March 29, 2010

நவீன செல்போன் : இனி மவுன மொழியில் பேசலாம்

பொது இடங்களில் செல்போனில் பேசுபவர்களில் சிலர் உரக்கப்பேசி ஊரைக்கூட்டி விடுவார்கள். அவர்களின் அந்தரங்க தகவல்களை பிறர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே என்ற கவலையின்றி சத்தம் போட்டு பேசுவார்கள்.


இப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பத்தை ஜெர்மனியில் உள்ள காரல் ஸ்ரூகி தொழில்நுட்ப நிலையம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி உங்கள் உதடு அசைவை வைத்தே நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பதை கண்டுபிடித்து எதிர்முனைக்கு உங்கள் குரலில் தெரிவிக்கும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரோ மையோகிராபி எனப்படும் தொழில்நுட்பம் மூலம் இது இயங்குகிறது.

முகத்தில் உதடு மற்றும் தாடைப்பகுதியில் பொருத்தப் படும் சென்சார் கருவிகள் உதடு மற்றும் முக அசைவை வார்த்தையாக மொழிமாற்றம் செய்கிறது. இந்தப்பணியை செய்ய சிறப்பு மென்பொருள் 
உருவாக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த வார்த்தைகள் தொலைபேசி இணைப்பு வழியாக எதிர் முனையில் உள்ளவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர ஸ்பீக்கர் மூலமும் இந்த பேச்சை கேட்கலாம்.

இந்த நவீன கண்டுபிடிப்பின் மூலம் வாய்பேச இயலாதவர்கள் மற்றும் பக்கவாத நோய் தாக்குதலால் பேச முடியாதவர்கள் பலன் பெறலாம். இவர்களின் உதட்டு அசைவின் மூலம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review