January 24, 2011

Virtual DJ: கலக்கல் கலவை இசையை உருவாக்கும் மென்பொருள்

வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களின் இசையை இணைத்து கலக்கல் கலவையாக மாற்றும் புத்தம்புதிய இசையை உருவாக்கும் டிஸ்க் ஜாக்கிகளுக்கான (Disk Jockey) இலவச மென்பொருள் இது. ஆப்பிள் மேக் மற்றும் விண்டோஸ் கணனிகளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்தி நாம் புதிய இசையை உருவாக்கலாம்.இது டிஸ்க் ஜாக்கிகளுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது.இந்த வணீகரீதியில்லாமல் வீட்டுப் பயன்பாடானது(Home Edition).இது முற்றிலும் இலவசமானது. தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.கணினியின் விசைப்பலகை மற்றும் மவுஸ் கொண்டு இதை இயக்கலாம்.யு எஸ் பி (Universal Serial Bus) கருவிகளுடன் ஒத்திசைவு கொண்டதால் இதை எங்கு வேண்டுமானாலும் உடனடியாக பயன்படுத்த முடியும்.பல்வேறு நவீன கோப்புவடிவங்களுடன் இதை பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக்கப்பட்டுள்ளது.தரவிறக்க சுட...

பாலியல் கல்வி தேவை தானா?

பாலியல் கல்வி தேவை தானா? இப்போதும் பாலியல் என்பது ரகசியமாகவே உள்ளது.பாலியல் என்பது விவாதிக்கப்படவே கூடாத விஷயம் என்று நினைத்துப் பலர் ஒதுக்குகின்றனர். வெளிப்படையாகப் பேசவும் தயங்குகின்றனர். ஏனெனில் இது தேவையில்லாத ஒன்று என்ற மனோபாவத்தை நமது சமூகக் கலாசார அமைப்பு மக்களின் மனங்களில் ஏற்படுத்தி விட்டது.பாலியல் இயல்பான ஒன்று தான். பாலியல் தேவை மனித வாழ்விற்கு முக்கியத் தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் இன்றியமையாததாகவும் உள்ளது.பாலியல் சம்பந்தப்பட்ட உண்மைகளை மறைத்து வைப்பதால் அதன் மீது நாட்டம் உண்டாகி, அது என்னவென்று அறிந்து கொள்ள மேலும் ஆர்வம் ஏற்படுகிறது. இயற்கையாகவே, மறைத்து வைக்கப்பட்ட எந்தவொரு ரகசியத்திற்கும் கவர்ச்சி இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.எனவே, பாலியல் பற்றி அறிய, படங்களும், ஒரு தவறான வழிகாட்டுதலை தருகின்றன. இது ஆண், பெண் இருபாலாரையும் மோசமான பாதைக்கு...

சைக்கிள் ஓட்டுவது "தலைவலி" க்கு நிரந்தர தீர்வு: ஆய்வுத் தகவல்

"தலைவலியும், பல்வலியும் உனக்கு வந்தால் தான் தெரியும்” என்பார்கள். இதற்குக் காரணம் அந்த வலியை அனுபவித்தால் தான் அதன் கொடுமை விளங்கும். மைகிரைன் தலைவலி என்னும் ஒற்றைத் தலைவலி மிகவும் கொடுமையானது. இதற்கான தீர்வைத் தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, சைக்கிளை எடுத்துக் கொண்டு தினமும் கொஞ்ச நேரம் உற்சாகமாய் ஓட்டுங்கள். சில மாதங்களிலேயே உங்கள் தலைவலி பறந்து போய்விடும் என சொல்லி வியக்க வைக்கின்றனர் ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள். கடந்த சில மாதங்களாக தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த நபர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தான் இந்த முடிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்தால் தலைவலி அதிகமாகி விடும் எனும் தவறான கருத்தில் பலரும் உடற்பயிற்சி செய்ய மறுத்து வருகின்றனர்.ஆனால் உண்மையில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியானது...

வானத்தில் புதிய சூரியன் தோன்றும்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்!

தற்போதைய உலகில் விண்ணில் பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றது.இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஒன்று ஏற்பட உள்ளது.பூமி தோன்றிய நாள் முதல் இது மாதிரியான நிகழ்வு ஏற்பட்டதில்லை.இந்த வெளிச்சமானது இரவை பகல் போன்று மாற்றும். இந்த நிகழ்வானது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டமானது பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த விண் மீன் கூட்டங்கள்  சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை. இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் தோன்றும். இது மற்றொரு சூரியன் புதிதாக தோன்றியதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review