January 18, 2010

உலகின் மிகப்பெரிய `சோலார்’ அலுவலகம்

சூரிய ஒளியை மின்சக்திக்கு பயன்படுத்திக் கொள்ளும் சோலார் தொழில்ட்பம் வேகமாகப் பெருகி வருகிறது. சோலார் கப்பல், விமானம், கட்டிடம், விளக்கு, அடுப்பு என்று இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


பல்வேறு நாடுகளில் சோலார் கட்டிடங்கள் இருக்கின்றன, கட்டப்படுகின்றன. தற்போது சீனாவில் ஷாங்டாங் நகரில் டெலு பகுதியில் உலகின் மிகப்பிரம்மாண்டமான சோலார் கட்டிடம் கட்டப்படுகிறது. 8 லட்சம் சதுர அடி கொண்ட கட்டிடத்தின் மேற்பகுதியில் சோலார் தகடுகள் பதிக்கப்படுகிறது. இது அந்தப்பகுதியின் மின் தேவையில் 30 சதவீதத்தை நிறைவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அலுவலக கட்டிடம் இன்னும் ஒரு ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்று தெரிகிறது.

வருங்காலத்தில் கட்டிடங்களில் அலங்கார கண்ணாடிகளுக்குப் பதிலாக சோலார் தகடுகளை பதிக்கும் பழக்கம் அதிகரிக்கும் என்றால் ஆச்சரியமில்லை.

January 17, 2010

தொப்பை இருக்கிறதா...? நோய்கள் தேடி வரும்

அதிக எடை கொண்ட நடுத்தர வயதினரைப் பல்வேறு நோய்கள் சீக்கிரம் தாக்கும் என்றும், அதன் விளைவாக அவர்கள் வெகு விரைவிலேயே மரணத்தைத் தழுவ வேண்டி வரும் என்றும் புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த நடுத்தர வயதினரான ஆயிரத்து 758 பேரிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை, அமெரிக்க இதயக் கழகத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

பொதுவாக உடல் வளர் சிதை மாற்றத்தின் அடிப் படையில் இயங்கி வருகிறது. இந்த வளர்சிதை மாற்றம் என்பது நமது உணவு மற்றும் உடற்பயிற்சியின் அடிப்படையில் நடப்பது. சரியான சத்தான உணவு உட்கொள்ளாதது, முறையான தேவையான உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் வளர்சிதை மாற் றத்தில் கோளாறு ஏற்படும். அந்தக் கோளாறால் நீரிழிவு, தொப்பை போடுதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதல், டிரைகிளிசரைடு என்ற கொழுப்பு தேவைக்கும் குறைவாக இருத்தல் போன்ற பிரச்னைகள் தோன்றும். வளர்சிதை மாற்றக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஒருவர், இந்த நோய்களால் தாக்கப்பட்டு அற்பாயுசில் உயிரிழக்க வாய்ப்பு உண்டு.


இந்த வாய்ப்பு அதிக எடை கொண்டவர்களுக்கும், சாதாரண உடல் எடை கொண்டவர் களுக்கும் சமமாகவே இருந்ததாக பழைய ஆய்வுகள் தெரிவித்தன.
இந்நிலையில், சமீபத் தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக எடை கொண்டவர்களுக்கு இதுபோன்ற வளர்சிதை மாற்றக் கோளாறு இல்லையென்றாலும் அவர்கள் நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இரண்டரை மடங்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆய்வில் 63 சதவீதம் பேர் அதிக எடையால் இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

January 16, 2010

க‌ண்களு‌க்கே‌ற்ற கு‌ளி‌ர்‌ச்‌சியான க‌ண்ணாடிக‌ள்

கூலிங் கிளாசின் மிக முக்கியமான பகுதி அதன் கண்ணாடி அல்லது லென்ஸ். வாங்குவதற்கு முன் லென்ஸ் சரியாக உள்ளதா அல்லது பார்வையை கோணலாக்குகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

ஒரு கண்ணை மூடிக் கொண்டு கண்ணாடி வழியே கதவு முனை போன்ற நேரான பொருளைப் பார்க்கவும். நேராக இல்லாமல் கதவின் முனை கோணலாக தெரிந்தால், வேறு கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கவும்.


பொதுவாக கண்ணாடி, பாலிகார்பனேட் பிளாஸ்டிக், அக்ரிலிக் ஆகியவற்றால் லென்ஸ் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் கண்ணாடியால் ஆன லென்ஸ் சிறந்தது என்றாலும் இதன் விலையும், எடையும் அதிகம். அத்தோடு எளிதில் உடைந்து விடும்.

அடுத்தபடியாக பாலிகார்பனேட் பிளாஸ்டிக் சிறந்தது. இதில் விரைவில் கோடுகள் விழாது, கண்ணாடி லென்ஸை விட உறுதியானது. விலை மலிவான அக்ரிலிக்கால் ஆன லென்ஸில் வெகு சீக்கிரம் கீறல்கள் விழ வாய்ப்புண்டு.பல்வேறு நிறங்களில் லென்ஸ் கிடைக்கின்றன. கிரே மற்றும் பச்சை நிறங்களில் உள்ள லென்ஸ் உலகத்தை உள்ளபடியே காட்டும்.

