skip to main |
skip to sidebar

5:40 am
இன்னும் 20 ஆண்டுகளில், நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும், என பிரிட்டன் விஞ் ஞானி தெரிவித்துள்ளார்.தற்போது எந்த துறையை எடுத்தாலும், நானோ டெக்னாலஜி பற்றி பேசப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படுகின்றன.இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது உடலில் பழுதடையும் பாகத்தை மாற்றியமைக்க செய்ய முடியும். இதன் மூலம் நமக்
கு வயோதிகம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும்.முடிவில் மரணமே ஏற்படாமல் செய்யவும் முடியும், என்கிறார் பிரிட்டன் விஞ்ஞானி ரே குர்ஸ்வீல்.ரத்தத்தில் உள்ள செல்களின் பரப்பளவு கொண்ட "நானோ போட்' என்ற பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இந்த நானோபோட்டை பயன்படுத்தி கட்டியை அழிக்கலாம்; உடம்பில் துளையிடாமலேயே அறுவை சிகிச்சை செய்யலாம்; ரத்தம் உறைவதை தடுக்கலாம்.இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் மரணமே ஏற்படாதவாறு செய்ய முடியும். இந்த தொழில்நுட்பத்தினால் மூளையின் திறனையும் அதிகரிக்க செய்ய முடியும். ஒரு நிமிடத்தில் ஒரு புத்தகத்தை முழுவதுமாக படிக்கவும் முடியும்.நானோ தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை கண்களும், செயற்கை உறுப்புகளும் கூட உருவாக்க முடியும், என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ரே குர்ஸ்வீல் தெரிவித்துள்ளார்.

5:36 am
பல வினாக்கள் கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினா
க்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம்.இரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் செர்வர் அறிந்து கொள்கிறது.இவ்வாறு பல இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து விடைகளுக்குமான புள்ளிகளை மொத்தமாக சொல்லி விடுகிறது அந்த இணைய தளம். இது எவ்வாறு சாத்தியம்?மேற் சொன்ன செயற்பாட்டின் போது வெப் சேர்வருக்கு உதவுகிறது நமது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சின்னஞ் சிறிய டெக்ஸ்ட் பைல். இதனையே குக்கீ எனப்படுகிறது.சில இணைய தளங்களைப் பார்வையிடும்போது அந்த வெப் சேர்வர் ஒரு குக்கீ பைலை உமது கணினியின் ஹாட் டிஸ்கில் சேமித்து விடுகிறது. இதன் மூலம் அந்த குக்கீ பைலுக்குரிய நபர் நீங்கள் தான் என்பதை சேர்வர் நினைவில் கொள்ளும்.
இங்கு குக்கீ பைல் ஒரு அடையாள அட்டை போல் செயல்படுகிறது. மீண்டும் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட தளத்தைப் பார்வையிடும்போது உங்கள் வெப் பிரவுசர் அந்த குக்கீயை சேர்வருக்கு அனுப்பி விடுகிறது.இதன் மூலம் வெப் செர்வர் அந்த இணைய தளத்தில் நுளைந்திருப்பது முன்னர் வந்து போகும் நபர்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதோடு அந்த இணைய தளத்தில் எந்த ஒரு பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாலும் உங்களை சேர்வர் இனங காணும்முன்னர் பார்வையிட்ட ஒரு இணைய தளத்தை மறுபடியும் பார்வையிடும்போது குக்கீஸ் நமக்கு உதவுகின்றன. உதாரணமாக ஒரு பயனர் பெயரை குக்கீ பைலாக நமது கணினியில் சேமித்தவுடன் அந்த பயனருக்குரிய பாஸ்வர்ட், இமெயில் முகவரி, தற்போதைய தேர்வுகள் போன்ற வேறு விவரங்களை சேர்வரில் உள்ள தரவுத் தளத்தில் பதியப்பட்டு விடும்..அந்த குக்கீயில் பதியப்பட்ட பயனர் பெயரைக் கொண்டு அவரின் பாஸ்வர்டை மறுபடியும் டைப் செய்யாமலேயே அவர் பற்றிய விவரங்கள அறிந்து கொள்கிறது, இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்குள் ஒருவரின் செயற்பாட்டை அறிந்து கொள்ளவும் நேரத்தை சேமிக்கவும் முடியுமாயுள்ளது.