March 23, 2010

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.
இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.

நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை. எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின் ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த லாபமான கருவியை.

அதிவேக Opera பிரவுசர் வெளியீடு

விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10.50.  என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும்.

இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. வழக்கமான மெனு பாருக்குப் பதிலாக ரேடியோ பட்டன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம், ஆப்பரா தரும் அனைத்து வசதிகளையும் பார்த்து அறியலாம்.
 
 புதிய தொழில் நுட்பம் முழுவதையும் இது சப்போர்ட் செய்வதால், கண்களைக் கவரும் வகையில் இணைய தளங்களை அமைப்பவர்கள், இந்த பிரவுசரில் அவை நன்றாகக் காட்டப்படும் என நம்பி அமைக்கலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளின் ஏரோ கிளாஸ் இந்த பிரவுசரில் சப்போர்ட் செய்யப்படுகிறது.

March 13, 2010

தினமும் ஓட்ட பயிற்சி செய்பவர்களுக்கு பாலிய உறவில் ஆர்வம் அதிகரிக்கும்

இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ அறக்கட்டளை அமைப்பு ஒன்று ஒட்டப்பயிற்சி செய்பவர்களுக்கு “பாலியல்” ஆர்வம் எப்படி இருக்கிறது என்று ஆய்வு நடத்தியது.தினமும் ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் ஆயிரம் பேர், ஓட்டப்பயிற்சியில் ஈடுபடாத ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் தினமும் ஓட்டப்பயிற்சி செய்பவர்களில் 10-ல் ஒருவர் தினமும் பாலியல் உறவு வைத்து கொள்வதாக கூறினார்கள். 3 சதவீதம் பேர் 2 நாளைக்கு ஒரு தடவை உறவு வைத்து கொள்வதாக சொன்னார்கள்.

ஆனால் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடாதவர்களிடம் கேட்டபோது, 25 சதவீதம் பேர் மாதத்துக்கு ஒரு தடவை மட்டும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

அதாவது ஓட்டப்பயிற்சி செய்பவர்களை ஒப்பிடும்போது ஓட்டப்பயிற்சி செய்யாதவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் முகவும் குறைவாக இருந்தது தெரிந்தது.

உடற்பயிற்சி செய்யும்போதே பாலியல் உறவு  பற்றி நினைப்பதாக 10-ல் ஒருவர் கூறினார்கள். ஆனால் பெண்களில் 5 சதவீதம் பேர் மட்டும் உடற்பயிற்சி நேரத்தில் பாலியல் உறவு  பற்றிய நினைப்பு வருவதாக தெரிவித்தனர்.

ஒரே வருடத்தில் $1 பில்லியன் டாலர் யூ டியுப் மெகா சாதனை

கூகுளில் கையில் மண் கிடைத்தால் கூட அதை தங்கமாக மாற்றிவிடுவார்கள் என்று தான் தோறுகிறது. ஒரு சாதாரண இணையதளமாக இருந்த யூடியுப்-ஐ கூகுள் நிறுவனம் வாங்கி இன்று அதை மிகப்பெரிய சாதனை இணையதளமாக மாற்றி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் இப்போது கூகுள் நிறுவனத்தில் ஒர் அங்கமான யூடியுப் $1 பில்லியன் டாலர் வருமானத்தை ஒரே வருடத்தில் பெற்றுள்ளது. இது தான் மிகப்பெரிய சாதனை.கடந்த 2009 ஆம் ஆண்டு 729 மில்லியன் டாலர் பணத்தை அள்ளியது. தொழில்நுட்ப வல்லுனர்களின் கணிப்புப்படி இந்த ஆண்டு 945 மில்லியன் டாலர் வரை வரலாம் என்று கூறினர் ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி இன்று 1 பில்லியன் டாலரை குவித்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியகாரணம் கூகுள் தான்.

ஒரு பக்கம் கூகுளுக்கு சீனாவில் தடை என்று இருந்தாலும் மறுபக்கம் கூகுள் தன் உண்மையான சாதனையை சாதித்துக்கொண்டே தான் இருக்கிறது.அடுத்த ஆண்டும் இதே போல் சென்றால் கூகுள் மேலும் பல பில்லியன் டாலர்களை குவிக்கும்.

March 12, 2010

மூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்

சென்ற வாரம் இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று மற்றும் இரண்டு சிம்களுடன் இயங்கும் இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. என மூன்று சிம்களை இயக்கும் போனாக Intex IN 5030 வெளிவந்துள்ளது. ஒரு ஜி.எஸ்.எம். சிம் இயங்குகையில், சி.டி.எம்.ஏ. சிம் இணைப்பும் இயக்கத்தில் உள்ளது. இரண்டிலும் அழைப்புகள் வந்தால் மாற்றி மாற்றி பேசிக் கொள்ளும் வசதியை இந்த போன் தருகிறது.
 
ஜாவா இயக்கத்தில் செயல்படும் இந்த போனில் இரண்டு பேட்டரிகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒன்று 4 மணி நேரமும், மற்றொன்று 120 மணி நேரமும் தாக்குப் பிடிக்கின்றன.
 
Intex IN 4420 மாடல் போன் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்குகிறது. இந்த போனில் வித்தியாசமான ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் இந்திய கரன்சியில் போலியான ரூபாய் நோட்டுக்களை கண்டறியலாம்.
 
நெட்வொர்க் இணைப்பில் இருக்கையில் போனை அழைப்பவர் அல்லது அழைக்கப் படுபவர் எந்த ஏரியாவில் உள்ளார் என்று அறியலாம். இரண்டு எல்.இ.டி. டார்ச் லைட் தரப்பட்டுள்ளது. வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, இந்திய திருவிழாக்களையும் விசேஷங்களையும் காட்டும் காலண்டர் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளன.
 
இதன் பேட்டரி தொடர்ந்து 3.5 மணி நேரம் பயன்படுத்தும் சக்தியைக் கொண்டு ள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 270 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.
 
இரண்டு போன்களிலும் எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், புளுடூத், பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைந்த செயலாக்கம், மோடம், வெப்காம் செயல்பாடு, பி.சி. சூட், ஜி.பி.ஆர்.எஸ்., வாப், மொபைல் ட்ரேக்கர், ஆட்டோ கால் ரெகார்டர், கரன்சி கன்வெர்டர், மெமரியை 4ஜிபி வரை அதிகமாக்கும் வசதி ஆகியவை உள்ளன. 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review