December 24, 2009

உலகின் மிகப் பெரிய திரை கொண்ட முதல் தரமான மொபைல்


எச்.டி.சி. நிறுவனத்தின் அதி நவீன தொழில் நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் தரும் வகையில் மிகச் சிறப்பான மொபைலாக எச்.டி.2 மொபைல் வெளிவந்துள்ளது.
விண்டோஸ் இயக்கத்தில் புதியமுறை டச் போனாக வடிவமைக்கப்பட்டு, நாம் இதுவரை மொபைல் ஒன்றில் பெறத் துடித்த அனைத்து அனுபவங்களையும் தருவதாக இந்த மொபைல் உள்ளது. 2009 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த போனாக எச்.டி.சியின் எச்.டி.2 (HTC HD 2)தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
முதலில் நம்மை ஆச்சரியப்படுத்துவது இதுவரை நாம் காணாத 4.3 அங்குல அகல டச் சென்சிடிவ் திரை. கெபாசிடிவ் டச் என அழைக்கப்படும் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ப்ராசசிங் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் என்பதால், மிக மென்மையாகத் திரையைத் தொட்டாலே, அதற்கான செயல்பாடு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது. எச்.டி.சி. நிறுவனத்தின் தாரக மந்திரமான “இது என்னுடையது; எனக்கு மிக நெருக்கமானது; எதிர்பாரததைத் தேடித்தருவது” என்பதனை முழுமையாக மேற்கொண்டிருக்கும் மொபைல் இது. இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் வகையில் மெயில், காலண்டர், மெசேஜிங், பிரவுசர் என அனைத்தையும் அமைத்துக் கொள்ளலாம். முக்கிய இணைய தளங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கான ஷார்ட் கட்களை அமைத்து, அவற்றின் மீது செல்லமாக மெல்லத் தட்டி இணைப்பினைப் பெறலாம். நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் நேரத்திற்கேற்றபடி இதன் கடிகார நேரம் மாறும். வெளியே நிலவும் சீதோஷ்ணநிலையை திரையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இமெயில், எஸ்.எம்.எஸ். போன் லாக், பேஸ்புக் அப்டேட்டிங் ஆகியவற்றை அந்த நபர்களின் போட்டோ தெரிவதைக் கொண்டு அறியலாம். 
அழைப்பு ஒன்று கிடைக்கையில் அதனை கான்பரன்ஸாக மாற்ற வேண்டும் என விரும்பினால், மற்றவர்களின் போட்டோக்கள் மீது சிறிய அளவில் தட்டினால் போதும். அனைவரும் கூடிவிடுவார்கள். இதன் தொடு உணர்ச்சியைச் சொல்லால் விவரிக்க முடியாதது. மெலிதாகத் தொட்டாலே, இணைய தளங்கள் விரிகின்றன; சுருங்குகின்றன. படங்கள் மற்றும் இமெயில்களும் அதே போல் இயங்குகின்றன. இதில் கிடைக்கும் பெரிய ஆன் ஸ்கிரீன் கீ போர்டு மூலம், வெகு வேகமாகவும் எளிதாகவும் மெசேஜ் டைப் செய்திட முடியும். இந்த போன் இருந்தால் வை–பி இணைப்பு கொண்ட லேப் டாப் எல்லாம் தேவையில்லை. இந்த போன் 3ஜி செல்லுலர் நெட்வொர்க்குடன் இணைந்து வேகமாகச் செயல்படுகிறது.

இதில் உள்ள 5 மெகா பிக்ஸெல் கேமரா அழகான படங்களை எடுத்துத் தருகிறது. 157 கிராம் எடையில் 120.5×67x11மிமீ பரிமாணங்களுடன் கைக்கு அடக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்., ஸ்பீக்கர் போன், பலவகை பார்மட்டுகளில் உள்ள ரிங் டோன்களைக் கையாளும் வசதி, 448 எம்பி ராம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைப்பு வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, டபிள்யூ லான், புளுடூத் என அனைத்து தொழில் நுட்பங்கள், வீடியோ ரெகார்டிங், ஆர்.டி.எஸ். இணைந்த ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, வாய்ஸ் மெமோ, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அறிந்து செயல்படுதல், தொடர்ந்து 6 மணி 20 நிமிடங்கள் பேசும் வசதி, 12 மணி நேர இசை கேட்கும் வசதியைத் தரும் லித்தியம் அயன் 1230 ட்அட பேட்டரி என அனைத்து நவீன வசதிகளையும் கொண்டு இந்த போன் இயங்குகிறது.

