November 22, 2009

கஞ்சாவை காட்டும் ஐபோன்


கஞ்சாவுக்கும் ஐபோனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் மரியூனாவிற்கும் ஐபோனுக்கும் தொடர்பிருக்கிறது.

மரியூனாவை கண்டுபிடிக்க உதவும் செயலி ஐபோனுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை குறிக்கவே இந்த தலைப்பு.

கஞ்சாவும் மரியூனாவும் ஒன்றல்ல.அடிப்படையில் இரண்டுமே போதை தரவல்லது என்றாலும் மரியூனாவுக்கு மருத்துவ குணம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர்.

ஆனால் ம‌ரியூனாவை தேட உதவும் செயலி என்பதைவிட கஞ்சாவை தேடும் செயலி என்றால் தான் நம்மவர்களுக்கு சட்டென்று புரியும்.

ஐபோன் சார்ந்த செயலிகள் தொடர்ந்து பரபர‌ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த செயலி ஐபோன் சார்ந்த அற்புதங்களை அழகாகவே உணர்த்துகிறது.எதற்கெடுத்தலும் ஒரு ஐபோன் செயலி இருக்கும் என்னும் கருத்தை வலுப்படுத்தும் வகையில் போதை பொருளாக கருதப்படும் மரியூனா கைடைக்கும் இடங்களை காட்டக்கூடிய செயலியை அஜ்னாக் டாட் காம் என்னும் நிறுவனம் கனாபிஸ் எண்னும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் சாட்டரீதியாக மருத்துவ தன்மையோடு அது விற்கப்படும் இடங்கள் மட்டுமே காட்டப்படுகிறது.

இதே போல பெட்ரோல் நிலையங்கள் மற்றும் நண்பர்களின் இருஒப்பிடத்தை காட்டும் செயலிகளும் உருவாக்கப்ப்ட்டுள்ளன.

AVI கோப்புகளை MP4 கோப்புகளாக மாற்ற


கணினியில் நாம் அடிக்கடி பார்க்கும் வீடியோ கோப்புகளின் வடிவமானது AVI என அமைந்திருக்கும்.

இந்த வடிவானது, iPhone, iPod, Zune, PSP, PS3 போன்ற கருவிகளுடன் ஒத்திசைவு (compatibility) இல்லாதது.

MP4 வடிவங்களையே மேற்கண்ட கருவிகள் ஏற்றுக்கொள்கின்றன.AVI கோப்புகளை MP4 ஆக மாற்றுவதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Convert AVI to MP4. இதன் மூலம் WMA, MOV, MPEG1 / MPEG2, DivX ஆகிய பல்வேறு விதமான கோப்பு வடிவங்களை MP4 ஆக மாற்ற முடியும்.

மிகஎளிமையான முகப்பைக் கொண்ட மென்பொருள் இது. இது Windows XP மற்றும் Windows Vista இந்த இயங்குதளங்களில் இயங்கும்.

தரவிறக்கச் சுட்டி

November 21, 2009

உங்களுடைய மீடியாபிளேயரை இணைய உலாவியிலிருந்தே இயக்குவது எப்படி?


நீங்கள் இணையத்தில் அதிகம் வலம் வருபவரா? அதுவும் பாடல்களை ஒலிக்க விட்டே இணையத்தில் இருப்பவரா? மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் “ஆம்” என்றால் உங்களுக்காகவே இருக்கிறது ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Foxy tunes.

இது Internet Explorer, Mozilla Firefox உடன் வேலைசெய்கிறது. இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் உங்களது மீடியாபிளேயரை இணைய உலாவில் இருந்துகொண்டே இயக்கலாம். உங்களிடம் இருக்கும் பாடல்களை உங்களது மீடியா பிளேயரில் பாடவிடவும், பின்னர் மீடியா பிளேயரை மினிமைஸ் செய்துவிட்டு இணைய உலாவியில் இருக்கும் Foxy Tunes மூலமாக இயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில் உபயோகித்தால் யூ‍‍-டியூப் தளத்தின் playlist கூட கையாள‌முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

lankasri.com

பதிவிறக்கம் செய்ய‌

சமூக தளங்களை தாக்கி வரும் கூப்பேஸ் வைரஸ்


பேஸ்புக், ட்விட்டர், மைஸ்பேஸ், பெபூ, ப்ரண்ட்ஸ்டர் மற்றும் ஹாய் 5 போன்ற சமுதாய இணைய தள நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப் பேஸ் (Koobface) வைரஸ் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்.

இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் மெசேஜ் ஒன்று உங்களுக்கு இமெயில் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட வீடியோ ஒன்றை டவுண்லோட் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். வீடியோவிற்கான லிங்க்கைக் கிளிக் செய்தால் யு–ட்யூப் போல தளம் ஒன்று திறக்கப்படும். அங்கே ஒரு வீடியோ காட்சி ஒன்று உள்ளதென்றும், அதனைக் காண சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை இறக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதற்கான லிங்க் கொடுக்கப்படும்.

இதற்கு யெஸ் என அழுத்தினால், உங்கள் கம்ப்யூட்டரில் உங்களுடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் புரோகிராம் ஒன்று இறங்கி அமர்ந்து கொள்ளும். பின் உங்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட், வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு அனுப்பப்படும்.

ஏற்கனவே இந்த வைரஸ் புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் மேலே சொன்ன நடவடிக்கை களினால் இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் உடனே இந்த கூப் பேஸ் வைரஸ் குறித்த அனைத்து வரிகளையும் ரெஜிஸ்ட்ரியிலிருந்து நீக்கவும். உங்கள் ஆண்ட்டி வைரஸை அப்டேட் செய்து கம்ப்யூட்டரை முழுமையாகச் சோதனை செய்திடவும்.

lankasri.com

November 20, 2009

பருத்தொல்லைக்கு இதோ விடுதலை!



வாரம் ஒரு முறை முல்தானிமட்டி, எலுமிச்சை சாறு, கடலைமாவு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் கலந்த பேக்கை தொடர்ந்து உபயோகித்து வந்தால் . முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையை முல்தானிமட்டி சுத்தமா எடுத்துடும்.

உங்களுக்கு பருக்கள் முற்றிலும் போன பிறகு பேக் போடுவதை 15 நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ என்று மாற்றிக் கொள்ளுங்கள். இது நிச்சயம் நல்ல பலன் தரும். பருத் தொல்லைக்கும் இது சரியான தீர்வு

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review