August 24, 2011

மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 450


மொபைல் விற்பனைச் சந்தையில், பட்ஜெட் போன்களைத் தயாரிப்பவராகத் தனக்கெனத் தனி இடம் கொண்டுள்ளது மைக்ரோமேக்ஸ். மேலும் புதிது புதிதாய் வசதிகளை வாடிக்கையாளர் களுக்குத் தருவதிலும் மைக்ரோமேக்ஸ் முன்னணியில் உள்ளது. எடுத்துக் காட்டாக, அண்மையில் விற்பனைக்கு வந்துள்ள எக்ஸ் 450 மொபைல் போன், புளுடூத் ஹெட்செட் ஒன்றை இணைப் பாகக் கொண்டு வந்துள்ளது. அத்துடன் அதற்கெனத் தனியே புதுவிதமான யு.எஸ்.பி. போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் வடிவமைப்பு சற்று வித்தியாசமானது. ஓரங்களில் சற்று வளைவான தோற்றம் தரப்பட்டுள்ளது. பின்பக்க பேனலை மாற்றி நாம் விரும்பும் இன்னொரு வண்ணத்தில் அமைத்துக் கொள்ள பேனலும் தரப்படுகிறது. இது சற்று ரப்பர் கலந்து அமைக்கப் பட்டுள்ளதால், அழுத்தமாகப் பிடித்து போனைப் பயன் படுத்த முடியும். இதன் திரை ரெசல்யூசனில் 2.4 அங்குல அகலத்தில் உள்ளது. இதன் தெளிவான தன்மை, நல்ல சூரிய ஒளியிலும் திரையை நன்கு காட்டுகிறது. போனின் கீ பேட் லேயர் சிஸ்டத்தில் அமைக்கப் பட்டுள்ளதால், கீகளைப் பயன்படுத்துவது மிக எளிதாக உள்ளது.

இவற்றுடன் அமைக்கப்பட்டுள்ள நேவிகேஷன் பேட், மெனுவினை விரைவாக இயக்க வழி தருகிறது. புளுடூத் ஹெட்செட் வைத்துக் கொள்ள, போனின் பின்பக்கமாக சிறிய தொட்டில் உள்ளது. எப்.எம்.ரேடியோ மற்றும் மியூசிக் பிளேயர் வழக்கமாக மற்ற மைக்ரோமேக்ஸ் போன்களில் உள்ளதைப் போலத் தரப்பட்டுள்ளது.

பதிந்து தரப்பட்டுள்ள ஆப்பரா மினி 4 பிரவுசர் இணைய தேடலை வேகமாகத் தருகிறது. இந்த போனை, வெப் கேமராவாகவும், டேட்டா பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தலாம். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா பல கூடுதல் வசதிகளுடன் இயங்குகிறது.

வழக்கமான காலண்டர், கால்குலேட்டர், கரன்சி கன்வர்டர் போன்றவற்றுடன் டெக்ஸ்ட் (.TXT) ரீடர் ஒன்றும் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 1000mAh திறன் கொண்ட தாகும். நான்கு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து பேசும் திறனை அளிக்கிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review