April 30, 2010

கைப்பேசிகளின் தொடுகைத்திரையும் தொடரும் வழக்குகளும்

2007ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனை தொடுகைத் திரை(touchscreen) தொழில் நுட்பத்துடன் அறிமுகம் செய்து அது பெரு வெற்றியைக் கொடுத்ததைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தொடுகைத் திரை கைப்பேசிகளை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டின.

தொடுகைத் திரை(touchscreen) தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஐபாட் (Tablet)கணனியில் உச்சக் கட்டத்தை எட்டியது. இந்தத் தொடுகைத் திரைத் தொழில் நுட்பத்திற்கு உரியகாப்புரிமை தன்னுடையது என்று இப்போது தைவானின் Elan Microelectronics என்னும் நிறுவனம் வாதிடுகிறது. அது அமெரிக்க அரசிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளது. 

அமெரிக்க பன்னாட்டு வர்த்தக ஆணையகம் (US International Trade Commission) இது தொடர்பாக விசாரணகளையும் ஆரம்பித்துள்ளது. Elan Microelectronics சார்பாக தீர்ப்பை வழங்கினால் ஆப்பிள் தனது ஐ-பாட், ஐ-போன், ஐ-பொட் ரச், ஆகிய கருவிகளின் விற்பனையை நிறுத்த வேண்டி வரலாம் என அஞ்சப்படுகிறது. ஆப்பிள் 2007இல் இருத்து 40 மில்லியன்கள் ஐ-போன்களை விற்பனை செய்துள்ளது.

இது இவ்வாறிருக்க ஆப்பிள் நிறுவனம் தனது கைப்பேசிகளின் தொழில் நுட்பங்களை தைவானைச் சேர்ந்த HTC நிறுவனம் திருடிவிட்டதாக வழக்குத் தொடுத்துள்ளது.

உலகின் மிகப் பெரிய கைப்பேசி விற்பனையாளர்களான நொக்கியா நிறுவனம் தனது தொழில் நுட்பங்களை ஆப்பிள் நிறுவனம் திருடிவிட்டதாக வழக்குத் தொடுத்துள்ளது.

மடிகணினியை பாதுகாப்பது எப்படி

மடிகணினியை பயணம் செய்யும் போது அதிக நேரம் பயன்படுத்த கூடாது.
POWER DISCHARGE ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு CHAGRE செய்ய வேண்டும்.

ORINIGAL CHARGER ரை பயன்படுத்துவது நல்லது. 

சிறு பிரச்சனை ஏற்ப்பட்டால் நாமாகவே மடிகணினியை கலட்டி பார்ப்பது மிகவும் தவறு. 

கணினியில் இருந்து வெப்பம் சரிவர வெளியேற வேண்டும் அல்லவா !அதனால் மடி கணினியை சமம்மான இடத்தில் பயன்படுத்த வேண்டும். 

அதிக நேரம் நம் மடியில் மடிகணினியை பயன்படுத்த கூடாது.(தோள் பாதிப்பு வரலாம்)மடிகணினிக்கு ஏற்ற SAFETY பேக் தேவை.
முன்று மாதத்துக்கு ஒரு முறை கணினியில் உள்ள இயங்குதளத்தை மாற்றுவது நல்லது. 

அடிக்கடி ஒரு மடிகணினியில் இருந்து மற்றோர் மடிகணினிக்கு BATTERY யை மாற்றி கொள்ளாமல் இருந்தால் நல்லது.

மடி கணினி காணமல் போய்விடலாம் அதனால் மடி கணினியின் SEIRAL NUMBER ரை குறித்து கொள்ளவேண்டும். 

நீங்கள் மடிக்கணியை சில நாள்கள் பயன்படுத்த முடியாமல் சுழில்நிலை ஏற்ப்பட்டால் (அதாவது வெளியூர் சென்றால்) மடிகணினியில் இருந்து BATTERY யை தனியாக கலட்டிவைக்கவேண்டும்

உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றி

உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக ஸ்பெய்ன் மருத்துவர்கள் தெரிவித்துள்னர்.
ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த 30 சத்திர சிகிச்சை நிபுணர்களினால் இந்த விசேட சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முழுவதுமாக சிதைவடைந்த முகமொன்றுக்கு பதிலாக மற்றுமொரு நபரின் முகமொன்றின் பாகங்கள் பொருத்தி இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் முழுவதுமாக குறித்த நபரின் முகம் சிதைவடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தாடை, மூக்கு, முகத் தோல், உதடுகள் மற்றும் பற்கள் உள்ளிட்ட பூரண முகப் பகுதியும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

முகமாற்று அறுவைச் சிகிச்சை 22 மணித்தியாலங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. 

இதற்கு முன்னர் பத்து முகமாற்று அறுவைச் சிகிச்சைகள் உலகில் இடம்பெற்ற போதிலும், இந்த அளவிற்கு மிகவும் சிக்கல் மிகுந்த முழு முகமாற்று அறுவை சிகிச்சையொன்று இதுவரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த மார்ச் மாதம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போதே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஐந்து வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டினால் குறித்த நபர் காயமடைந்ததாகவும் இதற்கு முன்னர் ஒன்பது தடவைகள் நடத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் பலனளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. 

சுவாசித்தல், உணவு உண்ணல், பேசுதல் போன்ற பல்வேறு அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது குறித்த நபர் அவதியுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

April 16, 2010

எலும்புகளுக்குப் பதிலாக…

எலும்பு தேய்மானம் என்பது எல்லா வயதினருக்கும் ஏற்படும் பாதிப்பாக இருந்து வருகிறது. எலும்புகள் தேய்ந்துவிட்டால் உடல் இயக்கம் பெரிதும் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க எலும்புகள் தானமாக கிடைப்பது அரிது.

இதுவரையில் டைட்டானியம் என்ற உலோகம் முலம் எலும்பு மாதிரிகள் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டு வந்தது. இது மிகவும் விலை உயர்ந்தது. மேலும் இவற்றில் சில குறைபாடுகளும் உண்டு. 

இந்த நிலையில் உலோகங்களைப் பயன்படுத்தாமல், செயற்கையாகவே எலும்புகளை தயாரித்து பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நிரு பித்துள்ளனர். ஸ்டெம் செல் முலம் எலும்புகளை வளர்த்து எடுக்கும் முறையில் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். 

ஆய்வகத்தில் சோதனைக் குழாயில் ஸ்டெம் செல் முலம் தாடை எலும்பை அவர்கள் வளர்த்துள்ளனர். இந்த முறையில் எந்த வடிவிலான எலும்பையும் வளர்க்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 

எதிர்காலத்தில் எலும்பு தேய்மான சிகிச்சையில் இந்த முறை புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர் : இந்தியர் சாதனை

புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.

ரத்தப் பரிசோதனை மூலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். டாக்டர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர். 

அசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (N.E.H.U) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும். 

கருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ரூபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார். 

'இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review