March 26, 2010

ஏசரின் லிக்விட் மொபைல்

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஏசர் நிறுவனத்தின் மொபைல் போன்கள் அண்மையில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உலகின் முதல் ஆண்ட்ராய்ட் 1.6 ஹை டெபனிஷன் போனாக, ஏசர் நிறுவனத்தின் லிக்விட் மொபைல் ஸ்மார்ட் போன் வந்துள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ராகன் (1GHz) என்ற ப்ராசசருடன் வந்துள்ள முதல் மொபைல் போனும் இதுவே.
 
இதில் 3.5 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் 480 x 800 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங் இணைந்த 5 எம்பி கேமரா, ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ், ஆக்ஸிலரேட்டர், செல்ப் டைமர், 2560 x 1920 ரெசல்யூசனுடன் தரப்பட்டுள்ளது.
 
புளுடூத், வை–பி, ஏ.ஜி.பி.எஸ். (AGPS)தொழில் நுட்பம் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப்பிற்கு துணைபுரிகின்றன.3G/GSM/GPRS/EDGE நெட்வொர்க் தொழில் நுட்பம் இயங்குகின்றன. வை–பி, புளுடூத் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.
 
உள்நினைவகம் 256 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.1350 mAh பேட்டரி தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசிட வழி தருகிறது.
 
இந்த போனின் தனிச் சிறப்பாக இதன் மூன்று ஹோம் ஸ்கிரீனைக் குறிப்பிடலாம். இதனால் பயன்படுத்தும்போது ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வெவ்வேறு விட்ஜெட்டுகளை அமைக்கலாம். இதன் வீடியோ ஸ்ட்ரீமிங் திறன் மிக அருமையான மல்ட்டிமீடியா அனுபவத்தினைத் தருகிறது.
 
வெள்ளை, கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் உள்ள இந்த போன் ஸ்டைலான வளைவுகளுடன் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ.24,900. இது சராசரி இந்திய விலையைக் காட்டிலும் கூடுதல் என்பதால், பல சலுகைத் திட்டங்களை எதிர்பார்க்கலாம்

கூகிள் குரோம் புதிய பதிப்பு 4 வெளியீடு!

கூகிள் தனது வலை உலாவியான குரோமின் புதிய பதிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. முன்பை விட அதிக பாதுகாப்புகள் மற்றும்
சில பிழைகளை நீக்கி சரிசெய்து வெளியிட்டுள்ளது.இப்போதைய தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளுமாறு உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய பதிப்புகளை வைத்து உள்ளோர் புதிய பதிப்பை மேம்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த புதிய பதிப்பில் முன்பை விட வேகம், பாதுகாப்பு, எளிமை போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

தரவிறக்கச்சுட்டி

காசநோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

காசநோய் ஏற்பட்டால் அதை குணப்படுத்துவது மிகவும் கடினமானது. இதற்கு நீண்டகாலம் மருந்து சாப்பிட வேண்டும். மருந்து சாப்பிட்டாலும் குணமாகாமல் ஏராளமானோர் உயிரிழந்து விடுகின்றனர்.ஆனால் இப்போது காசநோயை உடனடியாக குணப்படுத்தும் மருந்தை அவுஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

ஒருவர் உடலில் காசநோய் தாக்கி அடுத்தவருக்கு தொற்று ஏற்படுத்தும் நிலைவருவதற்கு முன்பு இந்த மருந்தை சாப்பிட்டால் சில நாட்களில் குணமாகி விடுகிறது. நீண்ட காலம் மருந்து சாப்பிட தேவையில்லை.

இந்த மருந்து தற்போது ஆய்வு நிலையில் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

உலகம் முழுவதும் 200 கோடி மக்களை காசநோய் தாக்கி இருக்கிறது. 58 நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மருந்தால் காசநோய் பெரிய அளவில் தடுக்கப்பட்டு விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

March 23, 2010

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.
இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.

நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை. எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின் ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த லாபமான கருவியை.

அதிவேக Opera பிரவுசர் வெளியீடு

விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10.50.  என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும்.

இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. வழக்கமான மெனு பாருக்குப் பதிலாக ரேடியோ பட்டன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம், ஆப்பரா தரும் அனைத்து வசதிகளையும் பார்த்து அறியலாம்.
 
 புதிய தொழில் நுட்பம் முழுவதையும் இது சப்போர்ட் செய்வதால், கண்களைக் கவரும் வகையில் இணைய தளங்களை அமைப்பவர்கள், இந்த பிரவுசரில் அவை நன்றாகக் காட்டப்படும் என நம்பி அமைக்கலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளின் ஏரோ கிளாஸ் இந்த பிரவுசரில் சப்போர்ட் செய்யப்படுகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review