February 15, 2010

பேஸ்புக்குக்கும்,ட்விட்டர்கும் சவாலாக கூகுள் வண்டு (Buzz)

தொட்ட இடங்களில் எல்ல்லாம் முதல்வனாக வரும் நம் கூகுளின் பெரிய சமூகவலைப்பின்னலாக வரும் கூகுள் வண்டு (இரை). பெயர் கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது. வண்டு எனபது எல்லா பூக்களில் இருந்தும் இரையைத் தேடி எடுத்து அதை கூட்டில் சேமித்து வைக்கும் அதே தான் இந்த கூகுள் வண்டு (Buzz)

முதலில் இந்த கூகுள் பஸ் என்ன வேலை செய்கிறது என்று பார்ப்போம் கடந்த ஆறுமாதமாக மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேஸ்புக்கும் டிவிட்டரும் தான். 

மக்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் புகைப்படம் வீடியோ என அத்தனையையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர் அதனால் மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது கொஞ்சம் குறைந்துள்ளது இந்த பிரச்சினையை மையமாக வைத்துதான் கூகுள் லைவ் தேடுதல் வந்தது நமக்கு தெரியும் ஆனாலும் எதிர்பார்த்த அளவு பெரியதாக மக்கள் அதை பயன்படுத்துவதில்லை. 

இதற்காக கூகுள் உலகிலே அதிகளவு பயன்படுத்தும் தன் ஜிமெயிலை வைத்து காய் நகர்த்தியிருக்கிறது, ஜிமெயிலில் புதிதாக வந்துள்ளது 'Buzz' என்ற வசதி இதன் மூலம் நாம் செய்தி,படம், வீடியோ மற்றும் ஃபீட்ரீடர் என்ற அனைத்து வசதியையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம். 

உதாரணமாக நாம் விரும்பும் பிளிக்கர் புகைப்படத்தை நம் நண்பருடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். அதே போல் வீடியோ,டிவிட்டர் மற்றும் ஃபீட்ரீடர் வசதியை கூட பயன்படுத்தலாம்.இதை எல்லாம் விட பெரிய சிறப்பு இந்த வசதியை மொபைலிலும் பயன்படுத்தலாம். 

இத்தனையையும் ஜிமெயிலிலே செய்யலாம் என்றால் கொஞ்சம் அல்ல அதிகமாகத்தான் ஆவல் இருக்கிறது ஆனால் இப்போது இந்த கூகுள் வண்டு பயன்படுத்த சிலருக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

February 13, 2010

நல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி

நீங்கள் கேமரா அல்லது கேமரா வசதி உள்ள மொபைல் வாங்கப்போவதாக வைத்துக் கொள்ளுவோம். அந்த கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்.

உங்கள் நண்பர்கள் அந்த கேமரா வைத்து இருந்தால் நீங்க அவற்றை உபயோகித்து பார்த்து அவற்றின் புகைப்படங்களின் துல்லியத்தை அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்தில் பல்வேறு கேமராக்களில் எடுத்த புகைப்படங்களின் மாதிரிகளை சிலர் தரவேற்றி இருப்பர். அவையும் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன.
அவற்றை கேமரா மாடல் எண்ணை கூகுளில் தேடி கண்டுபிடித்து பல காமெராக்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு கொள்ளமுடியும். நீங்கள் விரும்பும் கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நேரம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தற்போது அதிக புகைப்படங்களுடன் உள்ள ஒரு தளம் புகைப்படங்களை கேமரா மாடல் வாரியாக பிரித்துக் காட்டுகிறது.
கூகிள் பிகாசா இணையதளம். பயனர்கள் புகைப்படங்களை தரவேற்றி கொள்ளும் சேவையையை வழங்குகிறது என்பதனை பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அங்கே உள்ள புகைப்படங்களை நீங்கள் பார்த்த்துக் கொள்ள முடியும். இப்போது புது வசதியாக நீங்கள் அங்கே குறிப்பிட கேமரா மாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தேடி பார்த்துக் கொள்ளலாம்.
Picasaweb இணைய தளத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே நீங்கள் தேட விரும்பும் புகைப்படங்களை தேடுங்கள். உதாரணத்திற்கு நான் 'india' என்று தேடுகிறேன். எல்லா புகைப்படங்களும் தோன்றும். இடது புறத்தில் 'Show Options' கிளிக் செய்து கொண்டு, அங்கே காமெரா மாடலை தேர்வு செய்து கொண்டு எண்டரை தட்டுங்கள். நீங்கள் விரும்பிய கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தோன்றும்.
Sony DSC-W50 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. Canon EOS 40D -இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. மொபைல் போன் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மொபைல் மாடல் கொடுத்து தேடுவதன் மூலம் பெறலாம். Sony Ericsson K800i மொபைல் மூலம் எடுக்கபட்ட புகைப்படங்கள் இங்கே.
இவ்வாறு கேமரா மாடல்களை குறிப்பிட்டு அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு உங்களுக்குத் தேவையான மிகச்சரியான காமெராவை தேர்ந்தெடுத்துக் கொள்ள பிகாசாவின் இந்த வசதி உதவுகிறது.

