, நம் பைலில் செல்ல முடிகிறது. ஆனால், இந்த ஸ்குரோல் பார் நமக்கு இன்னும் சில விஷயங்களையும் காட்டு கிறது என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஸ்குரோல் பாரைப் பயன்படுத்தி, நம் பைல் உள்ளாக, சில வரையறை களுடன், கர்சரை வைத்துள்ள இடத்திலிருந்து நகரலாம்.  மேலாக, மேல் நோக்கி உள்ள சிறிய முக்கோணத்தில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால், ஒரு வரி மேலாகச் செல்லலாம். அந்த மேல் முக்கோண அடையாளத் திலிருந்து கீழாக ஸ்குரோல் பார் எலிவேட்டர் பட்டன் (Elevator...

விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு

இன்னும் சில மாதங்களில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பு வர இருக்கிறது. இந்தத் தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் ஸ்டீபன் சினோப்ஸ்கி, புதிதாக அமைக் கப்பட்டுள்ள ஒரு வலைமனையில் (http://blogs.msdn.com/b/b8/ archive/2011/08/15/welcometobuildingwindows8.aspx) தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவன சோதனைப் பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், நிறுவனங்கள், சாப்ட்வேர் புரோகிராம் தயாரிப்பவர் களுடன் தகவல் களைப் பரிமாறிக் கொள்ள, மைக்ரோசாப்ட் விரும்புவதால், அந்த வலை மனையைத் தொடங்கி யுள்ள தாகவும் அதில் அறிவிக்கப் பட்டுள்ளது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 8 பதிப்பு முழுவதுமான புத்துணர்ச்சியுடன் காட்டும். நிறைய புதிய விஷயங்கள் அதில் தரப்பட்டுள்ளன. இந்த பதிப்பில் மட்டுமே காணப்படும் வசதிகள் பல இதில் அடங்கியுள்ளன. எனவே இவற்றை...

இன்டர்நெட் போதை

சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பதை பதைப்பு ஏற்படுகிறது. மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர் களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகி றார்களோ, அதே போலத்தான் இன்டர் நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள் ளனர்.  இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர், அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் -- ஆகியன வற்றின் தொடர்பு கிடைக்காமல்...

வேர்டில் டெக்ஸ்ட் செலக்ஷன்

வேர்ட் டாகுமெண்ட் உருவாக்கும் போதும், மீண்டும் அதனை எடிட் செய்திடும் போதும், டெக்ஸ்ட் செலக்ட் செய்திடும் வேலையை அடிக்கடி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. அதுவே பல நேரங்களில் முதலில் செய்து முடிக்க வேண்டிய வேலையாகவும் உள்ளது. எனவே தான், வேர்ட் புரோகிராம் டெக்ஸ்ட் செலக்ட் செய்திட பல வழிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1.கிளிக் செய்து மவுஸால் இழுப்பது (Click+Drag): பொதுவாக எல்லாரும் மேற்கொள்ளும் வழி இதுவே. கர்சரை தேவைப்பட்ட இடத்தில் நிறுத்தி, அப்படியே நான்கு திசைகளில் ஏதேனும் ஒன்றில், நம் தேவைக்கேற்ப இழுப்பது.  2. ஷிப்ட்+ அம்புக்குறி (Shift+Arrow): இந்த கீகளின் பயன்பாட்டில், ஒரு கேரக்டர் அல்லது ஒரு வரி, ஒரு நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, தேவைப்படும் அம்புக்குறி கீயினைத் தேர்ந்தெடுத்து அழுத்தினால்,...

வெப் மெயில் பேக் அப்

மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர். Web based email என அழைக்கப் படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே இலவசமாகவே கிடைக் கின்றன. எடுத்துக் காட்டாக, பிரபலமான ஜிமெயில், யாஹூ மெயில், ஹாட் மெயில் போன்றவற்றைக் கூறலாம். இந்த தளங்கள் தரும் இலவச அளவினை மீறுகையில், நம் முந்தைய மெயில்கள் அழிக்கப்படும். ஏன், இந்த வசதியினை இந்த தளங்கள் என்ன காரணத்தினாலோ, தருவதற்கு மறுத்தால், அல்லது அதன் சர்வர்கள் கெடுக்கப்பட்டால், நம் மின்னஞ்சல்கள் என்ன ஆகும்? பெரும்பாலானவர்கள், நமக்குத் தேவையான முக்கிய தகவல்களை, இத்தகைய மின்னஞ்சல்களில் தான் வைத்துள்ளனர். அப்படியானால், இவற்றுக்கு பேக் அப் தான் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு...

எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிய புதிய கருவி!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறியும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கருவி 100 சதவீதம் துல்லியமாக செயல்பட்டு நோய் தாக்கப்பட்டுள்ளதா என 15 நிமிடங்களில் முடிவை தெரிவித்து விடுகிறது. இதற்காக நிறைய செலவும் ஆவதில்லை. அமெரிக்க மதிப்பில் வெறும் ஒரு டாலர் மட்டுமே இதற்காக செலவிட நேரிடும். மிகவும் எளிதாக கையாளகூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவி கிரெடிட் கார்டு வடிவில் அமைந்துள்ளது. இந்த கருவி மக்களிடம் அதிக வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. ...

தேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Delete செய்வதற்கு

கூகுள் வழங்கும் அற்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்துகிறோம்.நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ அல்லது வேறு எங்கோ நம் மின்னஞ்சல் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம்.இப்படி இணையத்தில் நம்முடைய மின்னஞ்சல் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத மின்னஞ்சல்களையும், ஆபத்தான மின்னஞ்சல்களையும் நமக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற Spam மின்னஞ்சல்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது என காணலாம்.Follow Steps:1. உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings பகுதிக்கு செல்லுங்கள்.2. Filters என்ற வசதியை கிளிக் செய்யுங்கள்.3. Create a new filter என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும்.4. அதில் Has the Words பகுதியில் is:spam என்று டைப் செய்யுங்கள். மற்ற கட்டங்களை காலியாக விட்டு...

புத்தகங்களை எளிதாக தரவிறக்கம் செய்வதற்கு

புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி தருகிறது ஒரு இணையம்.கூகுள் தேடிக் கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.உதாரணமாக நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்றால் கூகுளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தரவிறக்க முடியும். ஆனால் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு தேடுபொறி உள்ளது.இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் கட்டத்திற்குள் எந்த வகையான புத்தகம் தேவையோ அதன் பெயரைக் கொடுத்து Search என்ற பொத்தனை சொடுக்க வேண்டியது தான். வரும் திரையில் உள்ள முடிவுகள் அத்தனையுமே அந்த புத்தகத்திற்கு தொடர்புடைய இணைப்பாக தான் இருக்கும்.சரியானதை தேர்ந்தெடுத்து சொடுக்கி எளிதாக புத்தகத்தை...

நிகழ்ச்சிகளை திட்டமிட உதவும் இணையம்

நண்பர்களுடனான சந்திப்புகளை ஏற்பாடு செய்ய உதவுவதற்காகவே திட்டமிடல் இணையதளங்கள் பல இருக்கின்றன.சின்ன விருந்து நிகழ்ச்சிக்கோ, வார இறுதி சந்திப்புக்கோ நண்ப‌ர்களை அழைப்பதையும் வரவழிப்பதையும் மிக அழகாக செய்து முடிக்க உதவுகின்றன இந்த தளங்கள்.நிகழ்ச்சிகளை திட்டமிடும் போது நண்பர்களை தொடர்பு கொள்வது மட்டும் அல்ல, அவர்களில் யாரால் எல்லாம் வர முடியும் என்பதை தெரிந்து கொள்ளவும் உதவும் வகையில் இந்த தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மின்னஞ்சலுக்கு மேல் இமெயில் அனுப்புவது அல்லது செல்போனில் அழைப்புகளின் முலம் சம்மதம் கேட்பது போன்றவற்றுக்கு எல்லாம் அவசியமே இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே எந்த சந்திப்பு நிகழ்ச்சியையும் அழகாக திட்டமிட இந்த தளங்கள் கைகொடுக்கின்ற‌ன.இப்படி திட்டமிட உதவும் தளங்களில் மிகவும் எளிமையானது வென் ஈஸ் குட் இணையதளம். மூன்றே படிகளில் எந்த நிகழ்ச்சிக்கும் நண்பர்களை அழைப்பதை இந்த தளம் சாத்தியமாக்குகிறது.நிகழ்ச்சியை...

இணைய பக்கங்களை பார்வையிடும் போதே நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

உலாவியில் ஜிமெயிலைத் திறந்து அதன் மூலம் சாட்டிங்க் செய்பவர்கள் அதிகம். எனினும் ஜிமெயில் விண்டோவை விட்டு வேறு ஒரு இணையத்தளத்திற்கு செல்லும் போது ஜிமெயில் சாட்டிங்க் விண்டோ மறைந்துவிடும்.அரட்டையை தொடர வேண்டுமாயின் மீண்டும் ஜிமெயிலைத் திறந்து வைத்திருக்கும் பகுதிக்கு வர வேண்டும். ஆனால் எந்த இணையத்தளத்தை பார்வையிடும் போதும் ஜிமெயில் அரட்டை தெரியுமாறு செய்ய உருவாகியதுதான் Gtalklet என்ற Chrome உலாவியில் செயற்படும் extension ஆகும்.இதனை நிறுவிய பின்னர் லொகின் செய்தால் Chrome உலாவியின் கீழ்பகுதியில் ஜிமெயில் சாட்டிங் வசதியைத் தருகிறது.அதன் பக்கத்தில் தெரியும் பச்சை நிற பட்டனை அழுத்துவதன் மூலம் இதன் மேலதிகமான வசதிகளை பெறலாம்.பேஸ்புக் போன்ற இணையத்தளங்களில் உலாவரும் போது ஜிமெயில் சாட்டிங்கை தடுத்து வைக்கவும் முடிகிறது.இணையதள முகவ...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review