அவ்வாறே இணையம் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதும் (online shopping) அந்த தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை குக்கீஸில் போட்டு விடுகிறது. இதன் மூலம் அந்த தளங்களை மறுபடியும் பார்வையிடும்போது உங்கள் பெயர் விவரங்களை மறுபடியும் வழங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.குக்கீஸ் இனையத்தில் உங்கள் செயற்பாட்டை அவதானிக்கவே உருவாக்கப்படுகின்றன.. ஒரு குக்கீயை உருவாக்கும்போது அவ்விணைய தளத்தின் பெயரும் அந்த குக்கீயில் பதிவாகிவிடும். . அதன் மூலம் அந்த குக்கீயைத் திறந்து பார்க்க அவ்விணைய தளத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.ஏனைய தளங்களால் அந்த குக்கீயைப் பார்வையிட முடியாது.சில இணைய தளங்கள் வியாபார நோக்கம் கொண்ட நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்ந்து அவர்களின் குக்கீகளை நமது கணினியில் சேமித்து விடும். இவை மூன்றாம் தரப்பு குக்கீ (Third party cookies) எனப்படும்.இதன் மூலம் அவ்வியாபார நோககம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் குக்கீகளை பயன்படுத்துவோரின் இணைய் செயற்பாட்டை அவதானிப்பதோடு அவர்களை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டேயிருக்கும். .அதாவது நீங்கள் எவ்வாறான இணைய பயனர், உங்கள் விருப்பு என்ன, எவ்வகையான பொருட்களை இணையத்தின் வ்ழியே கொள்வனவு செய்கிறீர்கள போன்ற விவரங்களைப் பெற்றுக் கொள்ளும்.எடுத்துக் காட்டாக ஒரு இணைய் தளத்திலிருந்து ஒரு டிஜிட்டல் கேமராவை வாங்கி விடுகிறீர்கள். அப்போது குக்கீயைப் பகிர்ந்து கொள்ளும் வேறு நிறுவன இணைய தளங்களும் கேமரா போன்ற வேறு இலத்திரனியல் சாதனங்களை உங்களுக்கு விற்பனை செய்ய முயலும்.ஒரு இணைய தளத்தில் இமெயில் முகவரியை வழங்கும் போது அதன் சக நிறுவனங்களும் அதனை அறிந்து கொண்டு நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வேண்டாத குப்பை அஞ்சல்களையெல்லாம் உங்களுக்கு அனுப்பி விடும். உங்களைப் பற்றி இவர்கள எப்படி அறிந்து கொண்டார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.குக்கீஸ் என்பவை மிகச் சிறிய டெக்ஸ்ட் பைல்களே. இவை .txt எனும் பைல் நீட்டிப்பைக் கொண்டிருக்கும். அது ஹாட் டிஸ்கில் சேமிக்கப்பட் டிருக்கும். விண்டோஸில் குக்கீ பைல்கள் c - சீ ட்ரைவில் Documents and Settings போல்டரில் உள்ள பயனர் கணக்கிற்குரிய Cookies போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும்.எனினும் இவற்றால் கணினிக்கு எந்த வித பாதிப்பம் ஏற்படாது. இவை வெறும் டெக்ஸ்ட் பைல்களேயன்றி .இதன் மூலம் வைரஸை கணினியில் பரவச் செய்திட முடியாது. நீங்கள் ஒரு இணைய தளத்தில் வழங்கிய தகவல்களை அந்த இணைய தளம் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளாதவரை குக்கீஸால் எந்த வித பாதிப்பும் இல்லை.இணைய தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை நினைவில் வைத்திருக்க குக்கீஸ் உதவுவதால், உங்கள் கணினியை உபயோகிக்கும் வேறொரு நபரால் நீங்கள் ஏற்கனவே பார்வையிட்ட இணைய தளங்களைப் பர்வையிட வழி கிடைத்து விடுகிறது.குக்கீஸ் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லையானால் அதனை அனுமதிக்காது விடலாம் அல்லது குக்கீஸ் எனும் வசதியை வெப் பிரவுசரிலிருந்து முடக்கி விடலாம். எனினும் இவ்வாறு செய்வதால் வேறு சில வசதிகளைப் பெற முடியாது போய்விடும்.சிலர் தங்கள் கணினியில் பதிவாகியிருக்கும் குக்கீஸை அவ்வவப்போது அழித்து விடுவதும் உண்டு. இவ்வாறு அழிப்பது சில வேளை சிக்கலை ஏற்படுத்தவும் கூடும். ஏனெனில் சில தளங்கள் குக்கீஸ் இல்லாது தமது தளத்தை அணுக விடாது..