December 09, 2009

மனித உடற்பாகங்களை இயங்கும் தண்ணீர்

உலகத்தி்ன் மொத்த நிலப்பரப்பில் 75 சதவிகிதம் தண்ணீராக இருப்பது போல், மனித உடம்பிலும் உள்ளது வியப்பினைத் தருகின்றது. ஒவ்வொருவரது உடலமைப்பிற்குத் தகுந்தவாறு சிறிதளவு வேறுபாடுகள் இருக்கும்.

இரத்தத்தில் 90 சதவிகிதமும், தசைகளில் 60 சதவிகிதமும், எலும்புகளில் 22 சதவிகிதமும் நீராக வுள்ளது. சிறுநீராக 1500 மில்லியும்,வேர்வை-வியர்வையாக-400மில்லியும்,சுவாசத்தின் மூலமாக 400 மில்லியும், மலத்தின் மூலம் 100 மில்லியும் வெளியேற்றப் படுகின்றது.


உலகில், ஏரி,குளம்,கிணறு்,ஆறு,கடல் என நீர்ப் பகுதிகள் இருப்பது போன்று, உடலிலும்வயிறு,மார்பு,மூளை முதலிய இடங்களிலும் நீர்ப்பகுதிகள் உள்ளன.
வயிற்றுவலிக்கு வயிற்றில் நீ்ரினளவு குறைவதே காரணமாகின்றது. சளி,இருமல் தொல்லைகளுக்கு மார்பில் நீர் குறைவதே காரணம். மயக்கம் ஏற்பட மூளைப்பகுதியில் நீர் குறைவதே காரணம்.
தண்ணீர் தாரளமாகக் குடித்த நாட்களில் அதிகச் சுறுசுறுப்பும்,உற்சாகமும், உழைக்கும் திறனும் நன்றாக இருப்பதை அனுபவத்தில் காணமுடியும்.
அண்மையில், எனக்குத் தெரிந்த ஓர் பெண்நண்பர், மூட்டுவலியென்று டாக்டரிடம் செல்ல, அவர் மூட்டுப் பகுதியில் நீர் அதிகம் உள்ளதென்று ,அதை எடுத்துவிட, மூட்டுவலி அதிகமாகித் தற்பொழுது ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
அதனால், தெரிந்திருந்தாலும், சில நல்லனவற்றைக் கடைப்பிடிக்காதலால் அனுபவிக்கும் உடல் கோளாறுகளுக்கு குடிக்கக்கூடிய தண்ணீரின் அளவு குறைந்து வி்ட்டதுதான் காரணம் என்பதை உணர்ந்ததன் காரணமாகத் திரட்டப் பட்டதே இந்தத் தகவல்கள், என்பதைத் தெரிவிக்கின்றேன்.
சுத்தமான தண்ணீரினைத் தாரளமாகப் பருகுவோம். உடல் நலம் பேணுவோம். மருத்துவச் செலவைக் குறைப்போம்.

December 08, 2009

புளுடூத் 3.0

புளுடூத் என்பது இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒரு மக்கள் தொழில் நுட்பமாக மாறிவிட்டது. குறிப்பாக மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் வயர்லெஸ் இணைப்பில் தங்களிடம் உள்ள படங்கள் மற்றும் பாடல்களை அடுத்த போனுக்கு மாற்றிக் கொள்ள இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
போன்களை வாங்கும் போதே இந்த தொழில் நுட்பம் உள்ளதா என்று கேட்டு வாங்குகின்றனர். இந்த தொழில் நுட்பமே மொபைல் போன்களில் வைரஸ் அனுப்புவதற்கும் வழி வகுக்கிறது என்பது இன்னொரு தீங்கான விஷயம் ஆகும்.
தற்போது இந்த தொழில் நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய வகை வெளியாக உள்ளது. தற்போது இருக்கும் தரப்படுத்தப்பட்ட புளுடூத் தொழில் நுட்பம்Bluetooth 2.0 ஆகும். அடுத்து வர இருப்பது Bluetooth 3.0. இதன் சிறப்பு இது பைல்களைப் பரிமாறும் வேகமாகத்தான் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

