
பீர் குடிப்பது ஆண்களின் உடல் நலத்தை பாதிக்காது என்ற கருத்து நிலவுகிறது. தற்போது இது பெண்களின் உடல் நலத்துக்கும் நல்லது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தினமும் ஒரு கோப்பை பீர் அருந்தும் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ஜெர்மனியில் உள்ள ஹெய்டல் பர்க் கேன்சர் ஆய்வு மையம் நடத்தியுள்ளது. பீர் மதுபானத்தில் உள்ள சக்தி வாய்ந்த மூலக் கூறுகள் மார்பக புற்று நோயில் இருந்து பெண்களை காப்பாற்று வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பீர் மது பானத்துக்கு மனமூட்டுவதற்காக ஒருவகை மலரை பயன்படுத்துவார்கள். அதில் உள்ள ஷான்தோகியூமோல் உடல் உறுப்பில் இருந்து டெஸ்போஸ்டெரோன் மற்றும் ஆஸ்ட்ரோஜெனை அதிக அளவில் சுரக்காமல் தடுக்கிறது.
அது பி.எஸ்.ஏ. என்ற புரோட்டீன் அதிக அளவில்...