அனேகமான வெப் பிரவுசர்களில் குக்கீஸைக் கட்டுப் படுத்துவத்ற்கன வசதியுள்ளது., இதன் மூலம் குறிப்பிட்ட சில பாதுகாப்பான இணைய தளங்களிலிருந்து மட்டும் குக்கீஸை அனுமதிக்கலாம்.இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் குக்கீகளை எவ்வாறு தடுப்பது? இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில் Internet Options தெரிவு செய்யுங்கள். அங்கு Privacy டேபின் கீழ் ஸ்லைடர் கொண்டு குக்கீ அளவினைக் கட்டுப்படுத்தலாம்.Block All Cookies, High, Medium High, Medium, Low, Accept All cookies என ஆறு தெரிவுகள் இருக்கும். (Block All Cookies) தெரிவு செய்வதால் அனைத்து குக்கீகளையும் தடுக்க முடியும்.. இத்தகைய செயலமைப்பால், எந்தவொரு இணைய தளமும் கணிணிக்குள், குக்கீகளை உட்புகுத்தி சேமிக்க இயலாது.அனைத்து குக்கீகளையும் தடுத்தால், மிகுதியான இணைய தளங்களை பார்வையிடுவதை தடுக்க நேரிடும்.. அடுத்த இரண்டு நிலைப்பாடுகளான, உயர்வு (High), மிதமான உயர்வு (Medium High), ஆகியவை மிக்க பொருத்தமானவையாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட தளத்திற்கான குக்கீயை மட்டும் தடுக்கவும் இயலும். பழைய குக்கீகளை நீக்கல் முன்பு ஹாட்டிஸ்கில் சேமிக்கப்பட்ட குக்கீகளை அகற்றும் வரை அவற்றைப் படிக்க இயலும். அனைத்து குக்கீகளையும் அகற்றுவதற்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில், Internet Options தேர்ந்தெடுக்கவும்.General டேபின் கீழ் Temporary Internet Files பகுதியில், Delete Cookies என்பதை தேர்ந்தெடுத்து ஓகே சொல்லி விடுங்கள்

5:35 am
தொழில் சம்பந்தமான பணிகளால் இரவில் நன்றாக தூங்கவில்லையா? இரவில் வெகுநேரம் கண்விழித்து படிக்கிறீர்களா? இது பிற்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.மூளையின் நுட்பமான பகுதிகளின் செயல்
பாடுகள் குறித்து அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.எலிகளை நீண்ட நேரம் தூங்க விடாமல் செய்து அவற்றின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர்.அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது.எனவே இரவில் சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்.

5:35 am
எல்லோரும் இண்டெர்நெட்டில் பழைய காதலிகளையும்
காதலன்களையும் தேடிக்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.ஆஸ்க்ஜீவ்ஸ் தேடியந்திரம் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் படி இண்டெர்நெட் பயன்படுத்துபவர்களில் பாதிபேர் தஙளுடைய முன்னாள் காதலன்/காதலிகளை தேடுகின்றனராம்.ஃபேஸ்புக் ,டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தளங்களின் மூலம் அந்தரங்க விவரங்களை
பகிர்ந்து கொள்வதும் நண்பர்களை தேடுவதும் சுலபமாக இருக்கிறது.தொடர்பு விட்டுப்போன பழைய நண்பர்களை தேடவேண்டும் என்றால் இந்த தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.இதே போலவே பலரும் தங்களது பழைய காதலர்களை தேடிக்கண்டுபிடிக்க முயல்வதாக தெரிய வந்துள்ளது.ஆனால் அவர்கள் தேடுவதற்கான காரணங்கள் தான் உண்மையிலேயே சுவாரஸியமானவை.37 சதவீதம் பேர் முன்னாள் காதலர்கள் தற்போது எப்படி இருக்கின்றனர் என்று தெரிந்து கொள்வதற்காக மட்டுமே தேடலில்
ஈடுபடுகின்றனராம்.மற்றபடி பழைய காதலை புதுப்பித்துக்கொள்ளும் விருப்பம் எல்லாம் அவர்களிடம் இல்லையாம்.அது மட்டுமல்ல 20 சதவீதம் பேர் மாஜிக்களிடமிருந்து வந்த இமெயில்களுக்கு பதில் அளிப்பதைகூட தவிர்த்துள்ளனர்.இதில் மேலும் வியப்பு என்னவென்றால் கணிசமானோர் தாங்கள் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்த்தவே மாஜிக்களை தேடுகின்றனராம்.இந்த ஆய்வு தமிழ் திரைக்கதையாசிரியர்களுக்கு நல்ல தீனி அல்லவா?

