December 17, 2009

கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.
ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை.

வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.


முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.

அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும். அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.

இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும்.

மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது.

அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம்.

ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.
சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.

மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.

தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

December 16, 2009

விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்

விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது.

தொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக் குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது.

ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.


1. ஹார்ட் டிஸ்க்கின் சுழற்சி, அதன் மூலம் பைல் தேடும் நேரம் ஆகியவை சிஸ்டம் இயங்குவதில் முக்கிய இடத்தைக் கொள்கின்றன. எனவே சிதறலாகப் பதிந்த பைல்களை ஒருமுகப்படுத்தும் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளுங்கள். விண்டோஸ் இணைந்து வரும் டிபிராக் பைல் அல்லது ஸ்மார்ட் டிபிராக் (SmartDefrag) போன்ற மற்றவர்கள் தந்துள்ள புரோகிராம்களை இதற்குப் பயன்படுத்தலம.ஹார்ட் டிஸ்க் என்று பொதுவாக இல்லாமல் விண்டோஸ் பேஜ் பைல் மற்றும் ரெஜிஸ்ட்ரியைக் குறிப்பாக டிபிராக் செய்திட வேண்டும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2. தற்காலிக பைல்கள் உருவாக்கம் நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொண்டு அதன் பைல் தேடும் செயல்பாட்டினைத் தடுக்கும். எனவே டெம்பரரி பைல் போல்டர், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன் போன்ற போல்டர்கள் மற்றும் டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும். Treesize போன்ற புரோகிராம்களின் உதவி கொண்டு எந்த புரோகிராம்கள், பைல்கள் உங்கள் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளன என்று பார்த்து செயல்படவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 

3.விண்டோஸ் சிஸ்டத்தினை வேகமாக இயக்கலாம். இதற்கு ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்தலாம். இலவசமாக, ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer) என்ற புரோகிராம் இதற்கு உதவும். பொதுவாக பல ஸ்டார்ட் அப் புரோகிராம்கள், காலப் போக்கில் நமக்குத் தேவையற்றதாக இருக்கும். இவற்றை இந்த பட்டியலில் இருந்து நீக்க msconfig என்ற கட்டளையை ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 

4. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்ந்து நடைபெறும். இது நடைபெறுவதனை நிறுத்தி வைக்கலாம். அதே போல, பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் பெற்று, தேவையற்ற அலங்கார விண்டோக்கள், திரைக் காட்சிகளை நீக்கலாம். இந்த வழியைப் பின்பற்றி தேவையற்ற விண்டோஸ் சர்வீஸ், செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை நீக்கலாம்.

5. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத் துரிதப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் Bootvis என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது. அதன் தளம் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற்று இயக்கவும்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
 
6. ரெஜிஸ்ட்ரியில் பல ரெபரன்ஸ் வரிகள் தேவையற்றதாய் சில நாட்களிலேயே மாறிவிடும். இவற்றை நீக்கலாம். கவனத்துடன் இதற்கான வழிமுறைகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பெற்றுக் கையாளவும்.

7. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மெதுவாக இயங்குவதற்குக் காரணம், நாம் அறியாமலேயே இன்டர்நெட் வழியாக நம் கம்ப்யூட்டரை வந்தடையும் ஸ்பைவேர் புரோகிராம்களாகும். இவற்றை AdAware, Giant Antispyware, SUPER AntiSpyware போன்ற புரோகிராம் களில் ஏதேனும் ஒன்றின் துணை கொண்டு நீக்கலாம். இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றின் மூலமாகவும் நீக்க முடியாமல், ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 

8. சில சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவையில்லாமல், கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே பதியப்பட்டு கிடைக்கும். இவற்றை நீக்க PC Decrapifier போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
 
9. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.


10. உங்கள் மவுஸ் செட்டிங்ஸில் கவனம் செலுத்துங்கள். அதற்கான வழிகளைச் சொல்லித் தரும் தளங்கள் இணையத்தில் உள்ளன. இதனால் வேகமாக காப்பி, பேஸ்ட், ஸ்குரோல் போன்ற செயல்களை வேகமாக மேற்கொள்ளலாம்.

11. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (C Cleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
 
12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை கீழுள்ள என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
 
13. தேவைப்படுகிறதோ இல்லையோ, அதிக எண்ணிக்கையில் எழுத்து வகைகளை (Fonts) நாம் கம்ப்யூட்டரில் சேர்த்து வைக்கிறோம். விண்டோஸ் தரும் எழுத்து வகைகளைக் கூட அனைத்தும் நாம் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் இயங்கும் போது பாண்ட்ஸ் போல்டரில் உள்ள அனைத்து எழுத்து வகைகளையும் இயக்கி வைக்கிறது. எனவே இவற்றில் சிலவற்றை நீக்கி, விண்டோஸ் தொடக்கத்தில் இயக்காதபடி போட்டு வைக்கலாம்.

14. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.

15. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.

16. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

17. விஸ்டாவில் என்று ஒரு செயல்பாடு இருக்கும். இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் வீடியோக்களையும், படங்களையும் இணையத்தில் வேகமாக பிரவுஸ் செய்திட முடியும்.

18. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.

19. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறீர்களா! இதன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம் ஒன்று FasterFox என்ற பெயரில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
 
20. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.

மனிதனின் மரபணுப் பட்டியல் : இந்திய விஞ்ஞானிகள் சாதனை

ஒவ்வொரு மனிதனின் குணாதிசயம், செயற்பாடுகள், திறமை, நிறம், தோற்றம், நோய் உள்ளிட்டவற்றுக்கு அவனது மரபணுக்களே காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் மரபணுவுக்கும், அவனது தந்தையின் மரபணுவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

தந்தையின் மரபணுப் பட்டியலில் ஏதாவது ஓரிடத்தில் நோய் இருந்தால், அவரது மகனுக்கும் அந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது. மரபணுப் பட்டியல் இருந்தால், மகனுக்கு முன்கூட்டியே மருந்து கொடுத்து அந்த நோயை தடுத்து விடமுடியும்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த மரபணு பட்டியலைத் தயாரிப்பது மிகவும் கடினம். இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, கொரியா, சீனா உட்பட 14 நாடுகள் தனித்தனியாக இப்பட்டியலைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளன.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்ஸிலைச் (சி.எஸ்.ஐ.ஆர்.) சேர்ந்த மரபணு விஞ்ஞானிகள், மரபணுப் பட்டியலைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினர். 9 வார தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இத்தகவலை சி.எஸ்.ஐ.ஆர். தலைவர் சமீர் பிரம்மச்சாரி டில்லியில் தெரிவித்தார்.

இந்திய விஞ்ஞானிகளின் இச்சாதனைக்கு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பாராட்டு தெரிவித்துள்ளார். இச்சாதனை குறித்து நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பிருதிவிராஜ் சவான் அறிவித்தார். விஞ்ஞானிகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். இச்சாதனை காரணமாக மரபணுப் பட்டியல் தயாரித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

December 15, 2009

நீர்மூழ்கி மீதான ஒரு பார்வை

நீர்மூழ்கிக் கப்பல்கள் மனிதனின் கடற்பயண வரலாற்றில் இன்னொரு மைற்கல். பறவையைக் கண்டு விமானம் படைத்து, பறந்து, பாயும் மீன்களில் படகினைக் கண்டு தண்ணீரின் மேலாகப் பயணித்த மனிதனின் ஆசை அத்துடன் நின்றுவிடவில்லை.

அவன் தண்ணீருக்கு அடியாலும் பயணிக்க ஆசைப்பட்டான். ஆசை என்பதைவிட தண்ணீரின் அடியாற் பயணிக்கவேண்டிய தேவை அவனுக்கு எழுந்தது. ஆம், போர் மனிதனுக்கு அந்தத் தேவையை உருவாக்கியது.
போர்களின்போது எதிரிகளை நெருங்கிச்சென்று தாக்குவதற்கோ எதிரிகள் அறியாது பயணிப்பதற்கோ தேவையான வழிமுறைகள் பற்றிய தேடலின் விளைவே நீர்மூழ்கிக் கப்பல்கள்.

