December 03, 2009

'சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள்

இந்தியாவில் இருந்து நிலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 'சந்திரயான் -1' செயற்கை கோள் மூலமாக நிலவில் உள்ள கனிம வளங்கள் பற்றிய தகவல் கிடைத்து இருப்பதாக விஞ்ஞானி அண்ணாதுரை தெரிவித்தார்.

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக, இந்தியாவில் இருந்து முதன் முறையாக 'சந்திரயான்-1' என்ற செயற்கை கோள் அனுப்பி வைக்கப்பட்டது. நிலாவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கை கோளில் 11 கருவிகள் இருந்தன. அவை அனைத்தும் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு ஏராளமான தகவல்களை அளித்தன.


திட்டமிட்ட இரண்டு ஆண்டு காலத்துக்கு முன்னதாகவே 'சந்திரயான் -1' செயலிழந்தது. எனினும், அது அனுப்பிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், நிலவை ஆராய்ச்சி செய்யும் 'சந்திரயான் -1' திட்டத்தின் இயக்குனர் விஞ்ஞானி அண்ணாதுரை, நேற்று பெங்களூரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சந்திராயானில் இருந்த 11 கருவிகளின் மூலமாக 'ஏழு தேரா பைட்' தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. மிகப்பெரிய அளவில் கிடைத்துள்ள அந்த விபரங்களை பகுப்பாய்வு செய்து முடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும். தற்போது, நிலவில் உள்ள கனிம வளங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர்.

அந்த ஆராய்ச்சி முடிந்ததும் அறிவியல் முடிவுகள் வெளியிடப்படும். அதை சர்வதேச அளவிலான விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்த பிறகு அறிவியல் குறித்த சஞ்சிகைகளில் அவை பிரசுரிக்கப்படும். ஒட்டு மொத்த நிலவிலும் உள்ள கனிம வளங்கள் குறித்து ஒரு வரைபடம் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் தண்ணீர் உட்பட பல்வேறு கனிமங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அது பற்றி முழு தகவலையும் ஆய்வு செய்த பிறகு புதிய தகவல்களை இந்த உலகுக்கு தெரிவிப்போம்.

நிலவின் மேற்புறத்தை முப்பரிமான வடிவத்தில் சந்திரயான் படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. நிலவை சுற்றிலும் நிலவும் சூரிய கதிரியக்கம் மற்றும் அவற்றால் நிலவில் ஏற்படும் விளைவுகள் போன்ற தகவல்களும் கிடைத்துள்ளன. அவற்றையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். சந்திரயானில் இருந்த ஒவ்வொரு கருவிகளும் அனுப்பிய தகவல்களை தலா 20 முதல் 30 விஞ்ஞானிகளை கொண்ட 11 குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

முற்றிலுமாக பகுப்பாய்வு செய்த பிறகு, அந்த முடிவுகளை விரைவில் அறிவிப்போம். மேலும், அது குறித்த தகவல்களை முன்னதாகவே தெரிவிப்பதற்காக, நாடு முழுவதும் ஆங்காங்கே கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி கூடங்களையும் `இஸ்ரோ` நடத்தி வருகிறது. அதன் மூலமாக, `இஸ்ரோ`வில் இல்லாத விஞ்ஞானிகளும் சந்திரயான் அளித்த தகவல்களை பெற்று பலனடைய முடியும்.

அடுத்த கட்டமாக, வருகிற 2013-ம் ஆண்டில் 'சந்திரயான் -2' விண்கலம் விண்ணுக்கு செல்கிறது. 'சந்திரயான் -2' திட்டத்துக்கான யுக்திகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டன. விண்கலத்தின் அமைப்பு குறித்த வரைபடம் தயாராகி விட்டது. அடுத்த ஆண்டில் (2010) அந்த விண்கலம் தயாரிக்கப்படும்.

ரூ.424 கோடி திட்ட செலவில் உருவாகியுள்ள 'சந்திரயான் -2' திட்டத்தின் மூலமாக அனுப்பப்படும் விண்கலத்தில் இரண்டு 'ரோவர்கள்' இடம்பெறும். அவை நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும். ரஷ்யா உதவியோடு அந்த 'ரோவர்கள்' தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார்.