டாட்டா டொகொமோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் பயன்படுத்தும் அனுபவத்தினைத் தருவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளைத் தங்கள் விற்பனை மையங்களில் மேற்கொண்டுள்ளது. அத்துடன் அறிமுகச் சலுகையாக மாதம் 500 எம்பி டவுண்லோட் செய்திடும் வசதியுடன் ஆறு மாத இன்டர்நெட் இணைப்பினை இலவசமாகத் தருகிறது.

December 22, 2009

சூரிய குடும்பத்தில் மேலும் 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்தில் பூமி, செவ்வாய், புதன் உள்ளிட்ட கிரகங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது மேலும் 3 புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இவற்றை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பூமியை விட பெரியது.


இங்கிலாந்தில் நியூசவுத் வேல்ஸ்சில் உள்ள ஆங்கிலோ - ஆஸ்திரேலியன் டெலஸ்கோப் மூலமும், ஆஸ்திரேலியாவில் ஹவாலியில் உள்ள `கெக்' டெலஸ்கோப் மூலமும் அடையாளம் கண்டனர். 


இந்த புதிய கோள்களும் பரப்பளவில் பூமியை விட 5 முதல் 25 மடங்கு பெரியது. இது சூரியனில் இருந்து 27.8 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது. இவற்றை வெறுங்கண்ணால் பார்க்க முடியும்.

பிரசவத்தில் சிசேரியன் எதற்காக?

எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்ட பின்பு தான் கவனிக்க முடியும். கணிக்க முடியும். அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.


எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

பெரும்பாலோர் முதல் தடவை சிசேரியன் செய்வதால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.

முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாரலும் கணிக்க முடியாது. எனவே முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியாதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.

சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு, இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது 10,15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.

சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.

December 21, 2009

விமானந்தாங்கிக் கப்பல் மீதான ஒரு பார்வை

நாடுகளுக்கிடையிலான யுத்தங்களின் போது விமானப்படையின் பணி பிரதானமானதாகக் காணப்படுகின்றது. எதிரி நாடுகளின் உட்கட்டுமானங்களைச் சிதைப்பதில் விமானப்படையின் பங்கே மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

தொலைவிலுள்ள நாடுகளுடனான யுத்தங்களின் போது விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் வெடிபொருள் நிரப்புதலுக்கான தளங்களைத் தெரிவுசெய்வதிலுள்ள சிரமங்களைத் தவிர்ப்பதன் பொருட்டே விமானந்தாங்கிக் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நவீன யுத்த விமானங்களுக்கு வானிற் பறப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி காணப்பட்ட போதிலும் வெடிபொருள் மீள் நிரப்புகைக்காகத் தளங்கள் தேவையாகவேயுள்ளன.

விமானந்தாங்கிக் கப்பல்களின் வரலாறு வளிக்கூடு தாங்கிகளின் (Balloon Carrier) உருவாக்கத்திலிருந்தே ஆரம்பமாகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கடற்கண்காணிப்புப் பயன்பாட்டிற்கான வளிக்கூடுகளைத் (Balloon) தாங்கிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட கடற்கலங்களே விமானந்தாங்கிக் கப்பல்களின் எண்ணக்கருவிற்கு அடித்தளமிட்டது. 1910 ஆம் ஆண்டளவில் அமெரிக்கக் கடற்படையின் குருஸ் வகை கப்பலில் இருந்தே உலகின் முதலாவது விமானந் தாங்கிக் கப்பலில் இருந்தான வான்பறப்பு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலக யுத்தக் காலப்பகுதியில் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஜப்பானியக் கடற்படைகளால் Escort வகை விமானந்தாங்கிக் கப்பல்கள் பெருமளவிற் பயன்படுத்தப்பட்டன. இவ்வகை விமானந்தாங்கிக் கப்பல்களின் உற்பத்திச்செலவு குறைவாகக் காணப்பட்ட படியால் அவை அதிகளவிற் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் கண்டறிபப்பட்ட இவ்வகை விமானந்தாங்கிக் கப்பல்களின் வினைத்திறன் குறையாடு விமானந்தாங்கிக் கப்பல்களின் தொழினுட்ப மேம்பாட்டுக்கான தேவையை உணர்த்தின. இரண்டாம் உலகப்போரின் பின்னர் விமானந்தாங்கிக் கப்பல்கள் தொழினுட்ப மற்கும் வினைத்திறனில் பாரிய வளர்ச்சியைக் கண்டன.

