December 13, 2009

பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.

அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!

பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டனர். தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் பாலுறவு கொள்வது வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது. உடலில் பல்வேறு மன அழுத்தம் தொடர்பான மாற்றங்களுக்கு கார்டிசோல் ஹார்மோனே காரணம் என்று கண்டறியப்பட்டது.

December 12, 2009

2010ஆம் ஆண்டு மிகுந்த வெப்பமானதாக இருக்கும் : இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம்

கடந்த 160 ஆண்டுகளில் இல்லாத விதமாக 2010ஆம் ஆண்டு மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “இயற்கைப் பருவநிலை மாற்றம் காரணமாக புவியின் வெப்பம் அதிகரிக்கும் என்ற போதிலும், 2010ஆம் ஆண்டில் மனித குலத்தால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாகவே வெப்பம் அதிகரிக்கும். இந்த வெப்பத்தின் அளவு கடந்த 1998இல் காணப்பட்டதை விட அதிகமாக இருக்கும்.

கடந்த 1961 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் உலகம் அனுபவித்த சராசரி வெப்பத்தின் அளவை விட, 2010ஆம் ஆண்டில் உலகளவில் 0.6 டிகிரி வெப்பம் அதிகமாக (அதாவது 14.58 டிகிரி) காணப்படும்.


2010ஆம் ஆண்டு மட்டுமின்றி வரும் 2019 வரையிலான காலகட்டம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை கொண்டு செல்லும் புதிய சூட்கேஸ்




பிறந்த குழந்தைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொறு இடத்திற்கு எடுத்து செல்லும் போது பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. புதிய இடத்தின் காலநிலை தட்பவெட்பம் என பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதற்காகவே ஒரு புதிய சூட்கேஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர். பேருந்தில் பயணம் செய்யும் போதோ விமானத்தில் பயணம் செய்யும் போதோ குழந்தையை இதனுள் வைத்துக்கொள்ளலாம். அனைத்து காலநிலையையும் தாங்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர். இதுனுள் ஒரு கேமிரா ம்ற்றும் எல்சிடி பொருத்தப்பட்டுள்ளது.  இதே போல் தாயின் இடமும் கேமிரா ம்ற்றும் எல்சிடி கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தற்போதய நிலையை பெற்றோர் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளலாம்.அதே போல் தாயின் முகத்தை குழந்தையும் பார்த்துக் கொள்ளலாம். உடல் நிலை சரியில்லாத குழ்ந்தையை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அனுப்பும்போது குழந்தையை இது பத்திரமாக எடுத்து செல்லும் என்பதில் ஐயமில்லை.

December 11, 2009

செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்!


சிவப்பு கிரகமான செவ்வாய் பூமியில் இருந்து 3.5 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் செல்ல வேண்டுமானால் 6 மாத காலம் பயணம் செய்ய வேண்டி வரும்.


தற்போது புதிய தொழில்ட்பத்தில் ஒரு ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 39 நாட்களில் செவ்வாய்க்குச் சென்றுவிடலாம்.
இந்த புதிய தொழில்ட்பம் பிளாஸ்மா ராக்கெட் டெக்னாலஜி எனப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆட் ஆஸ்ட்ரா என்ற தொழில்ட்ப நிறுவனம் இந்த தொழில்ட்பத்தில் வி.எக்ஸ்.200 என்ற என்ஜினை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த என்ஜினைக் கொண்டு ராக்கெட்டை இயக்கினால் 39 நாட்களில் செவ்வாய்க்கு சென்றுவிடலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள ராக்கெட்டுகளைவிட பலமடங்கு சக்தி வாய்ந்தது இந்த ராக்கெட்.


இந்த நிறுவனம் நாசாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி க்ஷிகிஷிமிவிஸி என்ற ராக்கெட்டை 2013-ல் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளது.

தற்போது விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் ராக்கெட்டுகளை இயக்க ஆண்டு தோறும் 7.5 டன்கள் எரிபொருள் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் புதிய ராக்கெட்டுகளை பயன்படுத்தினால் 0.3 டன்கள் எரிபொருள் மட்டுமே செலவாகும். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணமும், எரிபொருளும் மிச்சமாகும்.


மற்ற ராக்கெட்டுகளின் ஆரம்பகட்ட உந்து வேகத்திலும் பிளாஸ்மா ராக்கெட் சிறப்புத் தன்மை உடையது. ஒரே உந்துதலுக்குப் பிறகு ஆண்டுக்கணக்கில் இயங்கும் திறன் பெற்றது. நீராவி மூலம் இயங்கும் இதன் என்ஜின் தண்ணீரை கொதிக்கவைத்து நீராவியை உருவாக்கிக் கொள்ளும். இதன் வேகமும் சாதாரண ராக்கெட்டுகளைவிட 100 மடங்கு அதிகமாக இருக்கும்.


இந்த என்ஜினின் வெப்பநிலை சூரியனின் உட்புற வெப்பநிலைக்கு நிகராக இருக்கும். இதனால் மற்ற பாகங்கள் உருகாமல் இருக்கும் அளவுக்கு பாதுகாப்பாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.


இந்த ராக்கெட்டை வடிவமைத்துள்ள ஆட் ஆஸ்ட்ரா நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சி நிலையம், செயற்கை கோள்கள், எரிபொருள் மையங்கள் ஆகியவற்றின் தொழில்ட்பம் மற்றும் பராமரிப்பு செலவுகளை குறைக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review