September 02, 2011

எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிய புதிய கருவி!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறியும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கருவி 100 சதவீதம் துல்லியமாக செயல்பட்டு நோய் தாக்கப்பட்டுள்ளதா என 15 நிமிடங்களில் முடிவை தெரிவித்து விடுகிறது. இதற்காக நிறைய செலவும் ஆவதில்லை. அமெரிக்க மதிப்பில் வெறும் ஒரு டாலர் மட்டுமே இதற்காக செலவிட நேரிடும். மிகவும் எளிதாக கையாளகூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவி கிரெடிட் கார்டு வடிவில் அமைந்துள்ளது. இந்த கருவி மக்களிடம் அதிக வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

தேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Delete செய்வதற்கு

கூகுள் வழங்கும் அற்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்துகிறோம்.

நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ அல்லது வேறு எங்கோ நம் மின்னஞ்சல் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம்.

இப்படி இணையத்தில் நம்முடைய மின்னஞ்சல் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத மின்னஞ்சல்களையும், ஆபத்தான மின்னஞ்சல்களையும் நமக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற Spam மின்னஞ்சல்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது என காணலாம்.

Follow Steps:

1. உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings பகுதிக்கு செல்லுங்கள்.

2. Filters என்ற வசதியை கிளிக் செய்யுங்கள்.

3. Create a new filter என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும்.

4. அதில் Has the Words பகுதியில் is:spam என்று டைப் செய்யுங்கள். மற்ற கட்டங்களை காலியாக விட்டு விடுங்கள்.

5. அடுத்து கீழே உள்ள Next Step என்ற பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ வரும் அதில் OK கொடுக்கவும்.

6. அடுத்து இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Delete it என்பதற்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் மார்க் இடவும்.

7. அடுத்து கீழே உள்ள Create Filter என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் Filter உருவாகிவிட்டது. இனி உங்கள் ஜிமெயில் முகவரிக்கு வரும் Spam மின்னஞ்சல்கள் தானாக Delete ஆகிவிடும்.

Note: கூகுள் கொடுத்து இருக்கும் Unlimited Space சேவையில் இதை delete செய்ய வேண்டிய அவசியமில்லை மற்றும் ஸ்பாம் போல்டருக்கு வரும் சில நல்ல மின்னஞ்சல்களும் அழிந்து விடும்

புத்தகங்களை எளிதாக தரவிறக்கம் செய்வதற்கு

புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி தருகிறது ஒரு இணையம்.

கூகுள் தேடிக் கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

உதாரணமாக நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்றால் கூகுளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தரவிறக்க முடியும். ஆனால் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு தேடுபொறி உள்ளது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் கட்டத்திற்குள் எந்த வகையான புத்தகம் தேவையோ அதன் பெயரைக் கொடுத்து Search என்ற பொத்தனை சொடுக்க வேண்டியது தான். வரும் திரையில் உள்ள முடிவுகள் அத்தனையுமே அந்த புத்தகத்திற்கு தொடர்புடைய இணைப்பாக தான் இருக்கும்.

சரியானதை தேர்ந்தெடுத்து சொடுக்கி எளிதாக புத்தகத்தை தரவிறக்கலாம். Doc, Pdf, PPT, XLS போன்ற கோப்புகளையும் தேர்ந்தெடுத்து தேடும் வசதியும் உள்ளது. இணையத்தில் நமக்கு வேண்டிய புத்தகத்தை எளிதாக தரவிறக்க உதவும் இந்தத்தளம் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி

நிகழ்ச்சிகளை திட்டமிட உதவும் இணையம்

நண்பர்களுடனான சந்திப்புகளை ஏற்பாடு செய்ய உதவுவதற்காகவே திட்டமிடல் இணையதளங்கள் பல இருக்கின்றன.

சின்ன விருந்து நிகழ்ச்சிக்கோ, வார இறுதி சந்திப்புக்கோ நண்ப‌ர்களை அழைப்பதையும் வரவழிப்பதையும் மிக அழகாக செய்து முடிக்க உதவுகின்றன இந்த தளங்கள்.

நிகழ்ச்சிகளை திட்டமிடும் போது நண்பர்களை தொடர்பு கொள்வது மட்டும் அல்ல, அவர்களில் யாரால் எல்லாம் வர முடியும் என்பதை தெரிந்து கொள்ளவும் உதவும் வகையில் இந்த தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மின்னஞ்சலுக்கு மேல் இமெயில் அனுப்புவது அல்லது செல்போனில் அழைப்புகளின் முலம் சம்மதம் கேட்பது போன்றவற்றுக்கு எல்லாம் அவசியமே இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே எந்த சந்திப்பு நிகழ்ச்சியையும் அழகாக திட்டமிட இந்த தளங்கள் கைகொடுக்கின்ற‌ன.

