February 02, 2010

கணிணி வேகம் அதிகரிக்க

நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் .

நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும். 

ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம்.

February 01, 2010

ஹேக்கர்களின் புதிய இலக்குகள்

கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது. 

அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் புரோகிராம்களுக்குள் புக முயற்சிப்பதனையும் ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கேற்ற வகையில் அவற்றை முறியடிக்க தங்கள் நிறுவனம் பேட்ச் பைல்களைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இவற்றுடன் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஆப்பிள் நிறுவனத் தின் குயிக் டைம் புரோகிராமில் இத்தகைய தாக்குதல்கள், அண்மைக் காலங்களில் அதிகமாகி உள்ளதையும் மேக் அபி நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது. 

மேலும் இது பற்றிக் கூறுகையில், சோஷியல் நெட்வொர்க் தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் இந்த தாக்குதல் அதிக அளவில் இந்த ஆண்டு இருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளது. 

ஆனால் பன்னாட்டளவில் இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த சைபர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டு அமலாக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த வகை குற்றங்கள் குறையவும் வாய்ப்புகள் உள்ளன.

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

விண்டோஸ் 7 வெளியானதிலிருந்து அதன் பரபரப்பு பற்றிக் கொண்டது. விண்டோஸ் 7 பற்றி எல்லா தரப்பினரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வருகின்றன. விண்டோஸ் 7 ஐ நிறுவுதல் அல்லது மேம்படுத்தலும் இலகுதான் ஆனால் உடனடியாக செய்யலாமா செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பற்றி கேள்விகள் எழலாம் அவற்றை பற்றி பார்க்கலாம்.ஏன் அப்கிரேட் செய்ய வேண்டும்?

1. விண்டோஸ் 7 நீங்கள் எங்கிருந்தும் கணணியை இயக்குவதை இலகுவாக்கிறது. அனைத்து டேட்டாக்களையும் பாதுகாப்பாக கையாள உதவுகிறது. நாளந்த நடவடிக்கைகளை சற்று இலகுவாக்குகிறது.

2. உங்கள் தகவல்களுக்கு அதிக பாதுகாப்பளித்தல். விண்டோஸ் 7 இல் இருக்கும் NAP எனும் தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பை நெட்வேர்க் கணணிகளுக்கு வழங்குகிறது. தேவையற்ற அப்பிளிகேஸன்களை நிறுத்தி வைக்க உதவுகிறது.

3. விண்டோஸ் 7 இலகுவாக மனேஜ் செய்து கொள்ள முடிகிறது. இதற்கு MDOP எனும் தொழில்நுட்பம் உதவுகிறது.

4. விண்டோஸ் 7 விஸ்டாவை தழுவிய பதிப்பு போன்று தோன்றினாலும் விஸ்டாவை விட அதிக நிலையான (Stable) பதிப்பாக இருக்கிறது. விஸ்டாவை விட வேகமாகவும் குறைவான வழங்களை பயன்படுத்தியும் இயங்குகிறது. மற்றைய இயங்கு தளங்களை விட அதிக Performance ஐ காட்டுகிறது.

மேம்படுத்த முடிவு செய்து விட்டீர்களெனில் அதிலுள்ள சிக்கல்கள் என்ன?

1. அனைத்து மென்பொருட்களும் இயங்குமா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? மற்றும் நிலையான பதிப்பென்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது. இந்த சிக்கலில் இருந்து விடுபட நீங்கள் பாவிக்கும் மென்பொருட்களின் நிறுவனங்களின் இணையத்தளங்களை தொடர்பு கொண்டு அவர்களின் பதிப்புக்கள் விண்டோஸ் 7 க்கு இசைவாக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதாகும்.

2. அப்பிளிக்கேஸன் மைகிரேஸன் என்பது சிறிய, பெரிய நிறுவனங்களுக்கு பொருந்தும். விஸ்டா பதிப்பு வெளியாகும் போதும் இதே சிக்கலை இந்நிறுவங்கள் எதிர்கொண்டது. இன்னும் விரிவாக கூறினால் நிறுவனத்துக்கென உருவாக்கப்பட்ட அப்பிளிகேஸன் கள் விண்டோஸ் 7 ற்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு முழுவதுமாக விண்டோஸ் 7 க்கு மாறுவதற்கு முதல் வியாபார அப்பிளிகேசன்களை ஒரு சில கணனிகளில் பரீட்சித்து விட்டு மேலும் தொடர்வது தீர்வாக இருக்கும் .

January 31, 2010

பீர் குடித்தால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது

பீர் குடிப்பது ஆண்களின் உடல் நலத்தை பாதிக்காது என்ற கருத்து நிலவுகிறது. தற்போது இது பெண்களின் உடல் நலத்துக்கும் நல்லது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக தினமும் ஒரு கோப்பை பீர் அருந்தும் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை ஜெர்மனியில் உள்ள ஹெய்டல் பர்க் கேன்சர் ஆய்வு மையம் நடத்தியுள்ளது. பீர் மதுபானத்தில் உள்ள சக்தி வாய்ந்த மூலக் கூறுகள் மார்பக புற்று நோயில் இருந்து பெண்களை காப்பாற்று வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பொதுவாக பீர் மது பானத்துக்கு மனமூட்டுவதற்காக ஒருவகை மலரை பயன்படுத்துவார்கள். அதில் உள்ள ஷான்தோகியூமோல் உடல் உறுப்பில் இருந்து டெஸ்போஸ்டெரோன் மற்றும் ஆஸ்ட்ரோஜெனை அதிக அளவில் சுரக்காமல் தடுக்கிறது. 

அது பி.எஸ்.ஏ. என்ற புரோட்டீன் அதிக அளவில் உற்பத்தியாகாமல் தடுத்து நிறுத்துகிறது. அது மார்பக புற்று நோய் வராமல் பெண்களை பாதுகாக்கிறது. இந்த ஆய்வு தற்போதுதான் முதல் கட்டத்தில் உள்ளது. தொடர்ந்து நடைபெறும் ஆய்வின் மூலம் மார்பக புற்று நோய் மட்டுமின்றி புற்று நோய் வராமல் தடுக்க பீர் உதவும் என்று தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோமேக்ஸ் புதிய வகை செல்போன் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்‌போது, புதிய ரக எம்.டி.வி., எக்ஸ் 360 என்ற பிராண்ட் பெயரில் செல்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செல்போன் புளூடூத் வசதி, 3டி மியூசிக், 8 ஜி.பி., நினைவகத்திறன், வீடியோ ரெக்காடர், இரண்டு சிம்கார்ட் வசதி, ஜி.பி.ஆர்.எஸ்., உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இடப்பெற்று உள்ளன. 

எம்.டி.வி., நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த செல்போனை அறிமுகப் படுத்தி உள்ளதாக, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review