பொதுவாக விமானந் தாங்கிக் கப்பல்கள் ஏனைய போர்க்கப்பல்களுடன் ஒப்பிடும்போது குறைந்தளவு போராயுதங்களையே கொண்டிருப்பதுடன் தாக்குதல் வலுக் குறைந்ததாகவும் காணப்படுகின்றன. இதன் காரணமாக விமானந்தாங்கிக் கப்பல்கள் அவற்றுடன் விரைவு தாக்குதற்கலங்கள், நாசகாரிக்கப்பல்கள் போன்றவற்றைக்கொண்ட அணியாகவே செயற்படுகின்றன.

நவீன விமானந்தாங்கிக் கப்பல்கள் விமானங்கள் மேலெழுதல் (Take-off) மற்றும் தரையிறங்கல் (Landing) போன்ற செயற்பாடுகளைச் செய்யக்கூடியவாறு தட்டையான மேற்பரப்பை உடையவையாகக் காணப்படுகின்றன. விமானங்கள் கப்பலிலிருந்து கப்பலின் முன்புறக்தால் மேலெழுந்து தரையிறங்கும்போது கப்பலின் பின்புறத்தால் தரையிறங்குகின்றன. சில விமானந்தாங்கிக் கப்பல்கள், விமானங்கள் அவற்றிலிருந்து மேலெழும்போது, குறிப்பிட்டதோர் வேகத்தில் முன்நோக்கி நகர்ந்து விமானத்தின் சார்புவேகத்தை அதிகரிக்கின்றன. இதன்காரணமாக விமானம் கப்பலின் மேற்பரப்பில் குறைந்தளவு வேகத்தில் ஓடி மேலெழ முடிகின்றது. ஆயினும் நவீன விமானந்தாங்கிக் கப்பல்களில் விமானம் மேலெழும்போதான வேகத்தை அதிகரிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு விசைப்பொறி (Catapult) பயன்படுத்தப்படுகின்றது.

விமானத்தின் முன் சக்கரத்துடன் பொருத்தப்படும் இவ் விசைப்பொறியானது விமானத்தை உந்தித் தள்ளுவதன் மூலம் விமானம் மேலெழுவதற்குத் தேவையான வேகத்தை அதிகரிப்பதோடு மிகக் குறுகிய தூர ஓட்டத்துடன் விமானம் மேலெழுவதற்கும் உதவுகின்றது.


விமானந்தாங்கிக் கப்பல் ஒன்றில் விமானம் ஒன்று தரையிறங்கும்போது விமானத்தின் வாற்பகுதியிலுள்ள கொழுவியமைப்பானது (Tailhook) கப்பலின் மேற்தளத்திலுள்ள வடம் (Arrestor wire) ஒன்றினை பற்றிப்பிடிப்பதன் மூலம் விமானத்தின் வேகம் மிகக்குறுகிய தூரத்தினுள் சடுதியாக ஓய்விற்குக் கொண்டுவரப்படுகின்றது.

விமானந்தாங்கிக் கப்பல்களின் மேற்தளத்தில், இடதுபக்கமாக Island என்றழைக்கப்படும் கப்பலின் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைந்திருக்கும். மிகச்சில கப்பல்கள் இக்கட்டுப்பாட்டுக் கோபுரம் இல்லாது வடிவமைக்கப்படுகின்றன. அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் அவர்களின் பணிகளிற்கேற்ப வெவ்வேறான நிறக்களினாலான உடைகளை அணிந்திருப்பர்.