இப்படி திட்டமிட உதவும் தளங்களில் மிகவும் எளிமையானது வென் ஈஸ் குட் இணையதளம். மூன்றே படிகளில் எந்த நிகழ்ச்சிக்கும் நண்பர்களை அழைப்பதை இந்த தளம் சாத்தியமாக்குகிறது.

நிகழ்ச்சியை உருவாக்குங்கள் அன்னும் பகுதியை கிளிக் செய்து முதலில் நிகழ்ச்சிக்கான நாளையும் நேரத்தையும் குறிப்பிட்டு யார் எல்லாம் பங்கேற்க விரும்புகிறிர்களோ அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த தகவலை அனுப்பி வைக்கலாம்.

இதற்கான நாட்காட்டியும் இந்த தளத்திலேயே இருக்கிறது. அதில் தேதியை தேர்வு செய்துவிட்டு நேரத்தையும் குறிப்பிடலாம். நிகழ்ச்சிக்கான தலைப்பு மூலமே நிகழ்ச்சியின் தன்மையை உண‌ர்த்திவிடலாம்.

மின்னஞ்சல் பெறும் நண்பர்கள் நிகழ்ச்சிக்கான அழைப்பை பார்த்து விட்டு அந்த நாளில் தாங்களால் வரமுடியுமா என்பதை தெரிவிப்பார்கள் அல்லது தங்கலுக்கு ஏற்ற வேறு ஒரு நாளை பரிந்துரைக்கலாம். இப்படி எல்லா நண்ப‌ர்களின் பகுதிகளையும் பார்த்து நிகழ்ச்சிக்கான நாளை முடிவு செயது தகவல் அனுப்பலாம்.

மீட்டிபையர் தளமும் இதே போன்றது என்றாலும் மிகவும் விரிவானது. வென் ஈஸ் குட் தளம் தரும் அதே அம்சங்களை மிக விரிவாக கல‌ர்புல்லாக வழங்குகிறது இந்த தளம். வரிசையாக ஒவ்வொரு படியாக நிகழ்ச்சியை திட்டமிட துவங்கலாம்.ஒவ்வொரு படிக்கும் ஒரு கட்டம் உள்ளது.

எடுத்தவுடன் என்ன என்னும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். அதாவது எந்த‌ நிகழ்ச்சி ஏற்படு செய்யப்பட்டுள்ள‌து என்பதை என்ன கட்டத்தில் குறிப்பிட வேண்டும். தேவைப்பட்டால் நிகழ்ச்சிக்கான விளக்கத்தையும் சுருக்கமாக குறிப்பிடலாம்.

அடுத்ததாக நிக‌ழ்ச்சி நடக்கும் இடத்தை தெரிவிக்க வேண்டும். இடத்தை வரைபடத்திலும் சுட்டி காட்டலாம். அதன் பிற‌கு நிகழ்ச்சிக்கான தேதியை குறிப்பிட வேண்டும். பின்னர் யாரை எல்லாம் அழைத்திருக்கிறிர்கள் என்பதையும் குறிப்பிடலாம்.

இந்த நிகழ்ச்சி அட்டவனையை மின்னஞ்சல் மூலமோ அல்லது பேஸ்புக் வழியாக‌வோ நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்கள் தரும் பதில்களின் அடிப்ப‌டையில் எல்லோருக்கும் சரியான தினத்தில் நிழ்ச்சியை வைத்து கொள்ளலாம்.

இணையதள முகவரி

இணைய பக்கங்களை பார்வையிடும் போதே நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

உலாவியில் ஜிமெயிலைத் திறந்து அதன் மூலம் சாட்டிங்க் செய்பவர்கள் அதிகம். எனினும் ஜிமெயில் விண்டோவை விட்டு வேறு ஒரு இணையத்தளத்திற்கு செல்லும் போது ஜிமெயில் சாட்டிங்க் விண்டோ மறைந்துவிடும்.

அரட்டையை தொடர வேண்டுமாயின் மீண்டும் ஜிமெயிலைத் திறந்து வைத்திருக்கும் பகுதிக்கு வர வேண்டும். ஆனால் எந்த இணையத்தளத்தை பார்வையிடும் போதும் ஜிமெயில் அரட்டை தெரியுமாறு செய்ய உருவாகியதுதான் Gtalklet என்ற Chrome உலாவியில் செயற்படும் extension ஆகும்.

இதனை நிறுவிய பின்னர் லொகின் செய்தால் Chrome உலாவியின் கீழ்பகுதியில் ஜிமெயில் சாட்டிங் வசதியைத் தருகிறது.

அதன் பக்கத்தில் தெரியும் பச்சை நிற பட்டனை அழுத்துவதன் மூலம் இதன் மேலதிகமான வசதிகளை பெறலாம்.

பேஸ்புக் போன்ற இணையத்தளங்களில் உலாவரும் போது ஜிமெயில் சாட்டிங்கை தடுத்து வைக்கவும் முடிகிறது.


இணையதள முகவரி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review