1620 ஆம் ஆண்டில் டச்சுக் கண்டுபிடிப்பாளர் ஒருவர் நீரின் அடியால் பயணிக்கவல்ல கலம் ஒன்றினை உருவாக்கியிருந்தார். நீர்மூழ்கிக் கப்பல்களின் வரலாறு இக்கலத்திலிருந்தே தொடங்குகின்றது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நீர்மூழ்கிகள் பரந்துபட்டளவில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்காலக் கடற்படைகளின் பயன்பாட்டில் நீர்மூழ்கிகள் தாக்குதல், விமானந்தாங்கிகளின் பாதுகாப்பு, ஏவுகணைக் கட்டுப்பாடு மற்றும் வேவு போன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.


கடற்கலங்களின் வடிவமைப்பே அவை நீரில் மிதப்பதற்குக் காரணமாகின்றது. அதாவது கப்பல் ஒன்று அதன் மொத்தக் கனவளவிலும் அதிகமான நீரினை இடம்பெயர்க்கும்போது அக்கப்பல் நீரில் மிதக்கின்றது. நீர்மூழ்கிகளும் நீரின் மேற்பரப்பில் இருக்கும்போது இதே தத்துவத்தின் அடிப்படையிலேயே நீரில் மிதக்கின்றன. எனவே நீர்மூழ்கிகள் நீருக்கு அடியிற் செல்ல வேண்டுமாயின், ஒன்றில் அவற்றின் நிறையினை அதிகரிக்க வேண்டும். இல்லாது போனால் அவற்றினால் இடம்பெயர்க்கப்படும் நீரின் கனவளவைக் குறைக்க வேண்டும். எனவே, நீர்மூழ்கிகளில் அவற்றின் நிறையினைக் கட்டுப்படுத்துவதற்காக, அவற்றிக் கீழ்ப்பகுதியில், புறச்சுவரின் உட்புறமாக Ballast Tanks என்றழைக்கப்படும் தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நீரினாலோ அல்லது வளியினாலோ நிரப்பப்படுவதன் மூலம் நீர்மூழ்கிகளின் நிறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

இத்தாங்கிகள் Main Ballast Tanks என்றழைக்கப்படுகின்றன. இத்தாங்கிகளில் நீரினை நிரப்புவதன் மூலம் நீர்மூழ்கியை நீருக்கடியிற் கொண்டு செல்லவோ இல்லது நீரினை வெளியேற்றி வளியினை நிரப்புவதன் மூலம் நீர்மூழ்கியை நீரின் மேற்பரப்புக்குக் கொண்டுவரவோ முடியும். பொதுவாக நீருக்குள் இருக்கும்போது இந்தத் தாங்கிகள் நீர் நிரப்பப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் இத்தாங்கியில் நிரப்பப்பட்ட நீரின் காரணமாக நீர்மூழ்கியானது நீர் மேற்பரப்பிலிருந்து குறிப்பிட்டதோர் ஆழத்திலேயே பேணப்படும். இக்குறிப்பிட்ட ஆழத்திலிருந்து மேலதிக ஆழத்தைக் கூட்டிக்குறைப்பதற்காக ஆழக் கட்டுப்பாட்டுத் தாங்கி (Depth Control Tank) என்றழைக்கப்படும் மேலுமோர் சிறிய தாங்கி பயன்படுத்தப்படுகின்றது. இத்தாங்கி உயர் அழுத்தத்தைத் தாங்கவல்லது. இத்தாங்கியின் நீர்க்கொள்ளளவைக் கட்டுப்படுத்துவதன்மூலம் ஆழத்தைக் கூட்டிக்குறைக்க முடியும். இத்தாங்கியானது நீர்மூழ்கியின் புவியீர்ப்பு மையப் பகுதியிலோ அல்லது நீர்மூழ்கியின் சமநிலையைப் பேணக்கூடியவாறு அதன் அடிப்பரப்பில் சமச்சீராகப் பரந்தோ காணப்படும்.