December 02, 2009

யாஹுவை ஜிமெயில் முந்தியது

இந்தியாவில் இமெயில் பயன்பாட்டில் யாஹூவை பின்னுக்குத் தள்ளி ஜிமெயில் முன்னுக்கு வந்துள்ளது. இதுவரை மிகவும் விசுவாசத்துடன் யாஹூ மெயிலைப் பயன்படுத்தி வந்த பலர் ஜிமெயிலுக்குத் தாவி உள்ளனர். வைஸி சென்ஸ்(ViziSense) என்ற ஆன்லைன் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இப்போது அதிகம் பயன் படுத்தப்படும் இமெயில் கிளையண்ட்டாக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு கோடியே 80 லட்சம் பேர்களுக்கும் மேலாக ஜிமெயிலை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற மாதம் வரை யாஹூ தான் முதல் இடத்தில் இருந்து வந்தது.


யாஹூ மெயிலின் நேயர்கள் எண்ணிக்கை இப்போது ஒரு கோடியே 68 லட்சமாகும். சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் இதன் வாடிக்கையாளர்கள் 8% குறையத் தொடங்கினர். அதே நேரத்தில் ஜிமெயில் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 3% அதிகரிக்கத் தொடங்கியது. அக்டோபரின் முதல் வாரத்திலேயே ஜிமெயில் முதல் இடத்திற்கு வந்தது. அதே போல விண்டோஸ் லைவ் மெயில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சி 8% ஆகும்.

ரீடிப் மெயில் 62 லட்சத்து 50 ஆயிரம் பேர்களுடன் இயங்கி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனாலும் உலக அளவில் யாஹூ மெயில் இடத்தை ஜிமெயில் பிடிக்க இன்னும் சில மாதங்களாகலாம். ஏனென்றால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் லைவ் மெயில் இரண்டாவது இடத்தில் உள்ளது.


அமெரிக்காவில் ஜிமெயில் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக அங்குள்ள ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. எனவே யாஹூவும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் லைவ் மெயிலும் ஏதேனும் அதிரடியான மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டு வரவில்லை என்றால், நிச்சயம் உலக அளவில் ஜிமெயில் முதல் இடத்தைப் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். இதனால் தான் அக்டோபர் தொடக்கத்தில் இந்தியாவின் பிரபலமான ஆங்கில நாளிதழில் யாஹூ ஒரு முழுப் பக்க விளம்பரத்தினை க் கொடுத்தது. தன்னிடம் விசுவாசமாக உள்ள மெயில் பயனாளர்களைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள யாஹு எடுத்த முயற்சியே இது என்று இந்தத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் எண்ணுகின்றனர்.

சோனியின் புதிய டிவிடி ரைட்டர்

டிவிடி ரைட்டர் இன்னும் மக்களிடையே நம்பிக்கை மிக்க சாதனமாக வலம் வருகிறது. புளு ரே ரைட்டர், பிளாஷ் டிரைவ் என எத்தனை வந்தாலும் டிவிடி ரைட்டர் இன்னும் தேவையாய் தான் உள்ளது.

எனவே தான் சோனி நிறுவனம் கூட இன்னும் புதிது புதிதாய் டிவிடி ரைட்டர்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் AD7240S என்ற பெயரில் புதிய டிவிடி ரைட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல் முதலாக 24 எக்ஸ் (24x DVDRW) வேகத்தில் டிவிடியில் எழுதும் ரைட்டர் இதுதான் என சோனி அறிவித்துள்ளது.

இதில் ஆட்டோ ஸ்ட்ரேட்டஜி தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு டிவிடியில் தகவல்களை எழுதுகையில் இந்த டிரைவ் மீடியாவில் உள்ள தகவல்களைச் சற்று முன் கூட்டியே படித்து வைக்கிறது.


இதனால் எழுதும் ஹெட் அதற்கேற்ற வகையில் முழுவதும் பயன்படுத்தப்படும் வகையில் அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது. எனவே இதுதான் மிக வேகமாகவும் புதிய முறையிலும் செயல்படும் டிவிடி ரைட்டர் என சோனி நிர்வாகி அறிவித்துள்ளார்.