மிகப் பெரிய பைல்களைக் கூட சில நொடிகளில் மாற்றிக் கொள்ளும் வகையில் இந்த தொழில் நுட்பம் செயல்படும். இதில் பயன்படுத்தப்படும் Generic Alternate MAC/PHY (AMP)தொழில் நுட்பத்தின் மூலம் வை–பி வேகத்தில் இதனைச் செயல்படுத்தும்.
இதன் மூலம் வை–பி பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரு சாதனங்களில் அதிவேக பைல் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம். வை–பி வசதி ஒரு சாதனத்தில் மட்டும் இருந்தால் புளுடூத் அதனை ஈடு செய்து பைல் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது.

December 06, 2009

எல்.ஜி.தரும் ஐ.டி.900 கிறிஸ்டல்

ஒளி ஊடுருவும் தன்மையுடன் கூடிய அழகான கீ பேட் கொண்டு தன் ஜி.டி. கிறிஸ்டல் மொபைல் போனை எல்.ஜி. நிறுவனம் வடிவமைத்துள்ளது. அண்மையில் இது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதனுடைய கிறிஸ்டல் டச் பேட் முதலில் எண் எழுத்துக்கள் கொண்ட கீ பேட் போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் அது போனைக் கண்ட்ரோல் செய்யக் கூடிய டச் பேட் போல விரிகிறது. லேப் டாப் கம்ப்யூட்டரில் உள்ள டச் பேட் போல செயல்படுகிறது.
ஹேண்ட்ரைட்டிங் பேட் போல இயங்குகிறது. இதன் மூலம் பல வகைகளில் டச் கமாண்ட் கொடுத்து இயக்கலாம். கூடுதலாக சைகை வழி கட்டளை (Gesture Command) 8 எம்பி திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா இணைக்கப் பட்டுள்ளது.
எம்பி3 பிளேயர் தரப்பட்டுள்ளது. வை–பி இணைப்பு, 3ஜி வசதி, 3 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன், டிவிடி ரெசல்யூசனில் வீடியோ ரெகார்டிங், 1.5 ஜிபி மெமரி, 16 ஜிபி வரை மெமரி யை நீட்டிக்கும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.
சொகுசான வசதியைத் தரக்கூடிய ஒரு போனைத் தரத் திட்டமிட்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டலில் அழகான ஸ்லைடிங் கீபேட் தான் இதன் சிறப்பம்சம் என இந்நிறுவன விற்பனைப் பிரிவு தலைவர் இதனை அறிமுகப்படுத்திய விழாவில் குறிப்பிட்டார்.
நடப்பு ஆண்டின் சிறந்த வடிவமைப்பிற்கான விருதை இந்த போன் பெறும் என்றும் இவர் கூறினார். குரோம் மற்றும் டைட்டன் வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ. 26,000.

7550 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இராட்சத 'எருது' மண்டையோடு கண்டுபிடிப்பு!