நீர்மூழ்கிகள் நீரினுள் செல்லும் போது, நீரில் காணப்படும் உப்பின் தன்மை, ஆழத்தின் காரணமாக நீரினால் ஏற்படுத்தப்படும் அழுத்தம் போன்றவற்றினால் இத்தாங்கிகளின் அழுத்தம் உயர்கின்றது. இவ்வுயர் அழுத்தத்தைத் தாங்கவல்லதாக நீர்மூழ்கிகளின் இத்தாங்கிகள் உருக்கிரும்பினாலோ அல்லது ரைற்றானியம் உலோகத்தாலோ ஆக்கப்படுகின்றன.

நீர்மூழ்கியின் சமநிலைக் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு அதன் சுழலியின் அருகில் கிடையாகப் பொருத்தப்பட்டிருக்கும் சமநிலைக் கட்டுப்பாட்டுச் செட்டையும் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோன்று நீர்மூழ்கியின் புவியீர்ப்பு மையப்புள்ளியை அண்மித்துக் கிடையாகப் பொருத்தப்பட்டிருக்கும் பிரதான கட்டுப்பாட்டுச் செட்டைகள் நீர்மூழ்கியின் ஆழக்கட்டுப்பாட்டுச் செயற்பாட்டில் பங்காற்றுகின்றன. அவசர நேரத்தில் நீர்மூழ்கியை நீர்மேற்பரப்புக்குக் கொண்டுவருவதற்கு நீர்மூழ்கியிலிருக்கும் இரண்டுவகையான ஆழ மற்றும் சமநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதன்போது நீர்மூழ்கி மிக வேகமாக நீர் மேற்பரப்புக்குக் கொண்டுவரப்படுகின்றது.

தற்போது பயன்பாட்டில் காணப்படும் அநேகமாக அனைத்து நீர்மூழ்கிகளும் அணு சக்தியினால் இயங்குபவையாகவே காணப்படுகின்றன. ஆனால், ஆரம்பத்தில் நீர்மூழ்கிகள் மனிதவலுவால் இயக்கப்படுபவையாகவே காணப்பட்டன. 1863 இல் முதலாவது இயந்திரவலுவால் இயக்கப்படும் நீர்மூழ்கி பிரான்சில் உருவாக்கப்பட்டது. இது அழுத்தப்பட்ட வளியின்மூலம் வலுவூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து 1864 இல் முதலாவது நீராவி இயந்திரத்தால் இயங்கும் நீர்மூழ்கி ஸ்பெயினில் உருவாக்கப்பட்டது. நீர்மூழ்கியில் அணுசக்திப் பயன்பாடு அறிமுகப்படுத்தப்படும்வரை 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான நீர்மூழ்கிகள் நீருக்கடியில் பயணிக்கும்போது மின்கலத்தின் மூலமும் நீர்மேற்பரப்பில் பயணிக்கும்போது டீசல் இயந்திரத்தின் மூலமும் இயங்கிக் கொண்டிருந்தன. இவ்வாறு இயந்திரத்தின்மூலம் இயங்கும்போது அவற்றின் மின்கலங்கள் மீள்மின்னேற்றம் செய்யப்பட்டன.

இரண்டாம் உலகப்போர்க் காலப்பகுதியில் ஜேர்மனியப் பொறியாளர்கள் ஐதரசன் எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும் நீர்மூழ்கியை உருவாக்கினர். போரின் பின்னரான காலப்பகுதியில் ரஸ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் நீர்மூழ்கிக்கான ஐதரசன் எரிபொருள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டபோதிலும் அதன் முடிவு திருப்திகரமாக அமையவில்லை.

சாதாரணமாக ஓர் அணுசக்தி நீர்மூழ்கியில் 80 இற்கும் அதிகமான பணியாளர்களும் சாதாரண நீர்மூழ்கிகளில் அரைவாசியளவு பணியாளர்களும் பணியாற்றுவர். 1985 இல் நோர்வஜியக் கடற்படை தமது நீர்மூழ்கிகளில் முதலாவதாகப் பெண்களைப் பணிக்கு அமர்த்தியது. அதைத்தொடர்ந்து டென்மார்க், சுவீடன், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் தமது கடற்படை நீர்மூழ்கிகளில் பெண்களைப் பணிக்கு அமர்த்தியது.

கணினியும் கண்ணும்

அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.

கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது.


அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.

கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.

பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.

கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.
கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review