இதில் சீரியல் ATA இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இது டிவிடிக்களை 24 எக்ஸ் வேகத்திலும் சிடிக்களை 48 எக்ஸ் வேகத்திலும் எழுதுகிறது. டபுள் லேயர் டிவிடி எனில் 12 எக்ஸ் வேகத்தில் எழுதுகிறது.

December 01, 2009

எயிட்ஸ் சிகிச்சையில் புதிய பரிந்துரை

தற்போதைக்கு உலகில் 40 லட்சம் மக்கள் எயிட்ஸ் வைரசுக்கு எதிரான மருந்துகளை பெறுகிறார்கள். ஆனால், இன்னும் ஒரு 50 லட்சம் பேரைப் பொறுத்தவரை அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுகின்ற போதிலும், இந்த மருந்து அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

எச்.ஐ.விக்கு எப்போது சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்பது குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை எடுத்துக்கொண்டால், மேலும் 30 தொடக்கம் 50 லட்சம் பேர் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இணைகிறார்கள் என்று அது பொருள் தருகிறது.

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்கள் அவர்களது நோய் எதிர்ப்பு தொகுதி, பலவீனமடைந்து அதற்கான சமிக்ஞைகள் தென்படத்தொடங்குவதற்கு முன்னதாக மருந்துகளைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் விரும்புகிறது.

புதிதாக பரிந்துரைக்கப்பட்ட மட்டத்தில் சிகிச்சையை ஆரம்பித்தால், இந்த நோயின் எதிர்ப்பில் இருந்து தாக்குப் பிடிப்பவர்களின் அளவு 70 வீதத்தால் அதிகரிக்கும் என்று மருத்துவ சஞ்சிகையான லான்சட் காண்பிக்கிறது.

இது சுகாதார பராமரிப்பு துறையின் செலவையும் கணிசமாக அதிகரிக்கச் செய்யும்.

உலகில் எயிட்ஸ் மிகவும் மோசமாக தொற்றியுள்ள நாடுகளில் ஒன்றான தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரை, அங்கு தற்போது சிகிச்சை தேவைப்படுபவர்களில் அரைவாசிக்கும் குறைவானவர்களே அதனைப் பெறுகிறார்கள்.

இந்த புதிய பரிந்துரைகளின் மூலம் மேலும் 10 லட்சம் தென்னாபிரிக்கர்கள் சிகிச்சைக்காக காத்திருப்போரின் பட்டியலில் இணைவார்கள் என்று சிகிச்சை கோரி செயற்படும் தன்னார்வக்குழுவைச் சேர்ந்த கத்தரின் தொம்லின்சன்.

உலக எயிட்ஸ் தினம்

இன்றய நவீன உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் ஒரு உயிர்கொல்லி நோய்தான் இந்த எயிட்ஸ். இன்று நவீன மனிதன் எத்தனையோ கண்டுபிடிப்புக்களை செய்தாலும் இந்த உயிர்கொல்லி நோய்க்கான மருந்து ஒன்றைகண்டுபிடிக்கமடியாமல் இருப்பது ஒரு துரதிஸ்ரவசமான சம்பவம்தான். இதை யாராலும் மறுக்க முடியாது. முதலில் நாம் ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளவேண்டும் எயிட்ஸ்(AIDS-Acquired Immune Deficiency Syndrome) என்பது பல நோய்கள் ஒன்றாக சேர்ந்த நிலையே தவிர தனி ஒரு நோய்யல்ல. இது மனிதனின் நிர்ப்பீடண தொகுதியை தாக்கி செயலிழக்க வைத்துவிடும்.