7500 வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாக கருதப்படும் இராட்சத 'எருது'னுடைய மண்டையோடும் பாக எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சாதாரன மனிதனின் உயரத்தை விட (6 அடிக்கு மேல்) பெரிதாக தோற்றமளிக்கும் எருது வகையை சேர்ந்த இவ்விலங்குகள், பிரித்தானியா, மற்றும் சுற்றுப்புற சூழலில் 7500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகவும், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர்
அழிந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதி திருத்தும் இயந்திர ஓட்டுனராக கடமைபுரியும் ரதபோர்ட் என்பவர், பிரித்தானியாவின் நோர்த் அம்பர்லேண்ட் பிரதேசத்தின் ஆற்றங்கரையோரமாக மண்ணை தோண்டிக்கொண்டிருக்கும் போது, கற்குழிகளில் இருந்து இம் மண்டையோட்டினையும் ஏனனய எலும்புகளையும் கண்டுபிடித்ததுடன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல் அளித்துள்ளார்.
இவ் எலும்புக்கூடுகள் நல்ல நிலைமையில், இவ்வளவு நாள் இருந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக புருடோவினை மையமாக கொண்டியங்கும், சுற்றுப்புற சூழல் ஆராய்சி நிலையத்தின், இயக்குனர் ரியான் மோலி தெரிவித்துள்ளார்.
'ஔரோச்' என இவ்விலங்குகள் அழைக்கப்படுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளின் ரேடியோ காபன் வெளிப்பாடுகளினை ஆராய்ந்ததன் மூலம் 5670-5520 BC காலப்பகுதியில் இவை வாழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்விலங்குகள் அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களினால் இரவு நேர உணவுக்காக வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்சமயம், நியூகாஸ்ட்டில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் நூதனசாலைக்கு இவ் ஔரோச்களின் மண்டயோடுகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
ஏற்கனவே பிரித்தானியாவின் நோர்த் அம்பேர்லேண்ட் பிரதேசத்தில் இரு இராட்சத சிவப்பு நிறக்கரடிகளின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையினால், ஔரோச்களின் புதிய கண்டுபிடிப்புக்கள், அக்காலத்தில் பூமியில் வாழ்ந்த இராட்சத விலங்குகள் பற்றிய ஆய்வில் புதிய திருப்பத்தினை கொண்டு வந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

December 05, 2009

விரைவில் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை

விரும்பாத கர்ப்பத்தைத் தவிர்க்க பெண்கள் இனி மாத்திரை, பப்பாளியைத் தேடத் தேவையிருக்காது. ஏனெனில், ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை விரைவில் அறிமுகமாக உள்ளது.

இதுபற்றி எடின்பெர்க்கில் உள்ள குயின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த இனப்பெருக்கவியல் மைய ஆராய்ச்சியாளர் மைக்கேல் வெல்ஷ் கூறியதாவது:ஆணின் உடலில் சுரக்கும் ஆன்ட்ரோஜன்தான் உயிரணுக்கள் உருவாக முக்கிய காரணம். அதை தற்காலிகமாக குறைக்கும் வழியை கண்டுபிடித்தால், பெண்ணின் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கலாம் என்பதால் அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினோம்.


எலிகளை பயன்படுத்தி நடந்த ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது மனிதனுக்கும் பொருந்தும் என்று நம்பலாம். எலிகளில் உயிரணுக்களை உருவாக்கும் ஜீன் ஒன்று மருந்து மூலம் நீக்கப்பட்டது. அந்த ஜீன் மறைந்ததும், உயிரணு உருவாவது குறைந்தது தெரிய வந்தது. இந்த மருந்து செலுத்தப்படாத எலிகளின் விதைப்பையில் உயிரணுக்கள் அதிகளவில் உற்பத்தியானது தெரிய வந்தது. எனவே, ஆன்ட்ரோஜன் சுரக்க காரணமான ஜீனை தற்காலிகமாக மறையச் செய்யும் மருந்தை உருவாக்குவதில் வெற்றி கிடைத்துள்ளது. அதை மாத்திரை வடிவில் ஆண்கள் பயன்படுத்தினால், உயிரணு உற்பத்தி குறைந்து தற்காலிக மலட்டுத்தன்மை ஏற்படும்.

ரத்தத்தில் மாத்திரையின் வீரியம் இல்லாமல் போனதும் மீண்டும் அந்த ஜீன் வெளிப்பட்டு ஆன்ட்ரோஜனை அதிகரித்து விடும். பிறகு, உயிரணுக்கள் வழக்கம்போல உற்பத்தியாகி விடும். இந்த மாத்திரை பயன்பாட்டுக்கு வந்தால், கருத்தடை மாத்திரையில் இருந்து பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கக்கூடும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review