காசநோய் ஏற்பட்டால் அதை குணப்படுத்துவது மிகவும் கடினமானது. இதற்கு நீண்டகாலம் மருந்து சாப்பிட வேண்டும். மருந்து சாப்பிட்டாலும் குணமாகாமல் ஏராளமானோர் உயிரிழந்து விடுகின்றனர்.ஆனால் இப்போது காசநோயை உடனடியாக குணப்படுத்தும் மருந்தை அவுஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
ஒருவர் உடலில் காசநோய் தாக்கி அடுத்தவருக்கு தொற்று ஏற்படுத்தும் நிலைவருவதற்கு முன்பு இந்த மருந்தை சாப்பிட்டால் சில நாட்களில் குணமாகி விடுகிறது. நீண்ட காலம் மருந்து சாப்பிட தேவையில்லை.
இந்த மருந்து தற்போது ஆய்வு நிலையில் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
உலகம் முழுவதும் 200 கோடி மக்களை காசநோய் தாக்கி இருக்கிறது. 58 நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மருந்தால் காசநோய் பெரிய அளவில் தடுக்கப்பட்டு விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.