பிரித்தானிய றோயல் கடற்படையால் முதலாவதாக வடிவமைக்கப்பட்டு பின்னர் பலநாட்டுக் கடற்படைகளாலும் பயன்படுத்தப்படும் அண்மைக்கால விமானந்தாங்கிக் கப்பல்களின் வடிவம் அவற்றின் முன்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து காணப்படும். இவ்வகையான கப்பல்கள் குறுந்தூர ஓட்டத்துடன் மேலெழவல்ல Sea Harrier வகை விமானங்களை கருத்திற்கொண்டே வடிவமைக்கப்பட்ட போதிலும் சாதாரண விமானங்களுக்கும் இவை ஏற்றவையாகவே காணப்படுகின்றன. இவ்வகைக் கப்பல்களின் சிறப்பான மேற்தள வடிவமைப்புக் காரணமாக இவ்வகைக் கப்பல்களில் விமானத்தை உந்தித்தள்ளும் விசையமைப்போ (Catapult) அல்லது தடுப்புவடமோ (Arrestor wire) தேவையில்லை. இருந்தபோதிலும் அதிக சுமையினைக் காவவல்ல விமானங்களான Super Hornet மற்றும் Sukhoi Su-33 வகை விமானங்களுக்கும் E-2 Hawkeye வகை வேகம்குறைந்த விமானங்களுக்கும் இவ்வடிவமைப்புப் பொருத்தமற்றே காணப்படுகின்றது. இதன்காரணமாக, அமெரிக்க வடிவமைப்பாளர்கள் இவ்வடிவமைப்பை வரவேற்கவில்லை.

அமெரிக்கக் கடற்படை அணுசக்தியில் இயங்கும் பாரிய விமானந்தாங்கிக் கப்பல்கள் பதினொன்றை தமது கடற்படைச் சேவையில் ஈடுபடுத்துகின்றது. அமெரிக்கக் கடற்படையே உலகில் அதிகளவான விமானந்தாங்கிக் கப்பல்களைப் பயன்படுத்தும் கடற்படையாகும். அமெரிக்கக் கடற்படை இருபத்திநாலு மணிநேரத்தினுள் உலகின் எப்பாகத்திற்கும் செல்லக்கூடியவாறு தனது விமானந்தாங்கிக் கப்பலணியைத் தயார்நிலையில் வைத்திருக்கின்றது. அமெரிக்கா தவிர்ந்து பிரான்ஸ், சீனா, இந்தியா, ரஸ்யா போன்ற நாடுகள் தமக்கான நவீன விமானந்தாங்கிக் கப்பல்களை உருவாக்குகின்றன. ரஸ்யா 2050 ஆம் ஆண்டளவில் 60000 மெற்றிக் தொன் காவுதிறன் கொண்ட உலகின் மிகப்பொரும் விமானந்தாங்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்துடன் செயலாற்றி வருகின்றது.

கூகுல் போன்

ஐபோனைப்போல கூகுல் போன் வெற்றி பெறுமா என்று தெரியவிலை.ஆனால் கூகுல் போன் அறிமுகப்போவது உறுதி என தெரிய வந்துள்ளது.

கூகுல் போன் தொடர்பான ஆருடங்களும் கணிப்புகளும் வதந்திகளாக உலா வந்து தற்போது செய்தியாக வலுப்பெற்றுள்ளது.கூகுல் அதிகர்ரப்பூர்வமாக இன்னும் வாயைத்திறக்கவில்லை என்றாலும் கூகுல் போன் தொட‌ர்பான‌ செய்திக‌ள் இண்டெர்நெட்டில் தெறித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌.

கூகுல் போன் தோற்றம் இது தான் என்று டிவிடரில் புதிய போனின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் கூகுல் போன் அதன் ஊழியர்களூக்கு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி அமளி துமளியாக்கியது.

எது நிஜ‌ம் எது பொய் என்று பிரித்துண‌ர‌ முடியாத‌ அள‌வுக்கு கூகுல் போன் குறித்து எக்க‌ச்ச‌க்க‌மான‌ செய்திக‌ள் .


இந்நிலையில் கூகுல் போன் ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் 5 ம் தேதி அறிமுக‌மாக‌ப்போவ‌தாக‌ ராய்ட்ட‌ர்ஸ் நிறுவ‌ன‌ம் ஒரு தீப்ப‌ற‌க்கும் செய்தியை வெளியிட்டுள்ள‌து.

ஒரு செல்போன் நசேவை நிறுவ‌ன‌த்தின் கூட்டோடு நெக்ச‌ஸ் ஒன் (கூகுல் போனின் பெய‌ராம்)அறிமுக‌மாக‌லாம் என‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review