January 11, 2010

செயற்கை ரத்தசெல்கள் தயாரிப்பு : இந்தியர் சாதனை

உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிப்பது ரத்தம். நாம் உண்ணும் உணவு, பல மாறுதல்களுக்குப் பிறகு ரத்தமாக மாறுவது இயற்கை வினோதங்களில் உச்சமாகும்.

ஆபத்துக் காலத்தில் உயிரைத் தாங்கிப் பிடிப்பதில் ரத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும் ரத்தப்பிரிவுகள் வேறுபடுவதால் எல்லோருக்கும் தேவையான ரத்தம் உடனடியாக கிடைப்பதில்லை. இதற்காக ரத்தத்தை உறையவைத்தல், தனித்தனி ரத்தசெல்களாக பிரிப்பது என பல வழிகளில் ரத்தத்தை பிரித்து சேமித்து பயன்படுத்துகிறோம்.


விஞ்ஞான வளர்ச்சியில் ரத்தசெல்களை வளர்த்து செயற்கையாக ரத்தம் உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது செயற்கையாகவே ரத்த செல்கள் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த ரத்த செல்களை உருவாக்கியவர் அமெரிக்கவாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் வேதியல் பிரிவு பேராசரியராக பணியாற்றி வரும் சாமிர் மித்ராகோத்திரி என்பவர்தான் இந்த ரத்த செல்களை உருவாக்கி உள்ளார். இவர் 1992-ம் ஆண்டில் மும்பையில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் ஆவார்.

இவர் உருவாக்கி இருப்பது, ரத்த சிவப்பணுக்களாகும். இது 90 சதவீத அளவில் இயற்கை ரத்த செல்கள் போலவே செயல்படுகிறது. மிருதுவானதாகவும், நெகிழும் தன்மையுடனும் இருப்பதோடு ஆக்சிஜனை எடுத்துச் செல்வதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு ரத்தத் தேவையை நிறைவேற்றும், நோய் எதிர்ப்புத்தன்மையுடன் கூடிய ரத்தமாக உட்செலுத்தும் புதிய மருத்துவ முறையாகவும் பயன்படும் என்று தெரிகிறது.

மித்ராகோத்திரி, ஏற்கனவே சிறப்புத் தன்மை கொண்ட பாலிமரை உருவாக்கி சாதனை படைத்தவர் எனது குறிப்பிடத்தக்கது.

January 10, 2010

உலகத்தின் அதிவேக ரயில் சீனாவில் இயக்கம்

சீனாவில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன ரயில்கள் கடந்த வாரம் இயக்கி வைக்கப்பட்டது. ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அதிவேக ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.


ஜப்பான் ரயில் 243 கிலோ மீட்டர் வேகத்திலும், பிரான்ஸ் ரயில் 277 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டியையொட்டி சீனாவில் அதிவேக ரயில்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த ரயில்கள் 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உஹான் நகரிலிருந்து தெற்கு பகுதியில் உள்ள குவாங்சு நகர் வரை இந்த அதிவேக ரயில் சென்று வருகிறது. ஆயிரத்து 68 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த பகுதியை அதிநவீன ரயில் நான்கு மணி நேரத்தில் கடக்கின்றன.

வர்த்தகம் அதிக அளவில் நடக்கும் தெற்கு பகுதியில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதால், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும், என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 42 தடங்களில் இந்த அதிநவீன ரயில் இயக்கப்பட உள்ளது. சோதனை ஓட்டத்தின் போது, இந்த அதிவேக ரயில், 400 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல்

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும்' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. `அல்ஷ் கெய்மெர்ஷ்' என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது.

இந்த நோயை ஜெர்மனியை சேர்ந்த `ஆலியோஸ்' என்ற விஞ்ஞானி கடந்த 1906-ம் ஆண்டு கண்டு பிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து செல்போன் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.


அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை செல்போன்கள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.

இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் செல்போனில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

January 09, 2010

வீவோ மியூசிக் வீடியோ வெப்சைட்

யு–ட்யூப் மற்றும் உலகின் முன்னணி இசை நிறுவனங்கள் இணைந்து வீவோ (VEVO) என்ற பெயரில் ஒரு மியூசிக் வீடியோ வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

யு–ட்யூப்புடன் யுனிவர்சல் மியூசிக் குரூப் , சோனி மியூசிக் என்டர்டெய்ன்மென்ட், இ.எம்.ஐ., ஏ.டி அண்ட் ட்டி மற்றும் அபுதாபி மீடியா கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் கை கோர்த்துள்ளன. இந்த திட்டத்திற்கென இந்த நிறுவனங்கள் 30 கோடி டாலர் வழங்கியுள்ளன.


தற்போது இந்த இணைய தளத்தில் 5,191 கலைஞர்களின் 14,675 வீடியோக்கள் உள்ளன. 20 வகையான வீடியோ இசை ஆல்பங்கள் கிடைக்கின்றன. இந்த தளத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் தாங்கள் விரும்பும் வகையில் பிளே லிஸ்ட்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வகையில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பிளே லிஸ்ட்டுகள் உள்ளன.

சூரிய மண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள் : நாசா கண்டுபிடிப்பு

சூரியமண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளதாக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

டெலஸ்கோப் டெல்டா - 2 என்ற டெலஸ்கோப், ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் மிகப்பெரிய காமிரா பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த டெலஸ்கோப் தொடர்ந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இந்த டெலஸ்கோப் 5 கிரகங்களை கண்டுபிடித்து உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.


இந்த 5 புதிய கிரகங்களும் நெப்டினை விட பெரியவை. இந்த கிரகங்களுக்கு 4 பி, 5 பி, 6 பி, 7 பி, 8 பி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த 5 கிரகங்களும் பூமியை விட 4 மடங்கு பெரியவை ஆகும்.

இவை சூரியனுக்கு நெருக்கமாக உள்ளன.அவை 3.2 நாட்கள் முதல் 4.9 நாட்களுக்கு ஒருமுறை தம்மைத்தாமே சுற்றி வருகின்றன.

சூரியனை விட இந்த 5 கிரகங்களும் அதிக வெப்பம் மிகுந்தவை என்றும், மிகுந்த பிரகாசமான இந்த கிரகங்களில் 1200 முதல் 1650 சென்டி கிரேடு வரை வெப்பம் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review