5:34 am
கடந்த வாரத்தில் எங்கள் பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அசல் மென்பொருள்கள் தான் பயன்படுகிறதா
என்று சோதனை நடத்தியது. கரூரில் அதிகமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகள் தான் உள்ளன. இந்த ஆலைகளின் சங்கத்திற்கு மைக்ரோசாப்ட் ஆணையிட்டுவிட்டு சென்றதால் அனைத்து ஆலைகளுக்கும் அசல் மென்பொருள்களையே பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனால் எல்லா தொழிற்சாலைகளும் கதிகலங்கி போய் உள்ளன. ஏன் என்றால் ஒரு விண்டோஸ் XP வாங்கவேண்டும் எனில் ரூபாய் 6700 ஆகிறது. MS-Office மென்பொருள் வாங்கவேண்டுமெனில் ரூபாய் 10,000 ஆகிறது. இதுவே சேர்த்து மொத்தம் 17,000 ரூபாய் ஆகிறது.ஒரு தொழிற்சாலையில் குறைந்தது 30 கணினிகள் இருந்தாலும் 5 லட்சம் ரூபாய் ஆகிறது. தொழிற்சாலைகளே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் செலவு செய்து இயங்குதளமும் அலுவலக மென்பொருளையும் வாங்குவதற்கு யோசனை செய்யத்தான் வேண்டியிருக்கிறது.இந்த நேரத்தில் தான் எங்கள் நிறுவனத்தில் ஒரு யோசனை சொன்னேன். இயங்குதளத்திற்கு Linux உம், அலுவலக பயன்பாட்டுக்குOpenOffice.org மென்பொருளையும் பயன்படுத்தாலாம் என்று சொன்னேன். இவை இரண்டுமே கட்டற்ற இலவச மென்பொருள்கள். மேலும் முழுதும் இலவசம். எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் போடலாம். பயன்படுத்தலாம். உரிமம் ( License ) வாங்க தேவையில்லை.
ஆனாலும் எல்லோரும் பயந்தனர்.எங்களுக்கு இதில் தான் வேலை செய்ய வரும் என்று. விண்டோஸ் மட்டும் என்ன குழந்தையிலேயே கற்றுக்கொண்டு வந்தோமா ? சிறிது சிறிதாக பழக வேண்டியது தானே.இந்த துறையில் மைக்ரோசாப்ட் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டுமா என்ன? சரி இந்த மென்பொருள்களை நிறுவி சோதிக்கலாம் என்றனர். பின்னர் Open Office நிறுவி அதை பயன்படுத்தி பார்த்தனர். இயல்பில் MS-Office மாதிரியும் அதை விட அதிகமான வசதிகளும் உள்ளன என்று வியந்தனர். அனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோப்புகளை திறக்க முடியுமா என்றும் இதை MS-Office வடிவமைப்பில் மெயில் அனுப்பமுடியுமா போன்ற சந்தேகங்கள் எழுந்தன.அவை தீர்க்கப்பட்டும் விட்டன.பிறகு Ubuntu Linux இயங்குதளத்தை நிறுவி சோதிக்கலாம் என்று எண்ணி நிறுவதொடங்கினேன். அதில் Partition பகுதி தான் புரியவில்லை. அதில் உள்ள Guided - Resizing partition தேர்வு செய்தேன். ஏன் என்றால் எனக்கு விண்டோஸ் இயங்குதளமும் வேண்டும் என்பதால். ஆனால் அந்த முறையில் நிறுவ முடியவில்லை. பின்னர் Guided - Entire Disk கொடுத்து விட்டு விண்டோசை முழுதும் நீக்கிவிட்டு உபுண்டு மட்டும் இருக்குமாறு நிறுவினேன். இரண்டுமே இருக்குமாறு நிறுவுவது எப்படி என்று சொன்னால் நலமாக இருக்கும்.ஆனால் விரைவில் உபுண்டுவில் நிபுனராகுவது சிரமம் என்றேதோன்றியது. எப்படி Network அமைப்பது, தமிழ் மொழியை நிறுவுவது, மெயில் அனுப்புவது, இணையம் பயன்படுத்துவது , மாற்று மென்பொருள்கள் போன்ற விசயங்களை தமிழில் படைத்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்?எனக்கு சுதந்திர மென்பொருள்களின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளது. ஆனால் தமிழில் உபுண்டுவை கற்றுக்கொள்ள புத்தகங்களோ அல்லது அதிகமான வலைப்பூக்களோ இல்லை என்று தோன்றுகிறது.இனிமேல் சுதந்திர மென்பொருள்களின் (Open source Softwares) தேவை அதிகரிக்கும் . லினக்ஸ் இயங்குதளம் முன்னணிக்கு வரும் என்றே தோன்றுகிறது. அதனால் சுதந்திர மென்பொருள்களை அதிகமாக இப்போதிருந்தே பயன்படுத்த முயற்சி செய்தால் நல்லது. மேலும் இவை பற்றிய அதிகமான படைப்புகளை வலைப்பூக்களில் படைப்பதன் மூலம் லினக்ஸ் பற்றிய அறியாமையை நீக்கி விட முடியும்.