மென்பொருள் செய்தி மைக்ரோசொப்டின் புதிய மென்பொருள்

எப்பொழுதும் புதியதாக யோசிக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மீண்டும் தன்னை நிருபித்துள்ளது. மென்பொருள் உலகின் சுல்தான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு அறிய படைப்பு இது.


நம் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது என்றால் கொள்ளை விருப்பம்தானே. அது போல நாம் ஒரு கம்ப்யூட்டர் கேம்சை உருவாக்கினால், அப்படிதான் யோசித்தது மைக்ரோசாப்ட். அதன் விளைவாக அனைவரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கும் வகையில் ஒரு மென்பொருளை கண்டுபிடித்துள்ளது. அதன் பெயர் கோடு (KODU)

இதனை பயன்படுத்த எந்த ஒரு கம்ப்யூட்டர் மொழியும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் மிக எளிய வகையில் செய்து விடலாம். இதை பயன்படுத்தி ஒரு குழந்தை கூட ஓர் விளையாட்டை உருவாக்கிவிடும். மைக்ரோசொப்டின் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டத்தக்கது.

கம்ப்யூட்டர் அனைவருக்கும் உரிய சாதனமாகும் மைக்ரோசொப்டின் முயற்சியில் இது ஒரு மைல்கல். இந்த சாப்ட்வேர்ஐ பயன்படுத்தி மைக்ரோசொப்டின் Xbox எனப்படும் சாதனத்துக்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம்.

January 15, 2010

துன்புறுத்தும் எண்ணங்களை அழிக்கலாம்! : நியூயோர் பல்கலைகழகம்

சில நினைவுகள் நம்மை வாட்டி வதைக்கும். பொதுவாக சோகமான சம்பவங்கள், பயம் போன்றவை அடிக்கடி நினைவுக்கு வந்து துன்புறுத்தும்.

மகிழ்ச்சியான சம்பவங்களை நாம் மீண்டும் நினைப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் மனதை வேதனைப்படுத்தும் நினைவுகள் மீண்டும் வந்தால் கலங்கி விடுகிறோம். வாழ்க்கையே பெரும் தொந்தரவாகிவிடுகிறது. அதையே நினைத்து மனநலம் பாதிக்கப்படுவோரும் இருக்கிறார்கள்.


இனி இதுபோன்ற தொந்தரவு தரும் எண்ணங்களைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை. முளையில் பதிவாகி இருக்கும் அந்த எண்ணப்பதிவை கண்டுபிடித்து அழித்து விடும் விஞ்ஞானமுறை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் இது சிகிச்சைமுறையாகவும் வர இருக்கிறது.

அமெரிக்காவின் நியார்க் பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ள இந்த முறைக்கு பெயர் `பிகேவியர் தெரபி’ என்று பெயரிட்டு உள்ளனர்.

நமது எண்ணங்கள் எல்லாம் முளையில் உற்பத்தி ஆகின்றன. அங்கேயே பதிவு செய்யப்படுகின்றன. இதில் நம்மை துன்புறுத்தும் பயஉணர்வுகளும் பதிவாகி இருக்கும். அது தொடர்பான சம்பவங்கள், சூழல்கள் மீண்டும் அமையும்போது நமக்கு பயம் தொற்றிக் கொள்கிறது.
இதுவரை பயம் (போபியா) தொடர்பான சிகிச்சைக்கு, சம்பந்தப்பட்டவர்களிடமே காரணம்கேட்டு அதுபோன்ற சூழல்வராமல் தடுப்பதன் முலமே பயஉணர்வை கட்டுக்குள் கொண்டு வருவார்கள். ஆனால் மீண்டும் பயத்தை ஏற்படுத்தும் சூழல் அமைந்துவிட்டால் நிச்சயம் பயம் மீண்டும் தோன்றிவிடும்.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள புதிய முறையில் பயத்துக்கு உள்ளானவர்களின் முளைப்பதிவுகள் ஸ்கேன் செய்து பார்க்கப்படும். அப்போது வண்ணவண்ண கட்டங்களாக பதிவுகள் காட்டப்படும். அதில் நீலநிற கட்டமாக பதிவாகும் நினைவுகள் பய உணர்வை குறிக்கும்.

பயத்தை உருவாக்கும் சில சம்பவங்களை ஏற்படுத்தி அதற்கேற்ப பதிவுகள் வேறுபடுத்திக் காட்டும்படியாக இந்த முறை உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு அந்த பயஉணர்வுகளை அழித்துவிட்டு சோதித்துப் பார்க்கப்பட்டது. இதில் வெற்றி கிடைத்து உள்ளது. அதாவது தேவையற்ற எண்ணங்களை அழிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

முதலில் எலிகளுக்கும், பிறகு 3 குழுவினருக்கும் சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒவ்வொரு குழுவினருக்கும் வேறுவேறு விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது. பிகேவியர் தெரபி முறையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு பய ட்டிய சம்பவங்கள் மீண்டும் அச்சுறுத்தவில்லை.

`போபியா’வை போக்கும் சிகிச்சை முறையில் இந்த கண்டுபிடிப்பு மறுமலர்ச்சியை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review