November 15, 2009

மலேரியாவை ஒழிக்க புதிய தடுப்பு மருந்து


அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மலேரியா ஆராய்ச்சிக் கழகத்தைச் சேற்ந்த ஆயாளர்கள் குழு இந்திய விஞ்ஞானி தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் மலேரியா நோயைத் தடுக்கும் புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

பரிசோதனையில் இந்த மருந்து சிறப்பாக செயல்பட்டதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மலேரியா நோய் உலகம் முழுதும் 50 கோடி மக்களை தாக்கி வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் உலகம் முழுதும் மலேரியாக் காய்ச்சலுக்கு உயிரிழந்து வருகின்றனர்னர்.

குறிப்பாக ஆப்பிரிக்கா நாட்டு குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். ஆசியாவிலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய நிர்பாய் குமார், இது குறித்து கூறுகையில், "மலேரியா வைரஸ் பரவலைத் தடுக்கும் இந்த புதிய தடுப்பு மருந்தை எலிகளுக்குள் செலுத்‌தி பரிசோதனை மேற்கொண்டபோது, கிடைத்த முடிவுகள் ஆரோக்கியமானதாக இருந்ததால் அதனை மனித உடலுக்கும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது" என்றார்.

அதாவது இந்த ஆய்வாளர்கள் மலேரியல் புரோட்டீனை தயாரித்து அதனை எலிகள் மற்றும் கென்யாவில் உள்ள ஆலிவ் குரங்கினங்கள் ஆகியவற்றை வைத்து பரிசோதனை செய்தனர். அப்போது கொசுவின் உடலில் வளரும், மலேரியா உருவாக்கு‌ம் பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியின் வளர்ச்சியை இந்த தடுப்பு மருந்து சிறப்பாக முடக்கியது தெரிய வந்ததாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொசுவில் உருவாகும் இந்த ஒட்டுண்ணி பல்கிப் பெருகுவதன் மூலம் மனித உடலுக்குள் புகுந்து விடுகிறது. தற்போது இந்த மலேரியா தடுப்பு புரோட்டீன் இந்த வளர்ச்சியை தடுத்து விடுகிறது.

இந்த புரோட்டீன் வாக்சின் ஒரே ஒரு டோஸ் கொடுக்கப்பட்டபோது 93 விழுக்காடு எதிர்ப்பு சக்தி உருவானதாக கூறப்பட்டுள்ள இந்த ஆய்வில் நாளைடைவில் மலேரியா எதிர்ப்பு சக்தி 98 விழுகாடாக அதிகரித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் மலேரியா ஒழிப்பு முயற்சியில் இது ஒரு தொடக்க கட்டமே என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், மேலும் பல சீரிய ஆய்வுகளை மேற்கொண்டு இதில் முன்னேற்றம் ஏற்பட்டால் மலேரியா நோயையே அகற்றி விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வெப்பநிலை,காற்றழுத்த மாற்றத்தால் ஒற்றைத் தலைவலி உண்டாகிறது


தலைவலியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள்". தலைவலியால் அவதிப்படாத மனிதர்களே இருக்கமுடியாது என்பதால் தலைவலி தொடர்பான ஆராய்ச்சிகள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

தலைவலியில்,ஒற்றைத் தலைவலி எனப்படும் "மைகிரேன்"தலைவலியால் அவதிப்படுவோர் பலர்.இத்தகைய வலி வந்தால் எதுவுமே செய்ய இயலாது.சிலருக்கு இரண்டு மூன்று நாள் வரை கூட இது நீடிக்கும்.தலையில் நீர் கோர்ப்பதால் இந்த மைகிரேன் தலைவலி வருவதாக கூறப்பட்டாலும்,தட்ப வெப்ப நிலை மற்றும் போதிய காற்று இல்லாததாலும் மைகிரேன் தலைவலி வரும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வெப்ப நிலை திடீரென உயர்வதால் தலைவலி உண்டாகும் என்றும் காற்றழுத்த வேறுபாடு காரணமாக தலைவலி ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இஸ்ரேலைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் சேத் தலைமையிலான மருத்துவக் குழு கடுமையான தலைவலியால் அவதிப்படும் 7,054-பேரை ஆய்வு செய்தது.இவர்களில் பெரும்பாலோர் 7-ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறினர்.இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது,தட்ப வெப்ப நிலையில் முந்தைய தினத்தைக் காட்டிலும் 5-டிகிரி செல்சியஸ் உயரும்போது இவர்களுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.அத்துடன் காற்றழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக 72-மணி நேரம் வரை லேசான தலைவலியுடன் இவர்கள் அவதிப்பட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய ஆராய்ச்சி முடிவு மிகவும் உபயோகமானது என்று லண்டனில் உள்ள நரம்பியல் துறை பேராசிரியர் பீட்டர் கோட்ஸ்பி தெரிவித்துள்ளார்.இதன்மூலம் நோயாளிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும்.மைகிரேன் தலைவலியை அதிகரிக்கும் காரணிகளில் சில வகை உணவு மற்றும் மதுப் பழக்கம் மட்டுமின்றி மன இறுக்கமும் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

November 14, 2009

உலக நீரழிவு தினம் 2009

உலக சிறுவர்கள் தினம் 2009


நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்


செல்போன் விற்பனையில் அகில உலக அளவில் முன்னணியில் இருக்குக் நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி லாபம் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது ஆப்பிள்.எல்லாம் ஐபோன் செய்யும் மாய‌ம்.

செல்போன் சந்தையில் நோக்கியைவை எட்டிப்பிபடிக்க முடியாமல் மற்ற முன்னணி நிறுவனங்கள் திணறிக்கொன்டிருக்க ஐபோன் மூலம் இந்த சந்தையில் நுழைந்த ஆப்பிள் மட்டும் நோக்கியாவுக்கு ஈடு கொடுத்து நிற்கிறது.வெகுஜன மாடல்களின் சந்தையில் வேண்டுமானால் நோக்கியா முடிசூடா மன்னனாக இருக்கலாம் ஆனால் விலை உயர்ந்த பிரிவில் அறிமுகமான ஐபோன் ஸ்மார்ட்போன் என்று வர்ணிக்கப்படும் இந்த பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக விளங்குகிறது.

நோக்கியாவின் என் 90 இந்த பிரிவில் அறிமுக‌மானாலும் ஐபோன் பக்க‌த்தில் கூட‌ நெருங்க‌ முடிய‌வில்லை.இருப்பினும் ஒட்டுமொத்த‌ ச‌ந்தையில் நோக்கியாவே முன்ன‌ணியில் இருக்கிற‌து. வ‌ருவாய் ம‌ற்றும் லாப‌த்தைலும் இதே நிலை தான்.

ஆனால் த‌ற்போது முத‌ல்முறையாக‌ ஆப்பிள் நோக்கிய‌வைவிட‌ அதிக‌ லாப‌ம் ஈட்டியிருக்கிற‌தாம்.இந்த‌ ஆண்டின் ச‌மீப‌த்திய‌ காலாண்டு முடிவுக‌ளின் ப‌டி நோக்கியா 1.1 பில்லிய‌ன் டால‌ர் லாப‌ம் ஈட்ட ஆப்பிள் 1.6 பில்லிய‌ன் டால‌ர் லாபம் ஈட்டியுள்ள‌து.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review