இளம் வயதில் வரும் `ஹார்ட் அட்டாக்’

- சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் டென்ஷன் ஆகிறீர்களா?
- பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுகிறீர்களா?
- எதற்கெடுத்தாலும் முக்கு நுனியில் கோபத்தை கொண்டு வருகிறீர்களா?’
இத்தனைக்கும் ஆம் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சிங்கள். இல்லாவிட்டால் இளம் வயதில்கூட `ஹார்ட் அட்டாக்’ வரும் அபாயம் உள்ளது.
ஆத்திரபடும் போது `ஸ்ட்ரெஸ்’ அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. அட்ரினலின் சுரப்பி அதிக வேலை செய்கிறது. அதனால் இதய தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைபடுகிறது. அப்படி கிடைக்காதபோது `ப்ளேட்லெட்ஸ்’ என்ற பிசுபிசுப்பான திரவம் சுரந்து, த்தக்குழாய்களில் படிந்து, அதில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக் குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும்.
உணவு மற்றும் பழக்க வழக்க முரண்பாடே இதய பாதிப்பிற்கு அடிபடை காரணியாக இருக்கிறது. ஆனாலும், மன அழுத்தம் ஆகும் போது தான் அதிக பாதிப்பு இதயத்தில் ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் போன்றவற்றால் ரத்த அழுத்தம் ஏற்படுபவர்களைவிட ஆத்திரம் மற்றும் டென்ஷன் அடைபவர்களுக்குத் தான் மன அழுத்தம் அதிகம். மற்ற இதயநோயாளிகளை விட `டென்ஷன் பார்ட்டிகளை’ நான்கு மடங்கு அதிகமாக இதயநோய் தாக்கும்.
அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சிடன் வாழ முன்வர வேண்டும்.

சூரியனில் ஆய்வு நடத்த நாசா திட்டம்

சூரியனில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் “நாசா” நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் நிகழும் அதிசயங்கள், இதன் மூலம் பூமியில் ஏற்படும் குழப்பங்களுக்கும் தீர்வுகாண முடியும்.இதற்காக வருகிற 9-ந்தேதி முதல் விண்வெளியில் காப்ளக்ஸ்-41 என்ற ஆய்வ கத்தை ஏற்படுத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. இங்கிருந்து 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

மொபைலில் கால் வைக்கும் ‘பயர்பொக்ஸ்’



அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு உலகத்தில் முதலாவதாக இருக்கும் பயர்பொக்ஸ் இணைய உலாவி இனி மொபைல் துறையிலும் கால் பதிக்க இருக்கிறது.

இணையத்தில் பாதுகாப்பு, அதிக அளவு வசதிகள்,எல்லா செயல் நிரல்களும் சரியாக தெரிவதாக இருக்கட்டும் அனைத்திலும் பயர்பொக்ஸ்  தனி முத்திரை பதித்ததுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
 
அந்த அளவிற்கு கணினியில் முதலிடத்தில் உள்ள இணைய உலாவி பயர்பொக்ஸ் இன்னும் மொபைலில் சிறப்பாக வரவில்லையே என்று நினைப்பவர்களுக்கு உண்மையிலே மகிழ்ச்சியான செய்தி தான் இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பயர்பொக்ஸ் இனி மொபைலிலும் வரப்போகிறது.
 
அனைத்து வசதிகளும் கொண்டு பயர்பொக்ஸ் இணைய உலாவி Nokia N90-ல் முதன் முதலாக வரப்போகிறது.
 
டிவிடரிலிருந்து யூடியுப் வரை அனைத்தும் பயன்படுத்தும் வண்ணம் தயாராகி இருக்கிறது. இதைத் தவிர புக்மார்க் ,பாஸ்வேர்ட்ஸ் சேமித்து வைத்தல் போண்ற எண்ணற்ற வசதிகளும் இதில் உள்ளது. இதுவரை அதிக அளவு பயனாளர்களை கொண்டு மொபைல் உலாவியில் முதலிடத்தில் இருந்து வந்த ஒபேரா (opera)-க்கு சரியான போட்டியாக பயர்பொக்ஸ்  மொபைல் இணைய உலாவி வந்துளளது.
 
இதை மேலும் விரிவுபடுத்தி அனைத்து லேட்டஸ்ட் மாடல் மொபைலும் சப்போர்ட் செய்யும் வகையில் விரைவில் வர இருக்கிறது.
 
அதைப்போல் மொபைல் மூலமாக ஹக் செய்வதும் இனி அதிகஅளவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review