August 24, 2011

ஸ்மார்ட் போன் சந்தையை இழக்கும் நோக்கியா

1996 ஆம் ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் முதல் இடத்தைப் பிடித்திருந்த நோக்கியா நிறுவனம், தற்போது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களால், பின்னுக்குத் தள்ளப் படுகிறது. தற்போது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த காலாண்டில், இரண்டாவது இடத்தை ஆப்பிள் நிறுவனம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அடுத்த 2012 ஆம் ஆண்டில், எச்.டி.சி. நிறுவனமும் இந்த இடத்தில் நோக்கியாவைப் பின்னுக்குத் தள்ளும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சரிவிற்க்குக் காரணம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களே எனவும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review