முதலில் இந்த உயிர்கொல்லி நோய் எப்படி உருவாகியது எனப்பார்ததால் ஆபிரிக்காவில் வாழ்ந்த பழங்குடியினருக்கு குரங்கிலிருந்து பரவியதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது ஆபிரிக்காவில் வாழ்ந்த பழங்குடியினர் குரங்குகளின் இரத்தத்தை பருகும் பழக்கம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக குரங்கிலிருக்கக்கூடிய S.I.V(Simion Immunodeficiency Virus) எனும் நோய்க்கிருமி இரத்தத்தின் வழியாக மனிதனின் உடலுக்குள் புகுந்து H.I.V
(Human Immunodeficiency Virus) ஆக தோற்றம் பெற்றதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இந்தக் வைரசுக்கு (Human Immunodeficiency Virus) என்று பெயர்வரக் காரணம் இவை மனிதனில் மட்டுமே உயிர்வாழக்கூடியவை என்றபடியால் ஆகும். HIV கிருமியானது மனித உடலுக்கு வெளியே 2-3 வினாடிகள் மட்டுமே உயிர்வாழக்கூடியது. அது தவிர மனிதனின் கண்ணீரைத் தவிர ஏனைய எல்லா திராவகங்களிலும் இது உயிர்வாழும். இந்த வைரஸ் ஆனது மனிதனில் காணப்படும் ஏனைய வைரஸ்களைவிடவும் மிகவும் வித்தியாசமானது. இவை மனிதனின் உடலிற்குள் தனது உருவத்தை மாற்றி புகுந்தவுடன் மனிதனில் காணப்படும் நோய்யெதிர்ப்பு கலங்களை அல்லது CD4/T4 கலங்களை ஒவ்வொன்றாக அழிக்கும். அதன்பின்னரே தனது வேலையை காட்டத்தொடங்கும். இவ்வாறு நடைபெறுவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும். இதனால் பரிசோதைனைகளால் மாத்திரமன்றி உடனடியாக இதை தெரிந்துகொள்ள முடியாது. கண்டுபிடிக்க பெரும்பாலும் கிட்டத்தட்ட 3 வாரங்கள் தொடக்கம் 3 மாதங்கள் வரையும்கூட ஆகலாம். ஒரு மனிதனுக்குள் HIV கிருமி நுளைந்து AIDS நிலையை அடைய ஏறத்தாள 8-15 வருடங்கள் வரையும் செல்லலாம். 


உலக எயிட்ஸ் தினம்

 
HIV மனித உடலில் காணப்படும் இடங்கள்

1. குருதி
2. யோனித்திரவகம், விந்துதிரவகம், விந்தணு
3. தாய்ப்பால்
4. எச்சில்
5. சிறுநீர்


மேலேயுள்ளவற்றில் எச்சில், மற்றும் சிறுநீரில் HIV காணப்படும் செறிவு மிகக்குறைவு. உதாரணமாக எச்சில் மூலம் ஒருவருக்ககு HIV பரவவேண்டும் என்றால் ஏறத்தாள 2 கலன்கள் எச்சில் தேவை.


HIV பரவும் முறை

பிரதானமாக மூன்று முறைகளில் HIV மனித உடலுக்குள் பரவுகிறது

1. HIV கிருமியுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு

2. HIV பெற்றோரிடமிருந்து பிள்ளைக்கு

3. HIV கிருமியுள்ள குருதியின்மூலம்



இலங்கையில் HIVயானது மேற்கூறிய மூன்று முறைகளிலும் 96%,3%,1% என்றவகையில் பரவுகின்றது.

HIV பரவாமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள்

1. பாலியல் தொடர்பே இல்லாது இருத்தல்/ செய்யாமல் விடுதல்

1. ஒருவனுக்கு ஒருத்தியென்று உண்மையாக இருத்தல்

4. உடலுறவின்போது பாதுகாப்பான வழிமுறைகளை கடைப்பிடித்தல்


இலங்கையில் இதுவரையிலும் பதிவின்படி 1024 பேர் HIV தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மேலும் 5000ம் பேருக்கு தொற்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

உலகைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு சுமார் 15000 பேர் HIV தொற்றுக்குள்ளாகிறார்கள். இதைவிட நாளொன்றுக்கு சுமார் 8000 பேர் HIV யால் மரணிக்கிறார்கள்.சுமார் 60மில்லியன் பேர் இதுவரையிலும் HIV யால் பலியாகிவிட்டார்கள்.


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review