August 24, 2011

விண் ஆம்ப் புதிய பதிப்பு

விண் ஆம்ப் புரோகிராம் ஆடியோ மற்றும் வீடியோ பயன்பாட்டிற்கு, அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மைக் ரோசாப்ட் விண்டோஸ் இயக்கத்துடன் தரும், விண்டோஸ் மீடியா பிளேயர், சில பார்மட்டுகளை இயக்குவதற்குத் தயாராக இல்லை. வி.எல்.சி. பிளேயர் இந்தக் குறையினைத் தீர்த்தாலும், பலவகையான வசதிகளைத் தருவதால், இன்றும் விண் ஆம்ப் புரோகிராம் பலரின் ஆடியோ வீடியோ தேவைகளை நிறைவேற்றும் புரோகிராமாக உள்ளது. எடுத்துக் காட்டாக மியூசிக் பைல் என எடுத்துக் கொண்டால், விண் ஆம்ப் MIDI, MOD, MPEG1 ஆடியோ லேயர்கள் 1 மற்றும் 2, AAC, M4A, FLAC, WAV, OGG Vorbis, மற்றும் Windows Media Audio ஆகிய வற்றை இயக்குகிறது. இத்துடன், மியூசிக் சிடியிலிருந்து, இசையை இறக்கி இயக்கிச் செயல்படுகிறது. சிடிக்களில் மியூசிக் பைல்களை எழுதும் வசதி இதில் உள்ளதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

வீடியோ என்று வருகையில், பல்வகையான பார்மட்டுகளை இதில் கையாளலாம். Windows Media Video and Nullsoft Streaming Video ஆகியவற்றை இயக்குகிறது. Windows Media Player. 5.1 இயக்கும் அனைத்தும் இதிலும் இயக்கப்படுகிறது. பார்மட்டுகள் வழி விட்டால், சரவுண்ட் ஸ்டீரீயோ இதில் கிடைக்கிறது.

தொடர் ஒலியான, ஸ்ட்ரீமிங் வீடியோ என்று வருகையில், இன்டர்நெட் ரேடியோ, இன்டர்நெட் டெலிவிஷன், எக்ஸ்.எம். சாடலைட் ரேடியோ, பாட்காஸ்ட், ஆர்.எஸ்.எஸ்.பீட்ஸ் என அனைத்தையும் செயல்படுத்துகிறது. இவற்றுடன் விண் ஆம்ப் இணைய தளத்தில் உள்ள பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இதன் மதிப்பை அதிகப்படுத்துகின்றன.

இந்த விண் ஆம்ப் புரோகிராமின் புதிய பதிப்பாக விண் ஆம்ப் 5.621 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதியதாக, ஐ-ட்யூன்ஸ் லைப்ரேரியிலிருந்து இதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டாஸ்க் பாரில் வைத்து இயக்கும் வகையில் வசதி தரப்பட்டுள்ளது. பிளே லிஸ்ட் உருவாக்கத்தில் புதிய வழிகள் இணைக் கப்பட்டு மேம்படுத்தப் பட்டுள்ளன. தேவைப்பட்டால், உங்கள் பிரவுசருக்கான விண் ஆம்ப் டூல் பாரினை இணைத்துக் கொள்ளலாம்.

இசைக்கான மற்ற புரோகிராம்கள், சில வசதிகளை அளித்து, தேவைப்பட்டால் எடுத்துக் கொள்; இல்லை என்றால் விட்டுவிடு என்ற போக்கில் இயங்கு கின்றன. விண் ஆம்ப் அப்படி இல்லை; நம் தேவைகளுக்கேற்ப இதனை வயப்படுத்திக் கொள்ளலாம். ஆடியோ, வீடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் வீடியோக் களை, நம் விருப்பத்திற்கேற்ப வகைப்படுத்திக் கொள்ள வழிகள் மற்றும் ஆப்ஷன்கள் தரப்படுகின்றன. ஏறத்தாழ 60 ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டு களை இதில் கையாளலாம். ஸ்கின், ப்ளக் இன் மற்றும் ஆன்லைன் சர்வீஸ் என ஏறத்தாழ 6,000 ஆட் ஆன் புரோகிராம்கள் கிடைக்கின்றன.

SHOUTcast ரேடியோ டைரக்டரியுடன் இணைந்து, ஏறத்தாழ 40,000 ரேடியோ ஸ்டேஷன்களை இதில் இயக்கிக் கேட்கலாம். பன்னாட்டளவில் இசையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வசதியாகும். தொலைக்காட்சி ஒளிபரப்புகளையும் கண்டுகளிக்கலாம்.

புதிய விண் ஆம்ப் பதிப்பைப் பெற http://www.winamp.com/mediaplayer என்ற முகவரிக்குச் சென்று, தரவிறக்கம் செய்து, எளிதில் இன்ஸ்டால் செய்து பயன் பெறவும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review